உள்ளடக்கத்துக்குச் செல்

அஜாதசத்துரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஜாதசத்ரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஜாதசத்துரு
சாஞ்சியிலிருந்து ராஜகிரகம் செல்லும் அரச ஊர்வலத்தின் சிற்பம் [1]
ஹரியங்கா வம்சத்தின் இரண்டாவது பேரரசர்
ஆட்சிக்காலம்ஆட்சிக் காலம் கிமு 492 – 460 [2] or early 4th cent. BCE[3]
முன்னையவர்பிம்பிசாரன்
பின்னையவர்உதயணன்
இறப்புகிமு 460 [2] அல்லது கிமு 380 [3]
துணைவர்வஜ்ஜிரா
குழந்தைகளின்
பெயர்கள்
உதயணன்
அரசமரபுஹரியங்கா வம்சம்
தந்தைபிம்பிசாரன்

அஜாதசத்துரு (Ajatashatru) வட இந்தியாவிலிருந்த மகதத்தை கிமு 494-கிமு 462 வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தின் இரண்டாவது அரசன் ஆவார்.[4][5]

பழங்காலத்து பௌத்த பாலி குறிப்புகளில் இவனைப்பற்றி அறிய முடிகிறது. இவன் தனது தந்தை பிம்பிசாரனைக் கொன்று மகதத்தின் அரியாசனத்தை அடைந்ததின் மூலம் மகதம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டான். இதைப்பற்றி பௌத்த நூலான சமாதான சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவனும் புத்தரும் ஒருகாலத்தவர். அப்பொழுது புதிதாக தோன்றிய பௌத்தமும், அதன் சங்கமும் இவனது ஆதரவினால் மகதத்தில் செழிப்புடன் வளர்ந்தது. இவன் தனது தந்தையை கொல்லாமல் இருந்திருந்தால் பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடைந்திருப்பானென்று புத்தர் சமனபால சுத்தாவில் கூறியுள்ளார்.

வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பரின் கூற்றுப்படி, அஜாதசத்ருவின் மகன் உதயணன் என்பவர் பாட்னா எனும் நகரம் உருவாக காரணமாயிருந்திருக்கிறான், மகதத்தின் தலைநகரமான ராஜகிரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறான். மகதத்தின் அரியாசனத்தை அடைய தனது தந்தை பிம்பிசாரனைக் கொண்றான். தனது அண்டை நாடுகளான கோசலத்தையும், காசியையும் வென்று மகத்துடன் இனைத்துக்கொண்டான். தற்போதய பீகார் மற்றும் நேபாளத்திலிருந்த விரிச்சி கூட்டரசுடன் பதினாறாண்டுகள் போர் புரிந்தான்.


மேலும் படிக்க

[தொகு]


குறிப்புகள்

[தொகு]
  1. John Marshall, A Guide to Sanchi, 1918 p.58ff (Public Domain text)
  2. 2.0 2.1 India's Ancient Past, by R.S. Sharma
  3. 3.0 3.1 India: A History. Revised and Updated, by John Keay
  4. Ajathashatru
  5. "The Chronicles of Ajatashatru – The King of Magadh Empire!". Archived from the original on 2017-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜாதசத்துரு&oldid=4062314" இலிருந்து மீள்விக்கப்பட்டது