சுஜாதா, பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுஜாதை அல்லது சுஜாதா, மகத நாட்டின் போர்ப்படைத் தலைவர்களில் ஒருவரது மகள் ஆவார். சுஜாதை தனக்கு தகுந்த கணவன் வேண்டுமென்று, வீட்டின் அருகே உள்ள ஆலமரத்தின் தேவதையை வலம் வந்து தொழுததன் பயனாக, அவளுக்கு பிடித்த கணவன் அமைந்தான்.

தனது கோரிக்கையை நிறைவேற்றிய ஆலமரத் தேவதைக்கு பால் அன்னம் படைக்க, சுஜாதை ஆலமரத்தின் அருகில் சென்ற போது, ஆலமரத்தடியில் போதிசத்துவர் தியானத்தில் அமர்ந்திருந்தை கண்டு, அவரே தான் நினைத்த ஆலமரத் தேவதை எனக் கருதி, தான் கொண்டு வந்த பால் அன்னத்தை கௌதம புத்தருக்கு படைத்து, வாழ்த்துப் பெற்று கொண்டாள். [1][2]

சுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே, போதிசத்துவர் அருகில் உள்ள உருவேலாவின் அரசமரத்தடியில் அமர்ந்து தியானித்திருந்த நாளான வைகாசி மாத பௌர்ணமி அன்று சம்போதி ஞானம் அடைந்தார். (எனவே அந்த அரசமரத்தை போதி மரம் என்பர்.)

ஞானஒளி கிட்டிய கௌதம புத்தர், மீண்டும் ஒரு முறை கயை என்று தற்போது அழைக்கப்படும் உருவேலா கிராமத்திற்கு வருகை புரிந்த போது, சுஜாதை கௌதம புத்தரின் முதல் பெண் உபாசகர் ஆனார்.

மறக்க முடியாத இரண்டு உணவுகள்[தொகு]

கௌதம புத்தர் தமது இறுதிக் காலம் நெருங்கும் வேளையில், தமது சீடர் ஆனந்தரிடம், தனக்கு முதலில் சுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே தமக்கு சம்போதி ஞானம் கிட்டியதாகவும், இறுதியாக சுந்தன் படைத்த பன்றி உணவினால் தமக்கு பரிநிர்வாணம் கிடைக்க உள்ளதாகவும் நினைவு கூர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Why I think Sujata is so important in Buddhism". Archived from the original on 2017-10-25. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  2. புத்தரும் சுஜாதையும்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா,_பௌத்தம்&oldid=3728456" இலிருந்து மீள்விக்கப்பட்டது