கும்ஹரார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கும்ஹரார் தொல்லியல் களம்
कुम्हरार
பாட்னா
பண்டைய பாடலிபுத்திரம் அருகே அமைந்த கும்ஹரார் தொல்லியல் களம்
பண்டைய பாடலிபுத்திரம் அருகே அமைந்த கும்ஹரார் தொல்லியல் களம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Patna" does not exist.இந்தியாவின் பாட்னா அருகமைந்த கும்ஹரார் தொல்லியல் களம்
ஆள்கூறுகள்: 25°35′56″N 85°11′5″E / 25.59889°N 85.18472°E / 25.59889; 85.18472ஆள்கூற்று: 25°35′56″N 85°11′5″E / 25.59889°N 85.18472°E / 25.59889; 85.18472
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
நகர்புறம்பாட்னா
மொழிகள்
 • பேச்சு மொழிகள்இந்தி, மகதி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்800026
நகரத் திட்ட குழுமம்பாட்னா மண்டல வளர்ச்சி முகமை
குடிமை நிர்வாகம்பாட்னா மாகநகராட்சி மன்றம்
இணையதளம்patna.nic.in

கும்ஹரார் அல்லது கும்ரஹார் (Kumhrar or Kumrahar), இந்தியாவின் பிகார் மாநிலத்தலைநகரான பாட்னா மாநகராட்சிக்குட்பட்ட, பண்டைய பாடலிபுத்திரம் நகரத்தின் சிதிலமைடைந்த தொல்லியல் அகழ்வாய்வு களமாகும். கும்ஹரார் தொல்லியல் களம், பாட்னா தொடருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

கும்ஹரார் பகுதியை அகழ்வாய்வு செய்த போது, மௌரியப் பேரரசு (கிமு322–185) காலத்திய தியான மண்டபக் கூரையின் மேற்பரப்பைத் தாங்கும் 80 தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அகழ்வாய்வில் பாடாலிபுத்திரத்தின் கும்ஹாரர் தொல்லியல் களம் கிமு 600 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கண்டறிந்துள்ளனர்.[2] மேலும் கும்ஹரார் தொல்லியல் களம் மௌரியப் பேரரசர்களான அஜாதசத்ரு, சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகர் ஆகியவர்களின் பண்டையத் தலைநகரங்களாக விளங்கியது. கும்ஹரார் பகுதி கிமு 600 முதல் கிபி 600 முடிய புகழுடன் விளங்கியது.[2]

80 தூண் மண்டபம்[தொகு]

மௌரியர் காலத்திய கும்ஹரார் தொல்லியல் களத்தின் தூண்கள் எட்டு வரிசைகளாகவும், வரிச்சைக்கு பத்து தூண்கள் வீதம் 80 தூண்கள் கொண்டிருந்தது. ஒன்றிற்கொன்று 4.57 மீட்டர் இடைவெளியுடன் கூடிய, மணற்கல்லான இத்தூண்கள் 9.75 மீட்டர் உயரம் கொண்டது. அதில் 2.74 மீட்டர் நிலத்தடியில் உள்ளது. இந்த என்பது தூண்களும் ஒரு மண்டபத்தின் கூரையைத் தாங்கி நிற்கும் வண்னம் அமைக்கப்பெற்றிருந்தது.[3][4][5]

பிற கட்டமைப்புகள்[தொகு]

கும்ஹரார் தொல்லியல் களத்தின் வரைபடம்

ஆனந்த விகாரை: அகழாய்வில் பௌத்த விகாரத்தின் அஸ்திவார செங்கற்கள், மரத்தூண்கள், களிமண்னால் ஆன உருவங்கள் கிடைத்துள்ளது.[2]
ஆரோக்கிய விகாரை: அகழ்வாய்வின் போது கண்டறிந்த ஆரோக்கிய விகாரத்தில் ஆயுர்வேத மருத்துவ அறிஞரான தன்வந்திரி தலைமையில் மருத்துவ ஆய்வுகள் நடைபெற்றது.[5]
துருக்கிய தேவி கோயில் – 1890ல் நடந்த அகழ்வாய்வில் கிமு 2 – 1ஆம் நூற்றாண்டின் சுங்கர் காலத்திய இரட்டை முகம் கொண்ட துருக்கிய அல்லது துருகி தேவியின் சிற்பத்துடன் கூடிய தூபி கிடைத்துள்ளது.[6]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Altekar, A. S. Coins in Kumrahar and Bulandibag (Pataliputra) Excavations in 1912-13. (1951)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்ஹரார்&oldid=2801729" இருந்து மீள்விக்கப்பட்டது