தலித் பௌத்த இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலித் பௌத்த இயக்கம் (Dalit Buddhist movement, சிலரால் நவபௌத்தம் அல்லது நவாயானா)[1] 19வது, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பௌத்த சமய புத்துணர்வு இயக்கமாகும். இந்து சமயம் அவர்களை சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருப்பதற்கு எதிராக தலித்கள் பௌத்த சமயத்திற்கு மாற வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் விடுத்த அறைகூவலை அடுத்து இந்த இயக்கம் ஊக்கம் பெற்றது.[2]

துவக்கங்கள்[தொகு]

இந்தியாவில் ஆதிக்கமான சமயமாக இருந்த பௌத்தம் 12ஆம் நூற்றாண்டு முதல் முசுலிம் படையெடுப்புகளாலும் கட்டாய மத மாற்றங்களாலும் படிப்படியாக தனது ஆதிக்கத்தை இழந்தது.[3] 1891இல் இலங்கையின் பௌத்தத் தலைவர் அனகாரிக தர்மபால மகா போதி சமூகம் உருவாக்கி இந்தியாவில் மீண்டும் பௌத்த சமயத்திற்கு உயிரூட்டினார்.[4] மகாபோதி சமூகம் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்களையே ஈர்த்தது.[5]

தென்னிந்தியாவில்[தொகு]

1890இல், பண்டிதர் அயோத்தி தாசர் (1845–1914), சாக்கிய பௌத்த சமூகம் அல்லது இந்திய பௌத்தர்களின் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் முதல் தலைவராக செருமனியில் பிறந்த அமெரிக்கரான பால் காருசு இருந்தார்.

சித்த மருத்துவராக இருந்த அயோத்தி தாசர் தமிழ் தலித்துக்கள் துவக்கத்தில் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். சில முதன்மை பெற்ற தலித் மக்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை அணுகி "தமிழ் பௌத்தத்தை" புதுப்பிக்க உதவி வேண்டினார். ஆல்காட் அயோத்தி தாசர் இலங்கை சென்று புத்தபிக்கு சுமங்கல நாயகெயிடம் தீட்சை பெற உதவினார். இந்தியா திரும்பிய பின்னர் தாசர் சாக்கிய பௌத்த சமூகத்தை சென்னையில் நிறுவினார்.[6] பல கிளைகளையும் நிறுவி அனைத்தையும் இணைக்கும் செய்திமடலாக ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை சென்னையிலிருந்து 1907இல் வெளியிட்டார். இந்த இதழில் தமிழ் பௌத்தத்தின் வரலாறு, மரபுகள் மற்றும் செயல்முறைகளை விளக்கினார். பௌத்த உலகில் நிகழும் புதிய நிகழ்வுகள், பௌத்த சமயத்தின் பார்வையில் இந்தியத் துணைக்கண்ட வரலாறு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார். இவரை அடுத்து ஆந்திரப் பிரதேசத்திலும் பாக்கிய ரெட்டி வர்மா (மாதாரி பாகையா) என்ற தலித் தலைவரும் புத்த சமயத்தால் ஈர்க்கப்பட்டு தலித்கள் புத்த சமயத்திற்கு மாறுவதை ஆதரித்தார்.

உத்தரப் பிரதேசத்தில்[தொகு]

அம்பேத்கர்[தொகு]

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்[தொகு]

நாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி

நாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கோள்ளப்பட்டன. அக்டோபர் 16, 1956இல் சந்திராபூரில் மற்றுமொரு கூட்டமான மதமாற்ற விழாவை அம்பேத்கர் நடத்தினார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Omvedt, Gail. Buddhism in India : Challenging Brahmanism and Caste. 3rd ed. London/New Delhi/Thousand Oaks: Sage, 2003. pages: 2, 3–7, 8, 14–15, 19, 240, 266, 271
  2. Thomas Pantham, Vrajendra Raj Mehta, Vrajendra Raj Mehta, (2006). Political Ideas in Modern India: thematic explorations. Sage Publications. ISBN 0-7619-3420-0. http://books.google.com/?id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22. 
  3. Islam at War: A History By Mark W. Walton, George F. Nafziger, Laurent W. Mbanda (page 226)
  4. Ahir, D.C. (1991). Buddhism in Modern India. Satguru. ISBN 81-7030-254-4. 
  5. Das, Bhagwan (1998). Revival of Buddhism in India. Role of Dr Baba Sahib B.R.Ambedkar. Lucknow: Dalit Today Prakashan. ISBN 81-7030-254-4 
  6. Geetha, V. (2001). Towards a Non Brahmin Millennium – From Iyothee Thass to Periyar. Bhatkal & Sen, India. ISBN 81-85604-37-1. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

உங்களாவிய அமைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்_பௌத்த_இயக்கம்&oldid=2608858" இருந்து மீள்விக்கப்பட்டது