தீக்சாபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீக்சாபூமி
தீக்சாபூமி
Map
பொதுவான தகவல்கள்
வகைசமய மற்றும் வரலாற்று கட்டிடம்.
கட்டிடக்கலை பாணிதூபி
இடம்நாக்பூர்,மகாராட்டிரம் , இந்தியா
முகவரிசோகமேளா விடுதி அருகே, மத்திய நாக்பூர்[1]
ஆள்கூற்று21°7′41″N 79°4′1″E / 21.12806°N 79.06694°E / 21.12806; 79.06694
கட்டுமான ஆரம்பம்சூலை 1978
துவக்கம்திசம்பர் 18, 2001
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சியோ டான் மல்

தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும்.[2][3]. இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும் இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. [4].

தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெரும்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.

தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. பூமி நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ளும் இடமாகும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கிய இடங்களாகப் போற்றப்படும் இரு இடங்களில் இது ஒன்று. மற்றொன்று மும்பையிலுள்ள சைதன்யபூமி ஆகும்.

இங்குள்ள பௌத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது.

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்[தொகு]

நாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி

நாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கோள்ளப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Keer, Dhananjay (in Marathi). Dr. Ambedkar: Life and Mission. 
  2. "Life of Babasaheb" (Web). Ambedkar.org. பார்க்கப்பட்ட நாள் January 6, 2009. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. Pritchett, francis. "In the 1950" (Web). Columbia.edu. பார்க்கப்பட்ட நாள் January 6, 2009. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  4. ஒடுக்குமுறையை எதிர்த்து தீண்டத்தகாதவர்கள் பௌத்த சமயத்தைத் தழுவினர்
  • Special issue of Lokrajya, the publication of Govt. of Maharashtra on silver jubilee of 1956 ceremony.
  • Deeksha, Special issue of Daily Sakaal in October 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்சாபூமி&oldid=3431987" இலிருந்து மீள்விக்கப்பட்டது