தனு யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனு யாத்திரை
ବରଗଡ ଧନୁଯାତ୍ରା
ବିଶ୍ଵର ସର୍ବବୃହତ ମୁକ୍ତାକାଶ ରଙ୍ଗମଞ୍ଚ
தனு யாத்திரைத் திருவிழாவில் பர்கரின் கம்சன்
பிற பெயர்(கள்)உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நிகழ்வு
கடைபிடிப்போர்பர்கர், அம்பாபாலி குடிமக்கள் மற்றும் பிற உள்ளூர், வெளியூர் பார்வையாளர்கள்
தொடக்கம்தைமாத வளர்பிறை சதுர்த்தி
முடிவுதைமாதப் பௌர்ணமி
தொடர்புடையனகிருட்டிணன், கம்சன்

தனு யாத்ரா அல்லது தனு யாத்திரை என்பது ஒடிசாவின் பர்கரில் கொண்டாடப்படும் வருடாந்திர நாடக அடிப்படையிலான திறந்தவெளி நிகழ்ச்சியாகும். பார்கர் நகராட்சியைச் சுற்றி 8 கி.மீ சுற்றளவில் பரந்து விரிந்திருக்கும், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அரஙகத்தில் இது நிகழ்த்தப்படுகிறது. மேலும் இது கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.[1][2][3][4][5][6][7] தைமாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று தொடங்கி தைமாதப் பௌர்ணமி அன்று முடிவடையும் இந்தத் தனு யாத்திரை வைணவக் கடவுளான கிருஷ்ணர் அவரது தாய்மாமாவான அரக்கன் கம்சன் ஆகியோரைப் பற்றிய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. பர்கரில் தோன்றிய, இந்த தனுயாத்திரை என்ற நாடகம் இன்றைய நாளில், மேற்கு ஒடிசாவின் பல இடங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் முக்கியமானதும் அசலானது பர்கரில் நிகழ்த்தப்படும் நாடகமாகும்.[8] கிருஷ்ணரின் தாய்வழி மாமாகம்சனால் ஏற்பாடு செய்யப்பட்ட தனு விழாவைக் காண கிருஷ்ணன், பலராமன் ஆகிய இருவரும் மதுராவுக்குச் சென்ற நிகழ்வு பற்றியது. தனது சகோதரி தேவகியை வசுதேவர் திருமணம் செய்து கொண்டதால், கோபமடைந்த கம்சன் பேரரசரும் தந்தையுமான உக்கிரசேனரை அரச பதவியிலிருந்து நீக்குவதிலிருந்து தொடங்கும் நாடகமானது, கம்சன் மரணமடைந்தது மீண்டும் உக்கிரசேனர் அரசராக முடிசூட்டிக்கொள்வதுடன் முடிவடைகிறது.. இந்த நிகழ்த்துக்கலையில் எழுதப்பட்ட வசனங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த திருவிழாவின் போது மக்கள் செய்த தவறுகளுக்கு கம்சன் தண்டனைகள் வழங்கி தண்டிக்க முடியும். மக்களும் அதனை ஏற்றுக்கொள்வர். ஒடிசாவின் முன்னாள் முதல்வரான பிஜு பட்நாயக்கிற்கு அவரது அமைச்சர்களுடன் ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டது.[7] இந்திய அரசின் கலாச்சாரத் துறை 2014 நவம்பரில் தனு யாத்திரைக்கு தேசிய விழா அந்தஸ்தை வழங்கியுள்ளது.[9]

வரலாறு[தொகு]

ஒடிசா - பலாங்கீர் மாவட்டத்தின் பங்கோமுண்டாவில் தனு யாத்ரா விழாவில் கம்சன் கிருஷ்ணானால்ல் கொல்லப்படும் நாடகக் காட்சி.

பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குப் பிறகு புதிதாக உருவான சுதந்திர இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஒரு முறையாக, தொழிலாளர் வர்க்கத்தினர் இந்த விழாவைத் தொடங்கினர் என்று சில வயதானவர்களால் கூறப்படுகிறது. கம்சனின் மரணம் காலனித்துவ விதிகளின் முடிவைக் குறிக்கிறது.[10]

இடங்கள்[தொகு]

தனு யாத்திரைக்காக முக்கிய நகராட்சி பகுதி வரலாற்று நகரமான மதுரா நகரியாகவும், ஜீரா நதி யமுனை நதியாகவும், அம்பபாலி கிராமம் (இப்போது பர்கர் நகராட்சியின் ஒரு பகுதியாக) கோபபுரமாகவும் மாற்றப்படுகிறது. அம்பபாலியில் ஜீரா ஆற்றின் ஓரத்தில் உள்ள ஒரு குளம் புராணங்களில் குறிப்பிட்டுள்ள காளிந்தி ஏரியாக மாறுகிறது. 2005 ஆம் ஆண்டு முதல், நிஷாமணி பள்ளி மைதானம் திருவிழாவின் ரங்கமஹால் - கலாச்சார மேடையாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நாடகமானது பர்கர் அரங்கின் வெற்றி மற்றும் புகழைத் தொடர்ந்து சமீபத்திய ஆண்டுகளில் மேற்கு ஒடிசாவின் பல நகரங்களிலும் கிராமங்களிலும் இந்த நாடகம் நிகழ்த்தப்படுகிறது. அவற்றும் குறிப்பிடத்தக்க இடங்கள் துவாபாலி, ரெமாண்டா ஆகியவையாகும்.

நகரத்தின் மையப்பகுதிக்குள் தினசரி காய்கறிச் சந்தை திருவிழாவின் முக்கிய கட்டமாக மாறுகிறது. மூங்கில், துணி மற்றும் பிற அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தி தற்காலிக மேடைநிலை கட்டப்படுகிறது. சந்தைக் கடைகளின் சிமென்ட் கான்கிரீட் கூரை பிரதான தளமாகச் செயல்படுகிறது. மன்னர் கம்சரின் முன்னிலையில் , அழைக்கப்பட்ட விருந்தினர் மற்றும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஆர்வமுள்ள பார்வையாளர்கள் மத்தியில் கலாச்சார துருப்புக்கள் இங்கு நிகழ்ச்சியை நிகழ்த்துவார்கள்.

தினசரி சந்தையின் பின்புற பகுதியில், தொடக்கத்தில் உண்மையான தனு விழா நிகழ்ந்த வரலாற்று இடத்தில் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் புனித கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இந்த இடத்தை " சஞ்சார் " நடனம்[11] நிகழ்த்த கலைஞர்கள் பயன்படுத்தினர். இது அழிந்து வரும் நடனக்கலை வடிவமாகும். இந்த நடன வடிவத்தின் பழைய கலைஞர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். இந்த நடனம் இரவு முழுவதும் கிராமங்களின் பார்வையாளர்களை பொழுதுபோக்கு, கேள்வி பதில்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துகிறது.

கோபபுரம்[தொகு]

திருவிழாவின் போது அருகிலுள்ள கிராமமான அம்பபாலி கோபபுரம் என வழங்கப்படுகிறது. கிராமவாசிகள் தங்கள் வீடுகளின் சுவர்களில், கிருஷ்ணரின் பல்வேறு கதைகளைக் காட்டும் புராணங்களின் கருப்பொருள்கள் சார்ந்த படங்களை தங்கள் கைகளால் வரைவார்கள். மேலும் கவிதை வரிகளை, கிராமத்தின் கிட்டத்தட்ட எல்லா சுவர்களிலும் எழுதுவதும் மிகவும் பொதுவானது.

யமுனா நதி[தொகு]

நகரத்திற்கு மேற்கு பக்கத்தில் முதன்மையாகப் பாயும் ஜீரா நதி இந்த 10 நாட்களுக்கு யமுனா நதியாக மாற்றப்படுகிறது. நாடகத்தின் மூன்று நாட்களில் இந்த நதி நாடகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

  1. கிருஷ்ணர் பிறந்த பிறகு கம்சனிடமிருந்து பாதுகாப்பதற்காக வாசுதேவர் தனது மகனான கிருஷ்ணனை நந்தகோப மன்னனிடம் விட்டுச் செல்லும்போது.
  2. கிருஷ்ணனின் ராச லீலையின் போது ஆற்றின் கரையில் கோபிகைகளுடன் (கோபபுரா - அம்பபாலி).
  3. மந்திரி அக்ருரர் சென்று கிருஷ்ணர், பலராம சகோதரர்களை மதுரா (பார்கர்) நகரத்தில் தனு யாத்ராவைக் காண அழைத்து வரும்போது.

ஆசிரமம்[தொகு]

கோவிந்தபாலி:

ஆண்டு வாரியாக முதன்மை நடிகர்கள்[தொகு]

2009–2015 தனுயாத்ரா - கம்சனாக- ஹ்ருஷிகேஸ் போய்

ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தைச்ச் சேர்ந்த ஒப்பனை கலைஞர் காசிராம் சாஹு, 1951 முதல் இடைவேளையில்லாமல் இந்த திருவிழாவுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தார், தனது 84 வயதில் 31 ஜூலை 2015 அன்று இறந்தார். இவர் இந்த நாடகத்தின் முதன்மை நடிகரான கம்சனுக்கு தனித்துவமான கொடுங்கோலன் தோற்றத்தை வழங்கிய பெருமைக்குரியவர்.

சிறப்புக் குறிப்பு தேவைப்படும் நிகழ்வுகள்[தொகு]

உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அரங்க நிகழ்வு என்று அழைக்கப்படும் [12][13] இந்த தனு யாத்திரை 1947 முதல் பர்கரில் நடைபெற்று வருகிறது.[14]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Dash, Prakash. "Dhanu Yatra World's biggest open-air theatre". Newsonair.com. News on Air: All India Radio. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dhanu Jatra". Festivalsofindia.in. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  3. Mohapatra, Prabhukalayan (2005). "Dhanuyatra of Bargarh : World's Biggest Open-Air-Theatre". Orissa Review. http://odisha.gov.in/e-magazine/Orissareview/dec2005/engpdf/dhanuyatra_of_bargarh_worlds_biggest_open_air_theatre.pdf. பார்த்த நாள்: 14 January 2016. 
  4. Mishra, Biranchi. "Dhanu Yatra: Largest Open Air Ethnic Theatre". ISKCON News. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  5. "The Hindu : Other States / Orissa News : Bargarh gears up for Dhanu Yatra". hindu.com. 2008 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216053506/http://www.hindu.com/2008/12/23/stories/2008122350850200.htm. பார்த்த நாள்: 18 January 2013. "The 11-day cultural extravaganza is globally known as world’s largest open-air theatre." 
  6. "All of Bargarh's a stage for Dhanu Yatra - Times Of India". indiatimes.com. 2011. Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 18 January 2013. It is also referred to as the world's biggest open-air theatre
  7. 7.0 7.1 Dehury, Chinmaya (27 December 2015). "Odisha town turns into Mathura for world's biggest open air theatre". Sify. IANS (Sify News) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103003137/http://www.sify.com/news/odisha-town-turns-into-mathura-for-world-s-biggest-open-air-theatre-news-others-pm1sEjaghachf.html. பார்த்த நாள்: 14 January 2016. 
  8. Koshal Discussion and Development Forum
  9. "National fest tag to Bargarh Dhanu Yatra Read more at: http://m.timesofindia.com/articleshow/45010373.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". The Times Of India. https://m.timesofindia.com/city/bhubaneswar/National-fest-tag-to-Bargarh-Dhanu-Yatra/articleshow/45010373.cms. 
  10. Bargarh Dhanu Yatra Govt. website, maintained by National Informatics Centre
  11. "Welcome to Odisha Sangeet Natak Akademi".
  12. "The Hindu : Other States / Orissa News : Bargarh gears up for Dhanu Yatra". hindu.com (Chennai, India). 23 December 2008 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216053506/http://www.hindu.com/2008/12/23/stories/2008122350850200.htm. பார்த்த நாள்: 18 January 2013. "The 11-day cultural extravaganza is globally known as world’s largest open-air theatre." 
  13. "All of Bargarh's a stage for Dhanu Yatra - Times Of India". indiatimes.com. 12 January 2011 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216063212/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-12/bhubaneswar/28352109_1_gopapur-hrusikesh-bhoi-bargarh-dhanu-yatra. பார்த்த நாள்: 18 January 2013. "It is also referred to as the world's biggest open-air theatre" 
  14. Guru, Sudeep Kumar (16 December 2011). "Dhanu yatra to begin in Puri". telegraphindia.com (Calcutta, India). http://www.telegraphindia.com/1111216/jsp/odisha/story_14885738.jsp#.UPhUGGdP9tY. பார்த்த நாள்: 18 January 2013. "The festival is being held Bargarh since 1947." 

பார்கரின் தனுயாத்ரா மஹோத்ஸவ் சமிதி, 65 வது ஆண்டு, 2014 ஜனவரி 6 முதல் 2014 ஜனவரி 16 வரை வெளியிட்ட கையேடு சிற்றேடு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனு_யாத்திரை&oldid=3599395" இலிருந்து மீள்விக்கப்பட்டது