ஆனந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தர்
போற்றுதலுக்குரிய ஆனந்தர்
சுய தரவுகள்
Occupationபிக்கு, கௌதம புத்தரின் அணுக்கத் தொண்டர்
பதவிகள்
Teacherகௌதம புத்தர்

ஆனந்தர் புத்தரின் அணுக்கச் சீடர் ஆவார். புத்தரின் உறவினரான இவர் அவருடன் சேர்ந்து பல பகுதிகளுக்கும் சென்றவர்; புத்தர் பேசியவற்றை மனதில் நிறுத்திக் கொண்டவர். சுத்த பிடகத்தில் உள்ள பல சூத்திரங்கள் இவரால் நினைவிலிருந்து கொண்டு வரப்பட்டவையே. முதல் பௌத்தப் பெருங்குழுமத்தில் புத்தரின் போதனைகள் பலவற்றையும் இவரே நினைவுகூர்ந்து கூறினார். இதன் காரணமாக இவர் “தம்மத்தின் பாதுகாவலர்” என அறியப்படுகிறார்.

புத்தரின் கூற்றுப் படி ஒவ்வொரு புத்தரும் தம் பிறவியில் இரண்டு முதன்மைச் சீடர்களையும் ஒரு அணுக்கச் சீடரையும் கொண்டிருப்பர். அந்த வகையில் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களாக மகாகாசியபர், சாரிபுத்ரரும், மொக்கல்லானரும் விளங்கினர். அணுக்கச் சீடராக ஆனந்தர் விளங்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தர்&oldid=3769971" இலிருந்து மீள்விக்கப்பட்டது