முத்திரை (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாட்டிய முத்திரைகளின் தொகுப்பு

கை அசைவுகள் அல்லது முத்திரைகள் (சமசுகிருதம்: ஹஸ்தங்கள்) பரதநாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும். கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர். கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர். பரதநாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும். கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர். பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக்கை [இணையாக்கை], இரட்டைக்கை [இணைந்த கை] என இரண்டாகப் பிரயோகப்படுத்துகின்றனர்.இவை தவிர்ந்த அபூர்வ முத்திரைகளும் உண்டு.

முத்திரைகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mudras in Indian classical dance
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mudras
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஒற்றைக்கை முத்திரைகள்[தொகு]

ஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் அசம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்தெட்டாகும்.

முத்திரை கருத்து செய்முறை படிமம்
பதாகம் கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல். Hasthamudra1.JPG
திரிப்பதாகம் மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம் பதாகத்தில் மோதிர விரலை மடித்தல். Hasthamudra3.JPG
அர்த்தப்பதாகம் அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.
கர்த்தரீமுகம் கத்தரிக்கோல் திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல். Hasthamudra9.JPG
மயூரம் மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.
அர்த்தச்சந்திரன் அரைச்சந்திரன் பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.
அராளம் வளைந்தது சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
சுகதுண்டம் கிளி மூக்கு பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.
முட்டி(முஷ்டி) முட்டிகை அனைத்து விரல்களையும் பொத்துதல்.
சிகரம் உச்சி முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல். Hasthamudra2.JPG
கபித்தம் விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
கடகாமுகம் வளையின் வாய் நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல். Hasthamudra11.JPG
சூசி ஊசி முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல். Hasthamudra16.JPG
சந்திரகலா பிறைச்சந்திரன் சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல். Hasthamudra5.JPG
பத்மகோசம் தாமரை மொட்டு கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல். Hasthamudra17.JPG
சர்ப்பசீசம் பாம்பின் படம் பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல். Hasthamudra12.JPG
மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல். Hasthamudra6.JPG
சிம்மமுகம் சிங்கத்தின் முகம் நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
அலபத்மம் மலர்ந்த தாமரை சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல். Hasthamudra19.JPG
சதுரம் சாதூர்யம் மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
பிரமறம் வண்டு ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
கம்சாசியம் அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
கம்சபக்சம் அன்னத்தின் சிறகு மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல். Hasthamudra15.JPG
சம்தம்சம் இடுக்கி விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
முகுளம் மொட்டு விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
தாம்ரசூடம் சேவல் மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல். Hasthamudra7.JPG
திரிசூலம் சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல். Hasthamudra18.JPG

இரட்டைக்கை முத்திரைகள்[தொகு]

இரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் சம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.

முத்திரை கருத்து படிமம்
அஞ்சலி வணங்குதல்
கபோதம் புறா
கர்கடம் நண்டு Hasthamudra13.JPG
சுவஸ்திகம் குறுக்கிட்டது Hasthamudra.JPG
டோலம் ஊஞ்சல்
புஸ்பபுடம் மலர்க்கூடை
உத்சங்கம் அணைப்பு
சிவலிங்கம் சிவலிங்கம் Hasthamudra14.JPG
கடகாவர்த்தனம் கோர்வையின் வளர்ச்சி
கர்த்தரீ ஸ்வஸ்திகம் குறுக்குக் கத்தரிக்கோல்
சகடம் வண்டி
சங்கு சங்கு
சக்கரம் சக்ராயுதம் ഹസ്തമുദ്ര3.JPG
சம்புடம் பெட்டி
பாசம் கயிறு
கீலகம் பிணைப்பு
மத்சயம் மீன்
கூர்மம் ஆமை
வராகம் பன்றி ഹസ്തമുദ്ര2.JPG
கருடன் கருடப்பறவை
நாகபந்தம் பாம்பின் கட்டு
கட்வா கட்டில்
பேருண்டம் பேருண்டப்பறவை
அவகித்தம் குறுக்கே மலர்ந்த தாமரை