உள்ளடக்கத்துக்குச் செல்

சென் புத்தமதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் இரண்டு சென் மரபினராகக் கருதப்படும் போதிதர்மரும், தாசு உயிக்கியும்
நாடுகள்
இந்தியா • இலங்கை • சீனா • சப்பான்
மியான்மர்
கம்போடியா
ஆங்காங்
தைவான்
கொரியா • வியட்நாம்
தாய்வான் • மங்கோலியா
திபேத்து • பூட்டான் • நேபாளம்
கொள்கை
போதிசத்வர் • Upāya
Samādhi • Prajñā
Śunyatā • Trikāya
மகாயான சூத்திரங்கள்
Prajñāpāramitā Sūtras
தாமரை சூத்திரம்
நிர்வாண சூத்திரம்
சுவர்ணபிரபாச சூத்திரம்
தசபூமிக சூத்திரம்

Saṃdhinirmocana Sūtra
Avataṃsaka Sūtra
ததாகதகர்ப தத்துவம்
Laṅkāvatāra Sūtra
மகாயானப் பிரிவுகள்
மத்தியமிகம்
யோகசாரம்
சௌத்திராந்திக யோகசாரம்
சுகவதி
Esoteric Buddhism
தூய நிலம் • சென் • 
தியாந்தாய் • நிச்சிரென்
வரலாறு
பட்டுப் பாதை • நாகார்ஜுனர்
போதி தருமன்அசங்கர் • 
வசுபந்து
திக்நாகர்
தர்மகீர்த்தி
Portal

சென் புத்தமதம் (ஆங்கிலம்: Zen; சீனம்: 禪; பின்யின்: Chán) மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு (சூன் 18, 618 – சூன் 4, 907) காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. பின்னர் இப்பிரிவு சீனாவிலிருந்து தெற்கு வியட்நாம், வடகிழக்கு கொரியா, கிழக்கு சப்பான் போன்ற பகுதிகளுக்குப் பரவியது. சப்பானில் இப்பிரிவு சப்பானிய சென் என்று அழைக்கப்படுகிறது[1]. சப்பானியர்களின் அன்றாட வாழ்வும் கலை, இலக்கியம், ஓவியம், கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் சென் புத்தமதத்தின் பாதிப்பு உள்ளது.

சென் புத்தமதம் அனுபவ ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தியானம், அறம் என்பவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவ அறிவை முதன்மைப்படுத்துவதால், கோட்பாட்டு அறிவுக்கு இது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.[2][3]. இம்மதம் சீனாவில் உள்ள சவோலின் கோயிலில், புத்தமதத் துறவியாக மாறிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதி தருமன் என்பவரால் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவர், சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றிக் கற்பிப்பதற்காகச் சீனாவுக்கு வந்ததாக அறியப்படுகின்றது.

சென் ஒரு தனியான புத்தமதப் பிரிவாக உருவானது குறித்து முதன்முதலாக கிபி 7ஆம் நூற்றாண்டில் பதிவுகள் காணப்படுகின்றன. மகாயான புத்தமதத்தில் காணப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளின் கலப்பினாலேயே சென் புத்தமதம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

சென் என்ற சொல்லானது மத்திய அல்லது பண்டைய சீனச் சொல்லான 禪 (சான்) என்ற சொல்லின் சப்பானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டது ஆகும். இது தியானம் ("தியானம்") என்ற இந்தியப் பயன்பாட்டு சொல்லின் வேர்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. [4].

போதனைகள்[தொகு]

தன்னை அறிந்து கொள்ள முதலில் மனத்தூய்மை வேண்டும். புத்தரின் போதனைகளை நடைமுறையில் கடைபிடித்து ஆசை, கோபம், அறியாமை போன்றவையால் வரும் துன்பங்களிலிருந்து தானும் விடுபட்டு மற்றவர்களையும் விடுவிப்பதே சென் புத்தமதத்தின் இறுதி குறிக்கோளாகும்.

தன் இயற்கையை அறிவதற்கு சென் புத்தமதம் பல்வேறு வழிமுறைகளைப் போதிக்கிறது. கடுமையான சுய கட்டுப்பாடு, தியான நடைமுறை, புத்தரின் சுய ஞானோதயம் மற்றும் தினசரி வாழ்வில் இந்த நுண்ணறிவின் தனிப்பட்ட வெளிப்பாடு, குறிப்பாக மற்றவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவது என்பவற்றை சென் புத்தமதம் வலியுறுத்துகிறது [5][6]. அதேபோல வார்த்தைகளிலும் கோட்பாடுகளிலும் மனதைத் தேடுவதை சென் புத்தமதம் வலியுறுத்தவில்லை [7][8]. மாறாக, நேரடியாக மனதைக் குறிவைத்து தன் இயற்கை முழுவதையும் அறிந்து கொள்ள முடியும் என்பது சென் புத்தமதத்தின் அடிப்படைக் கருத்தாகும் [9].

மகாயானக் கோட்பாட்டின் ஆதார மூலங்களான குறிப்பாக உள்ளத்தின் விரிவே உலகமாகத் தோன்றுகிறது என்று கூறும் யோகாச்சாரம் மற்றும் அனைவருக்குள்ளும் புத்தநிலையை அடையக்கூடிய தன்மை உள்ளார்ந்த நிலையில் இயற்கையாகவே உள்ளது எனக்கூறும் ததாகதகர்ப சூத்திரங்கள் உள்ளிட்டவை சென் புத்தமத போதனைகளில் அடங்கியுள்ளன.

பயிற்சிகள்[தொகு]

மூச்சை அறிதல்[தொகு]

உட்கார்ந்த நிலையில் தியானம் செய்யும் போது, பயிற்சியாளர்கள் பொதுவாக தாமரை நிலை, அரை தாமரை நிலை, பர்மிய, அல்லது செய்சா எனப்படும் சப்பானிய தோரணை போன்ற நிலைகளில் அமர்ந்து தியானா முத்ராவைப் பயன்படுத்தித் தியானம் செய்வர்.

மூச்சின் எண்ணிக்கையை அறிவது அல்லது மூச்சை மனதின் ஆற்றல் மையத்தை நோக்கி நகர்த்த முயற்சிப்பது போன்ற செயல்களால் மனதை ஒருங்கினைக்க பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனாபானாசதி [10] என்பது புத்தபகவானால் அருளப்பட்ட தியானமுறைகளுள் ஒன்றாகும். விழிப்புடன் மூச்சினை அவதானித்தல் என்பது இதன் பொருளாகும். ஆனா, ஆபானா, சதி என்னும் சொற்களின் கூட்டு ஆனாபானாசதியாகும். ஆனா என்பது உட்சுவாசத்தினையும், ஆபானா என்பது வெளிச் சுவாசத்தினையும், சதி என்பது விழிப்புடன் அவதானித்தலையும் குறிக்கிறது.

இப்பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு பயிற்சியாளர் அமைதியான ஓரிடத்தில் சதுர அல்லது வட்டவடிவ பாயில் பத்மாசனமிட்டு அமர்ந்து தனது கண்களை மூடிக் கைகளை மடியில் வைத்து மனத்தை உடல் உணர்வுகளிற் செலுத்தி தியானம் மேற்கொள்வார். சிலர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபடியும் இப்பயிற்சியை மேற்கொள்வர். இது மனத்தினை ஓரளவு அமைதியுறச் செய்வதற்கு உதவுகிறது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் தியானம் புரிதலை சுவோசாங் (坐禅) என்று சீனத்திலும், சாசென் (坐禅) என்று சப்பானிலும், சுவாசியோன் (坐禅) என்று கொரியாவிலும் அழைக்கின்றனர்.

மனதை அறிதல்[தொகு]

அமைதியாக எண்ணங்களற்று உட்கார்ந்திருப்பது சென் புத்தமத சோட்டோ பிரிவின் முதன்மையான தியான நடைமுறையாகும். தியானிப்பாளர்கள் சிந்தனையின் ஓட்டம் குறித்து எந்த தலையீடும் இல்லாமல் மனதை அறிந்துகொள்ள முயல்வது இப்பயிற்சியாகும். சப்பானிய புத்தமத துறவியான தோகெனின் முறை என்று இம்முறை அழைக்கப்படுகிறது [11]. சாசென்னுக்ககாக அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படும் முறையும் இதுவேயாகும் [12]. சப்பானிய மொழியில் இம்முறையை சிக்காந்தசா என்று அழைக்கிறார்கள்.

தீவிர கூட்டுத்தியானம்[தொகு]

சில ஆலயங்களில் மும்முரமான கூட்டு தியானப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. சப்பானிய மொழியில் இதை செசின் என்கிறார்கள். புத்த துறவிகள் ஒவ்வொரு நாளும் தினமும் பல மணி நேரம் தியானம் செய்வதை வழக்கமாக கொள்வர். இத்தகைய தீவிரமான தியானக் காலத்தில் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தியானக் காலம் முழுவதும் ஓய்வுக்காகவும் உணவு முதலிய இதர காரணங்களுக்காகவும் அதே மனநிலையுடன் கூடிய 30-50 நிமிட குறுகிய கால இடைவெளிகள் விடப்படுவதுண்டு. இரவு தூக்கத்திற்காக ஏழு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் ஒதுக்கி வைக்கப்படுகிறது. சப்பான், தைவான், மற்றும் மேற்கு நாடுகளில் நவீன பௌத்தமத நடைமுறைகளில் மாணவர்கள் பொதுவாக இத்தகைய தீவிர கூட்டுத்தியான நடைமுறை அமர்வுகளில் கலந்து கொள்கின்றனர், இவை பொதுவாக 1, 3, 5, அல்லது 7 நாட்கள் நீளம் கொண்டவையாக இருக்கின்றன. இத்தகைய கூட்டு தியானங்கள் பல சென் மையங்களில் நடைபெறுகின்றன. குறிப்பாக புத்தருக்கான நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இத்தீவிர தியானங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. குழுக்களாக மேற்கொள்ளப்படும் சென் தியானத்தின் ஒரு தனித்துவமான அம்சம் கியோசாகு என்ற மெல்லிய நீண்ட மரத்தாலான குச்சியின் பயன்பாடாகும் [13]. பயிற்சியாளர்களை விழிப்புடன் வைத்திருக்க இக்குச்சியால் அடிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

கோன் விடுகதைகள்[தொகு]

சாங் வம்சத்தின் தொடக்கத்தில் மௌனமாக ஞானம் பெறுவதை நடைமுறையாகக் கொண்டிருந்த நேரத்தில் கோன் எனப்படும் விடுகதைகள் போடும் நடைமுறை பிரபலமடைந்தது[14].இது லிஞ்ச் மற்றும் காடோங் பிரிவுகளுக்கு இடையேயான நடைமுறையில் சில வேறுபாடுகளுக்கு ஆதாரமாகியது. சின்னச் சின்ன கதைகள், வினோதமான வேடிக்கை நிகழ்ச்சிகள், கவிதைகள் போன்ற செயல்கள் மூலம் தொடர்புபடுத்தி சட்டென மனதை அறியச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்குரு மாணவர்களுக்கு போதித்தலை நிகழ்த்துவது இம்முறையின் சிறப்பாகும். சென்குரு பெற்ற உள்ளுணர்வை அவருடைய மாணவரிடத்தில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி புத்தமத போதனைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களிம் முன்னேற்றம் சோதிக்கவும் படுகிறது.

கோன்-விடுகதைகள் உட்கார்ந்த தியானநிலையிலும் நடை தியானத்திலும் போதும் அன்றாட வாழ்வின் எல்லா நடவடிக்கைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோன் நடைமுறையி குறிப்பாக சப்பமிய ரின்சாய் பிரிவில் வலியுறுத்தப்படுகிறது, மற்ற பிரிவுகளிலும் சென் கிளையின் போதனையைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது[15]. சென் மாணவரின் தேர்ச்சி ஒரு தனிப்பட்ட நேர்காணலில் (ஜப்பானிய மொழியில் டோகூசன் (独 参), டெய்சான் (代 参) அல்லது சன்சென் (参禅)) அவனுக்குக் கொடுக்கப்பட்ட கோன் விடுகதையின் கோணத்தில் வழங்கப்படுகிறது. ஒரு கோன் விடுகதைக்கு தனித்துவமான பதில் இல்லை என்றாலும் அதை மாணவர்கள் புரிந்துகொண்டு அளிக்கும் பதில்களை விளக்கி ஆய்வு செய்து அவர்கள் சென் கருத்துகளைப் பிரிந்து கொள்ள திட்டமிடப்படுகிறது. வேண்டும். மாணவனின் பதிலை சென்குரு ஏற்றுக்கொண்டோ அல்லது மறுத்தோ சரியான பாதையை மாணவனுக்கு அரிமுகப்படுத்துவார். இருவருக்குமிடையிலான இடைவினை சென் புத்தமதத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுவே தவறான புரிதலுக்குக்கும் சுரண்டலுக்கும் வழிவகுக்கிறது [16].

சென் புத்தமதத்தின் பரவல்[தொகு]

சீனாவிலுள்ள பியூசியானின் அங்ஙாய் நகரத்தின் சூசின் கோயில்

கிங் வம்சத்திற்குப் பின்னர் (1644-1912) பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு, 20 ஆம் நூற்றாண்டில் சீன பௌத்தத்தினை நன்கு அறிந்த நபரான எச்யூன் (虛雲) (1840-1959) மூலமாக புத்தம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதைத் தொடர்ந்து 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் சாங் கருத்துகள் நிலையான வளர்ச்சி பெற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

வியட்நாமில் சென்[தொகு]

வியட்நாமியின் மரபார்ந்த வரலாற்றுக் கணக்கின் படி 580 ஆம் ஆண்டில் வினிடூரிசி (வியட்நாம்: ì-ni-đa-lưu-chi) என்ற இந்திய துறவி சீன சாங்ஙின் மூன்றாவது மூதாதையர் செங்கானுடன் தன்னுடைய பயிற்சியை முடித்துக் கொண்டு வியட்நாம் சென்றார். இவர்கள் மூலமாக வியட்நாமில் புத்தமதக் கருத்துகள் பரவின. முன்னதாக சீன புத்தமத துறவிகளால் தாவோயிசமும் ஞானம் பெறும் வழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

கொரியாவில் சென்[தொகு]

சீயோன் கொரியாவில், கொய்லாவின் சாய்ந்த சில்லா காலத்தில் (7 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுகள்) கொரியத் துறவிகள் சீன புத்தத்தையும் யோகமுத்திரையையும் பிரதானமாகக் கருதி புதிதாக வளரும் சென் பாரம்பரியத்தை கற்றுக்கொள்ள சீனாவுக்குச் செல்லத் தொடங்கினர். கோன் விடுகதைகள் போடும் நடைமுறையும் புதிய சென் மையங்களும் வியட்நாமிற்குள் பிரவேசித்தன.

சப்பானில் சென்[தொகு]

12 ம் நூற்றாண்டு வரை சென் ஒரு தனிப் பிரிவாக சப்பானில் அறிமுகப்படுத்தப்படவில்லை, மியோன் எய்சாய் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு இறுதியாக லின்யி வழியை தொடங்குவதற்காக சப்பானுக்குத் திரும்பினார் [17], ஆனால் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இது இறுதியில் அழிந்துவிட்டது. ரின்சாய் பிரிவின் ஓட்டோகான் வழிமுறையைத் தொடங்குவதற்கு முன்பே நாம்போ சோமியொவும் லின்யி போதனைகளை சீனாவில் கற்றிருந்தார். 1215 ஆம் ஆண்டில் சமகாலத்தைச் சேர்ந்த எய்சாய் சீனாவிற்குச் சென்றார். அங்கு தியாங்டோங் ரூயிங்ஙின் மாணவராகச் சேர்ந்தார். இவர் சப்பானுக்குத் திரும்பிய பின்னர் சப்பானிய கிளையான சோட்டோ பிரிவு உதயமானது. சமகாலத்தில் சப்பான் நாட்டில் சோட்டோ (曹洞), ரின்சாய் (临 済) மற்றும் ஓபாக்கு (黃 檗) ஆகிய மூன்று பாரம்பரியப் பிரிவுகள் இருந்தன. இவற்றில், சோட்டோ மிகப்பெரியது, ஓபாக்கு மிகச்சிறியதாகவும் ரின்சாய் நடுத்தர பிரிவாகவும் கருதப்பட்டன. இப்பிரிவுகள் மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. சோட்டோ பிரிவுக்கு இரண்டு தலைமை ஆலயங்களும், ரின்சாய் பிரிவுக்கு 14 தலைமை ஆலயங்களும் ஓபாக்கு பிரிவுக்கு ஒரு ஆலயமும் என மொத்தமாக 17 தலைமை ஆலயங்கள் தோன்றின.


மேற்கோள்கள்[தொகு]

 1. Harvey 1995, ப. 159–169.
 2. Zen Buddhism
 3. Maual of Zen Buddhism
 4. Dumoulin 2005a, ப. xvii.
 5. Yoshizawa 2010, ப. 41.
 6. Sekida 1989.
 7. Poceski Year unknown.
 8. Borup 2008, ப. 8.
 9. Yampolski 2003a, ப. 3.
 10. group =web name="shengyen">Sheng, Yen. "Fundamentals of Meditation".
 11. group=web name="zazengi">Sōtō Zen Text Project. "Zazengi translation". Stanford University. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
 12. group=web name="fukanzazengi">Sōtō Zen Text Project. "Fukan Zazengi". Stanford University. Archived from the original on 2008-04-29. பார்க்கப்பட்ட நாள் 2008-03-26.
 13. *Sōgen Hori, G. Victor (1998). "Japanese Zen in America: Americanizing the Face in the Mirror". In Prebish, Charles S.; Tanaka, Kenneth K (eds.). Faces of Buddhism in America. Berkeley, Calif.: University of California Press. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-21301-2. இணையக் கணினி நூலக மைய எண் 37782936.
 14. Blyth 1966.
 15. Loori 2006.
 16. Lachs 2006.
 17. group=web name=ROZ>"Rinzai-Obaku Zen – What is Zen? – History". Zen.rinnou.net. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zen Buddhism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_புத்தமதம்&oldid=3555815" இலிருந்து மீள்விக்கப்பட்டது