தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

File:Sanchi2.jpg

சாஞ்சியிலுள்ள புத்த ஸ்தூபி

தூபி அல்லது ஸ்தூபி என்பவை இந்து சமயம் மற்றும் பௌத்த ஆலயங்களின் மேலாக அமையும் கோபுரம் அல்லது விமானத்தின் உச்சி ஆகும். பௌத்த மதத்தினர் தம் சமயத் தலைவர்களுக்கு எழுப்பும் நினைவுச் சின்னங்களே பெரும்பாலும் 'ஸ்தூபிகள்' எனப்படுகின்றன. சாஞ்சி, அமராவதி, நாகார்ஜுனகொண்டா முதலிய இடங்களிலுள்ள தூபிகள் புகழ்பெற்றவை. இவை புத்தரின் அஸ்தியை வைத்து அதன் மேல் எழுப்பப்பட்டவை. அவருடைய நகம், மயிர்ச்சுருள், பல், எலும்புத்துண்டு ஆகியவற்றின் மீதும், அவர் தியானம் செய்த இடங்களிலும் தூபிகள் எழுப்பப்பட்டன.[1] [2]

சமண மதத்தவரும் சில தூபிகள் எழுப்பியுள்ளனர். மதுராவில் சமண மதத்தினரின் புகழ்பெற்ற தூபி ஒன்று உள்ளது. இந்து சமயக் கோயில் விமானத்தின் உச்சிக்கும் 'தூபி' என்றே பெயர். இதன் மீது வைக்கப்படும் கலசத்தை 'தூபிக்குடம்' என்பர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The stupa
  2. Stupa BUDDHISM
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூபி&oldid=2397870" இருந்து மீள்விக்கப்பட்டது