பரசுராமேஷ்வரர் கோயில்

ஆள்கூறுகள்: 20°14′35.27″N 85°50′20.57″E / 20.2431306°N 85.8390472°E / 20.2431306; 85.8390472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசுராமேசுவரர் கோவில்
பரசுராமேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
அமைவு:புவனேசுவரம்
ஆள்கூறுகள்:20°14′35.27″N 85°50′20.57″E / 20.2431306°N 85.8390472°E / 20.2431306; 85.8390472
கோயில் தகவல்கள்

பரசுராமேசுவரர் கோவில் (Parashurameshvara Temple) இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் அமைந்துள்ளது. கிபி 7 - 8ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள், சிவபெருமானுக்காக அர்பணித்த கோவிலாகும். இக்கோவில் இந்துக் கோயில் கட்டிடக்கலையில், கிபி 650ல் மணற்கற்களால் கட்டப்பட்டதாகும். [1] [2][3]

பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால், இக்கோவிலுக்கு பரசுராமேசுவரர் கோவில் எனப்பெயராயிற்று. இக்கோவிலை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நிர்வகித்து பராமரிக்கிறது. [4][5]

கோயில் அமைப்பு & சிற்பங்கள்[தொகு]

40.25 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரங்கள், பல விமானங்களுடன் கூடியது. இக்கோவிலின் கருவறையின் எதிரில் பெரிய முகப்பு மண்டபம் அமைந்துள்ளது. கோவில் கோபுரத்தில் சாக்த சமயத் தெய்வங்களான பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சிற்பங்கள் உள்ளது. [2][6]

கோவிலில் சிவலிங்கம்

கிபி 11-12ம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர்களின் படையினரால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. [7] 1903ல் இக்கோவில் மறுசீரமைத்துக் கட்டப்பட்டது. [6][8]

கோவில் கோபுரத்தில் ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம்

இக்கோவிலில் மகிசாசூரனை வதைத்த ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் பிள்ளையார் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களுக்கு இடையே சப்தகன்னியர் சிற்பங்கள் உள்ளது. கோவில் சுவர்களில் எட்டு கைகள் கொண்ட நாட்டியமாடும் அர்த்தநாரீஸ்வரர், கங்கா தேவி, யமன் மற்றும் யாமியின் சிற்பங்கள் உள்ளது.[2][6] மேலும் கோவிலின் தெற்குச் சுவரில் விஷ்ணு, இந்திரன், சூரியன் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. [6][9]

மேலும் கையிலை மலையை தூக்கிய இராவணனுக்கு அருளும் சிவபெருமான் - பார்வதி சிற்பம்,[10]தாண்டவமாடும் நடராசர் சிற்பங்களும் உள்ளது. [11] [12]

கோவில் மண்டபத் தூண்களில் பூக்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. கோவில் கோபுரத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகளின் சிற்பங்கள் உள்ளது.

பரசுராமேசுவரர் கோவில் சிற்பங்கள்

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Sturgis, Russell (1901). A dictionary of architecture and building: biographical, historical, and descriptive, Volume 2. The Macmillan Company. பக். 473–474. https://books.google.com/books?id=dAgFAAAAYAAJ&pg=PA473. 
 2. 2.0 2.1 2.2 Pradhan, Dr. Baman Charan (September 2009). "Saktism at Bhubaneswar Through Ages" (PDF). Orissa Review (Government of Orissa e-Magazine): 10–102. Archived from the original on 9 March 2014. https://web.archive.org/web/20140309214746/http://orissa.gov.in/e-magazine/Orissareview/2009/September/engpdf/101-105.pdf. பார்த்த நாள்: 23 March 2013. 
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Ghosh23 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 175. https://archive.org/details/indiathroughages00mada. 
 5. "List of monuments in Orissa". Archaeological Survey of India. 24 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 6.2 6.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; tourism என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. Allen, Margaret Prosser (1991). Ornament in Indian Architecture. Associated University Press Inc.. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87413-399-8. https://books.google.com/books?id=vyXxEX5PQH8C&pg=PA205. 
 8. O'Malley 1908, p. 187
 9. Davidson, Linda Kay; Gitlitz, David Martin (2002). Pilgrimage: From the Ganges to Graceland: An Encyclopedia, Volume 1. ABC-CLIO, Inc.. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57607-004-2. https://books.google.com/books?id=YVYkrNhPMQkC&pg=PA62. 
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Murray என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 11. Sinha, Aakriti (2006). Let's Know Dances of India. Star Publications. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7650-097-5. https://books.google.com/books?id=h67wZpGPUi0C&pg=PT15&dq=parasurameswara. 
 12. Educational Britannica Educational (2010). The Culture of India. The Rosen Publishing Group. பக். 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61530-203-1. https://books.google.com/books?id=LiqloV4JnNUC&pg=PA306. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parsurameswar Temple
என்பதின் ஊடகங்கள் உள்ளன.