புஷ்பகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


புஷ்பகிரி
Pushpagiri (Langudi Hill) - Jajpur - Odisha - Buddhist site - Rock-Cut Stupas - 2.JPG
புஷ்பகிரி விகாரையின் முக்கியத் தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்India
புவியியல் ஆள்கூறுகள்20°38′30″N 86°16′09″E / 20.6416°N 86.2692°E / 20.6416; 86.2692ஆள்கூறுகள்: 20°38′30″N 86°16′09″E / 20.6416°N 86.2692°E / 20.6416; 86.2692
சமயம்பௌத்தம்
மாநிலம்ஒடிசா
செயற்பாட்டு நிலைபாதுகாக்கப்பட்டது.


புஷ்பகிரி (Pushpagiri) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் லங்குடி மலையில் அமைந்த பண்டைய பௌத்த தொல்லியல் வளாகம் ஆகும். இவ்வளாகம் சிதிலமடைந்த தூபிகளும், விகாரைகளும், குடைவரைச் சிற்பங்களும் கொண்டது. இது அசோகரின் தூண்கள் கொண்ட தொல்லியல் களமாகும்.

பௌத்தத் தலங்களை காண, இந்தியாவிற்கு வருகை தந்த சீன நாட்டின் பௌத்த அறிஞர் சுவான்சாங் (602 - 664), தனது பயணக் குறிப்பில் புஷ்பகிரி மகாவிகாரையைக் குறித்துள்ளார்.

புஷ்பகிரி இப்பௌத்தத் தலம், ஒடிசாவின் யாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லலித்கிரி, இரத்தினகிரி உதயகிரி-கந்தகிரி போன்று முன்பு செழிப்புடன் விளங்கியதாகும்.

லங்குடி மலையின் தொல்லியல் வளாகத்தில் 1996 - 2006களில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த கல்வெட்டு அடிப்படையில், புஷ்பகிரி பௌத்த தொல்லியல் வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்பௌத்த வளாகம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி11ம் நூற்றாண்டு வரை செழிப்புடன் விளங்கியதாகும். [1]

1996 - 2006ல் லாங்குடி மலையில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் அகழாய்வு செய்த போது, பிராமி எழத்துக்கள் கொண்ட கல்வெட்டுக் குறிப்பில் இப்பகுதியை புஷ்பகிரி என அறியப்பட்டது. [2]

புஷ்பகிரி அகழாய்வின் போது, பெரிய தூபியும், சுடுமட்சிலைகளும் கண்டெடுக்கபப்ட்டது. புஷ்பகிரி விகாரை மற்றும் தூபிகள், பேரரசர் அசோகர் காலத்தில் (கிமு 304–232), கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3]

கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் பல்வேறு அளவுகளில் வடிக்கப்பட்ட 34 குடைவரை தூபிகளையும், குடைவரைச் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கண்டுபிடித்தது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பகிரி&oldid=2971410" இருந்து மீள்விக்கப்பட்டது