உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம் மணி பத்மே ஹூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணி மந்திரம் திபெத்திய வரிவடிவில்
"ஓம் மணி பத்மே ஹூம்", திபெத்தில் பொதால அரண்மனைக்கு அருகில் ஒரு பாறையில்

ஓம் மணி பத்மே ஹூம்(தேவநாகரி: ॐ मणि पद्मे हूँ, IAST:oṃ maṇi padme hūṃ), என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம்(ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி(ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.


அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.


எழுத்துப்பெயர்ப்புகள்

[தொகு]

பல்வேறு எழுத்துமுறைகளில் மணி மந்திரம்:

பொருள்

[தொகு]

இந்த மந்திரத்துக்கு பல்வேறு பௌத்த பிரிவினர்களால் பல்வேறு பொருட்கள் கூறப்படுகின்றன.

மணி பத்மே என்றால் தாமரையில் இருக்கும் மணி என்று பொருள்(பத்மம் - தாமரை). இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும். ஆனால் டோனால்ட் லோபெஸ் என்பவர் மணிபத்மே என்பது மணிபத்மா என்பதின் பெண்பால் விளி எனக்கருதுகின்றார்(வடமொழியில் பெண்பால் பெயர்களை விளிக்கும் போது கடையெழுத்து ஏகாரம் பெறும்). எனவே இது மணிபத்மா என்ற போதிசத்துவரை குறித்தது என இவர் கருதுகின்றார். மணிபத்ம(கையில் ரத்தினமும் தாமரையும் ஏந்தியவர்) என்பது அவலோகிதெஷ்வரரின் இன்னொரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓம் என்பது அனைத்து மந்திரங்களிலும் முன்னொட்டாக வருவது மிகவும் புனிதமாக கருதப்படுவது. ஹூம் என்பது ஒரு பீஜாக்‌ஷரம் ஆகும். குறிப்பித்தக்க பௌத்த மந்திரங்களில் இது பின்னொட்டாக வருகிறது.

எனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது என பல மகாயான சூத்திரங்கள் கூறுகின்றன.


காரண்டவியூக சூத்திரம்

[தொகு]

இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்" [1]

ஷிங்கோன் பௌத்தத்தில் பயன்பாடு

[தொகு]

ஷிங்கோன் பௌத்தத்திலும் இந்த மந்திரம் பரவலாக பயனபடுத்தப்படுகிறது. எனினும் இந்த மந்திரத்தை விட ஓம் அரோ-ருக்ய ஸ்வாஹா என்ற மந்திரத்தையே அவலோகிதேஷ்வரருக்காக அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

வேற்றுமை

[தொகு]

இந்த மந்திரத்தில் இறுதியில் ஹ்ரீ:(ह्री:) என்ற பீஜாக்‌ஷரம் எப்போதாவது இணைக்கப்படுவதுண்டு. ஹ்ரீ: என்பது அமிதாப புத்தரின் பீஜாக்‌ஷரம் ஆகும். அவலோகிதேஷ்வரர் அமிதாபரின் அம்சமாக கருதப்படுவதால் இதை மணி மந்திரத்தில் இறுதியில் சேர்க்கப்படுவதுண்டு.

நூல்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


இவற்றையும் படிக்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Om mani padme hum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Khandro.net: Mantras
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_மணி_பத்மே_ஹூம்&oldid=3237461" இலிருந்து மீள்விக்கப்பட்டது