உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்மா (பௌத்தம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரம்மா என்பது பௌத்தத்தில் மேலுலகங்களில் உள்ள உயர் நிலை தேவர்களை குறிக்கும். பொதுவாக பௌத்த அண்டவியலில் ரூபாதாதுவின் கீழுலகங்களில் வாழ்பவர்களை குறிப்பாக பிரம்ம உலகங்களில் இருப்பவர்களை பிரம்மா என அழைப்பர்.

தோற்றம்

[தொகு]

பிரம்மா என்ற பெயர் வேத பாரம்பர்யத்திலும் காணப்படுகிறது. எனினும் இந்து மதத்தில் பிரம்மா என்பது ஒரே ஒரு படைப்புக்கடவுளையே குறிக்கிறது.[சான்று தேவை] எனினும், பௌத்த சூத்திரங்களில் தன்னையா படைப்பின் அதிபதியாக கருதிக்கொள்ளும் பல பிரம்மாக்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் அனைவரிடமும் புத்தர் அவர்களின் உண்மையான நிலையை உணர்த்துகிறார். பௌத்த பிரம்மாக்களும் இந்து மத பிரம்மாவுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன[1] எனினும் பௌத்த சூத்திரங்கள் ஒருப்பிடப்படும் பிரம்மாக்களை ஏதேனும் ஒரு பிரம்மாவை பிரமாணர்கள் வழிபட்டதாக கருதலாம். பிரம்மஜால சூத்திரத்தின்படி, பிரம்ம உலகங்களில் தங்களது முற்பிறவியினை கழித்தவர்கள், அந்த பிறவியின் நினைவினால் இந்தப்பிறவியில் பிரம்மாவை படைப்பின் கடவுளாக கருதி அதையே உண்மை பிறருக்கும் அறிவித்தனர்.

வகைகள்

[தொகு]

பிரம்மா என்பது கீழ்க்கண்டவற்றுள் ஏதாவதை ஒன்றை குறிப்பிடலாம்.

  1. ஆரூப்யதாது அல்லது ரூபதாது ஆகியவற்றை சேர்ந்தவர்.
  2. சுமகிருத்ஸ்ன உலகத்தில் இருந்து பிரம்மபரிஷட்ய உலகம் வரை உள்ள கீழ்நிலை ஒன்பது உலகங்களை சேர்ந்த ஒருவர்
  3. ரூபதாதுவின் பிரம்ம உலகங்களை சார்ந்தவர்
  4. மகாபிரம்ம உலகத்தை சார்ந்த மகாபிரம்மா

பிரம்மாக்கள்

[தொகு]

பௌத்த நூல்களில், பல்வேறு பிரம்மாக்கள் பெயருடன் குறிப்பிடப்பெறுகின்றனர். அனைவரும் பிரம்மா எனவே குறிப்பிடப்படுவதால், அவர்கள் எந்த உலகத்தை சார்ந்தவர்கள் என்ற தெளிவாக தெரியவில்லை. .

பக பிரம்மா

[தொகு]

பக பிரம்மா மஜ்ஜிம நிகாயத்தில் குறிப்பிடப்படுகிறார். இந்த சூத்திரத்தின் படி, இவர் தனது உலகம் அழிவற்றதெனவும் அதன் மூலம் இவர் அழிவற்றவர் எனவும் நம்புகிறார். மேலும் இவரது உலகமே உச்ச உலகமெனவும் இதற்கு மேலும் உலகம் இல்லையெனவும் நம்புகின்றார். ஆனால் புத்தர் இதை மறுத்து அநித்யத்தை(நிலையான்மை) குறித்து உபதேசிக்கின்றார். எனினும் பக பிரம்மாவுடன் உடனிருக்ககும் ஒருவர் மாரனின் தூண்டுதலினால் மக பிரம்மாவை படைப்பின் அதிபதி எனவு, அவரை போற்றுபவர்கள் நற்பலன்கள் கிடைக்கும் எனவும், அவரது ஆற்றலை மறுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறுகிறார். புத்தர் உண்மையில் பேசுவது மாரனே என கண்டு கொண்டு, தான் மாரனின் ஆளுமைக்கு அப்பற்பட்டவர் என கூறுகிறார்.

இதன் பிறகு கூட, பக பிரம்மா புத்தரிடம் அவர் தன்னுடைய உலகத்தில்(படைப்பு அனைத்தும் இவரது உலகம் என பக பிரம்மாவின் கருத்து) இருப்பதாகவும், எனவே பிரம்மாவின் அறிவுக்கு உட்பட்ட பொருட்கள் மீது புத்தர் சார்ந்திருக்க நேரின், தான் புத்தர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறார். அதற்கு புத்தர், பக பிரம்மாவுக்கு அவ்வளவு ஆற்றல் இல்லையென்றும், பக பிரம்மாவின் உலகத்துக்கு மேலே அவருடைய அறிவுக்கு எட்டாத பல உலகங்கள்(சுத்தாவாச மற்றும் ஆரூப்யதாது உலகங்கள்) உள்ளதென்று தெரிவிக்கிறார். எனவே புத்தரின் அறிவு புத்தரை பக பிரம்மாவை விட உயரிய நிலையில் வைப்பதாகவும் பிரம்மாவிடம் கூறுகிறார். புத்தரின் தனது உயரிய மாய சக்திகளையும், பக பிரம்மாவின் தற்கால நிலையை பிரம்மாவின் முற்பிறவிகளை கொண்டு சொல்லியதை கண்டும், இறுதியில் புத்தரின் கூற்றை பக பிரம்மா ஒப்புக்கொள்கிறார்.

பக பிரம்மா ஒரு முற்பிறவியல் கேசவன் என்ற துறவியாக இருந்தார். தன்னுடைய செய்லக்ளின் மூலம் பல மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினார். அவர் தியான நிலைகளை வசப்படுத்தியதன் மூலம் மறுபிறவிய பிரஹத்பல உலகங்களில் மறுபிறப்பெய்தினார். பின்னர் ரூபதாதுவின் ஒவ்வொரு நிலையாக கீழிறங்கு இறுதியில் அற்ப பிரம்ம நிலையை எய்தினார்.

இன்னொரு நிகழ்வில், பக பிரம்மா, தன்னுடைய உலகத்துக்கு எந்த துறவியும் வர இயலாது எனக்கருதினார். ஏனெனினும் புத்தரும் அவரது சீடர்களும் பல முறை பிரம்ம உலகத்துக்கு சென்று அவருடைய கூற்றை பொய்யாக்கினர்.

பக பிரம்மா பக பிரம்ம சூத்திரம் மற்றும் மரம்மனிமந்தனிக சூத்திரம் ஆகிய சூத்திரங்களில் குறிப்பிடப்பெறுகிறார்.

பிரம்மா சஹம்பதி

[தொகு]

'பிரம்மா சஹம்பதி பிரம்மாக்களில் மிகவும் மூத்தவராக கூறப்படுகிறார். இவர் கௌதம புத்தர் போதி நிலை அடைந்த போது, இவர் அங்கு இருந்தார். பிறகு கௌதம புத்தர் உருவேளாவில் தியானம் செய்த போது, இவரே புத்தரை மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும் படி அறிவுறுத்தினார். சில உரைகளின் படி இவர் சுத்தாவாச உலகத்தை சார்ந்தவராக கூறப்பெறுகிறார். இவர் முற்காலத்து புத்தரான காசியப புத்தரின் சங்கத்தில் சஹகன் என்ற துறவியாக முற்பிறவியில் இருந்தார்

இன்னொரு நிகழ்வில், ஒரு பெண்ணிடம், தனக்கு நிவேதனங்கள் அளிக்க வேண்டாமென்றும், துறவியாகிய அவளது மகனுக்கு தானம் அளிக்கும்படியும் வலியுறுத்தினார்.

சம்யுத்த நிகாயத்தில் பிரம்மா சஹம்பதி கூறியதாக பல வரிகள் உள்ளன. இவை அனைத்தும் இவரும், இந்திரனும் புத்தரை சந்தித்த போது கூறியவை. மேலும் இவர் புத்தர் இறக்கும் தருவாயிலும் புத்தரை சந்தித்தார். அப்போது கூறப்பட்டவை மகாபரிநிர்வாண சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பிரம்மாக்களிலும், இவரே புத்தருக்கு மிகவும் நெருக்கமுடையவராக கருதப்படுகிறார்.

பிரம்மா சனத்குமாரன்

[தொகு]

பிரம்மா சனத்குமாரன் குறித்து ஜானவாசப சூத்திரத்தில் கூற்ப்பெற்றுள்ளது. அந்த சூத்திரத்தின் படி, இவர் திராயஸ்திரிம்ச தேவர்களின் முன் தெரிவதற்காக ஒரு அடர்த்தியான உருவத்தை எடுத்துக்கொண்டார். பிறகு அனைத்து தேவர்களின் முன் பிரத்யேகமாக இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தினார். அந்தந்த தேவர்களோடு மட்டும் உரையாடுவது போல் இன்னொரு மாயத்தை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் புத்தரையும் அவரது போதனைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தி அவ்வாறு செய்வதினால் நல்ல பலன்கள் விளையும் எனவும் விவரித்தார்.

உரையாசிரியர்கள் சனத்குமாரன்(என்றும் இளைமயானவன்) என்ற அடைமொழி, இவர் எப்போதும் ஒரு இளைஞனின் உருவத்தை தரிப்பதால் என விளக்கினர்.

மகாபிரம்மா

[தொகு]

மகாபிரம்மா என்பது, ஒரு பெயர் என்பதைவிட இதை ஒரு பட்டமாகவே, பல பௌத்த சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. முறையாக மகாபிரம்மா என்பது ரூபதாதுவில் உள்ள பிரம்ம உலகத்தில் முதலில் தோன்றியவர்களையே குறிக்கும். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா, மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்தும் முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்பவன், இது வரைந்த இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர். பிரம்மஜால சூத்திரத்தின்படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்குக்கூட தனது உலகத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. பிரம்ம உலகங்களில் உள்ளவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புகின்றனர். கேவத்த சூத்திரத்தில், மகாபிரம்மாவால் ஒரு துறவின் தத்துவரீதியான கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் தவிக்கிறார். துறவியின் கண்களுக்கு தென்படாத தேவர்கள் பிரம்மாவின் அருகில் இருந்ததால் இதை மறைத்து தொடர்பில்லாத பதில்களை கூறினார். பிறகு தனிமையில் அந்த துறவியிடம், தேவர்கள் தன்னை அனைத்தும் அறிந்தவராக கருதுவதாகவும் அதனாலேயே நேரடி பதில் கூற இயலாமல் போனதாகவும், தனக்கு விடை தெரியாததால் இதற்கான பதில்களை புத்தரிடம் கேட்கச் சொன்னார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.palikanon.com/english/pali_names/b/brahmaloka.htm

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மா_(பௌத்தம்)&oldid=3530770" இலிருந்து மீள்விக்கப்பட்டது