உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்து தியானி புத்தர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு புத்தர்கள்
பல்வேறு புத்தர்கள்

வ்ஜ்ரயான பௌத்தத்தில், ஐந்து தியானி புத்தர்கள் அல்லது ததாகதர்கள் என்பது ஐந்து புத்தர்களின் குழுமத்தை குறிக்கிறது. இந்த ஐவரும் புத்தரின் ஐந்து குணங்களின் வெளிப்பாடாகவும் உருவகமாகவும் கருதப்படுகின்றனர். இவர்களை வடமொழியில் பஞ்ச மஹா புத்தர்கள் எனவும் ஐந்து ஜினர்கள் எனவும் குறிப்பிடுவர். இந்த ஐந்து புத்தர்களின் வழிபாடு வஜ்ராயனப் பௌத்தத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது[1]

ஐந்து தியானி புத்தர்கள் என்ற கூற்று, பிற்காலத்தில் திரிகாய தத்துவத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த ஒரு நம்பிக்கையாகும். இந்த திரிகாய தத்துவம் யோகாசாரத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து புத்தர்களும் தர்மகாய(தர்மத்தையே உடலாக கொண்டவர்கள்) புத்தர்கள் ஆவர் துவக்கத்தில் 'ப்ரக்ஞை'யையும்(அறிவுணர்ச்சி) 'கருணையையும்' உருவகபடுத்தும் விதமாக அக்ஷோப்ய புத்தர் மற்றும் அமிதாப புத்தர் தோன்றினர். மேலும் இது வளர்ர்சி அடைந்து , சுவர்ணபிரபாச சூத்திரத்தில் ஆற்றலையும் ஆன்மிக செல்வத்தையும் குறிக்கும் வகையில் துந்துபீஷ்வரரும், ரத்னகேதுவும் எழுந்தனர். பிற்காலத்தில் இவர்களுடைய பெயர் அமோகசித்தி எனவும் ரத்தினசம்பவர் எனவும் மருவியது. இவர்கள் நால்வருக்கும் நடுநாயகாம விளங்கும் வண்ணம் மஹாவைரோசன புத்தர் தோன்றலானார்.

இந்த ஐந்து புத்தர்களின் திசையையும் நிறமும் அவரவர்களுடைய மண்டலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

வைரோசன மண்டலத்தில் கீழ்க்கண்டவாறு இவர்கள் காணப்படுகின்றனர்.

அக்ஷோப்யர்

(கிழக்கு)

அமோகசித்தி

(வடக்கு)

வைரோசனர்

(தியான மூர்த்தி)

ரத்தினசம்பவர்

(தெற்கு)

அமிதாபர்

(மேற்கு)

மற்ற மொழிகளில் தியானி புத்தர்களின் பெயர்கள்:

புத்தர் சமஸ்கிருதம் ஜப்பானிய மொழி சீன மொழி
வைரோசனர் वैरोचन 大日如来, டைனிச்சி ந்யோராய் 毘盧如來, பிலு ருலாய்
அக்ஷோப்யர் अक्षोभ्य 阿閃如来, அஷுகு ந்யோராய் 阿閃如來, அஜியு ருலாய்
அமிதாபர் अमिताभ 阿弥陀如来, அமிடா ந்யோரார் 彌陀如來, மிடுவொ ருலாய்
ரத்தினசம்பவர் रत्नसंभव 宝生如来, ஹோஷோ ந்யோராய் 寳生如來, பாவோஷெங் ருலாய்
அமோகசித்தி अमोघसिद्धि 不空成就如来,ஃபுகூஜோஜு ந்யோராய் 成就如來, செங்ஜியு ருலாய்

மேற்கூறிய ஐந்து புத்தர்களும், ஐந்து வித்யாராஜாக்களின் மூலம் காக்கப்படுகின்றனர். ஐந்து தியானி புத்தர்களும் வித்யாராஜாக்களும் ஒருங்கிணைந்து ஒன்றாக இரு பிரிவு மண்டலத்தில் சித்தரிக்கப்படுகின்றனர்.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Five Buddha-Families and Five Dhyani Buddhas

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்து_தியானி_புத்தர்கள்&oldid=3263602" இலிருந்து மீள்விக்கப்பட்டது