திவ்வியவதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்டது. இக்கதைகள் பண்டைய மூலசர்வாஸ்திவாத பௌத்த சாத்திரமாக வினய சாத்திரங்களில் காணப்படுகிறது.[1] இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என அறியப்படுகிறது.[2] [3] ஒரு தனி மனிதனின் முந்தைய பிறவிகளின் கர்மவினைகள், தற்போதைய பிறவியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை, கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துரைப்பது போன்று, இந்நூலின் கதைகள் அமைந்துள்ளன.[3]

நூலின் உள்ளடக்கம்[தொகு]

திவ்வியவதனம் எனும் சமசுகிருத மொழி நூல், புகழ் பெற்ற அசோகவதனம் கதை, அசோகரின் வரலாற்று கதை உட்பட, மொத்தம் முப்பத்தி எட்டு கதைகள் கொண்டது. இந்நூலை ஜான் ஸ்டிராங் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

ஏட்டுச் சுவடிகளில் சமசுகிருத மொழியில் இருந்த திவ்வியவதனம் எனும் நூலை, எட்வர்டு பைல்ஸ் கோவெல் மற்றும் ஆர்.ஏ. நீல் என்பவர்கள், 1886ல் சமசுகிருத மொழியில் அச்சு வடிவில் நூலாக வெளியிட்டனர்.[4] இந்த சமசுகிருத அச்சு நூலை, பி. எல். வைத்தியா என்பவர் 1959ல் திருத்திய பதிப்பாக வெளியிட்டார்.[5]

இந்நூலின் சகசோதக அவதானக் கதையின் துவக்கத்தில், பவச்சக்கரம் எனும் தரும நெறிகளுடன் ஒரு மனிதன் வாழ வேண்டிய முறையை கௌதம புத்தர் விளக்குகிறார். [6]

இந்நூலின் ருத்திராயன அவதானக் கதையில் (Rudrāyaṇa-avadāna), மன்னர் ருத்திராயானருக்கு, கௌதம புத்தர் பவச்சக்கரத்தின் பெருமையை விளக்குகிறார். மேலும் இக்கதையில் மன்னர் ருத்திராயானர், மகதப் பேரரசர் பிம்பிசாரருக்கு, நவமணிகளுடன் கூடிய, இடுப்புக் கயிற்றை பரிசாக அளித்தான். கைம்மாறாக தான் எதை மன்னர் ருத்திராயனருக்கு பரிசளிப்பது என பிந்துசாரர் ஆழ்ந்து சிந்திக்கும் போது, கௌதம புத்தரை அடைந்து உபதேசம் கேட்கையில், பவச்சக்கரம் ஓவியத்தை வரைந்து, அதனை மன்னர் ருத்திராயனருக்கு பரிசளிக்குமாறு கூறினார். பிம்பிசாரரும் அவ்வாறே பவச்சக்கரத்தை ஓவியமாக வரைந்து மன்னர் ருத்திராயனருக்கு பரிசாக அனுப்பினார். பவச்சக்கரம் அறிவுறுத்தும் வாழ்க்கை நெறிகளை அறிந்த மன்னர் ருத்திராயனர், வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை அறிந்து அதன் படி, தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். [7]

திவ்வியவதனக் கதைகள்[தொகு]

 1. கோடிகர்ணா அவதானம்
 2. பூர்ண அவதானம்
 3. மைத்திரேய அவதானம்
 4. பிராம்மனதாரிகா அவதானம்
 5. ஸ்துதிபிராம்மன அவதானம்
 6. இந்திரப்பிராம்மன அவதானம்
 7. நகராவலாம்பிகை அவதானம்
 8. சுப்பிரியா அவதானம்
 9. மெந்தாகார்க்கபத்திவிபூதி பரிச்சேதம்
 10. மெந்தக அவதானம்
 11. அசோகவதனம் (அசோகரின் வரலாறு)
 12. பிராதிகர்ய சூத்திரம் (சிராவஸ்தியில் புத்தர் செய்த அட்டாமாசித்திகளை விளக்குவது)
 13. சுவாகத அவதானம்
 14. சூகாரிகா அவதானம்
 15. சக்கரவர்த்திவியாக்கிரத அவதானம்
 16. சுகபோதக அவதானம்
 17. மாந்தாதா அவதானம்
 18. தர்மருசி அவதானம்
 19. ஜோதிஷ்க அவதானம்
 20. கனகவர்ண அவதானம்
 21. சகசோதகதா அவதானம்
 22. சந்திரபிரபா போதிசத்துவாச்ச்சாரியா அவதானம்
 23. சங்கரக்சிதா அவதானம்
 24. நாககுமார அவதானம்
 25. பாம்சுப்பிரதான அவதானம்
 26. குணாளன் அவதானம்
 27. விசோக அவதானம்
 28. அசோக அவதானம்
 29. சுத்தநாககுமார அவதானம்
 30. தோயிகாமகா
 31. ரூபாவதி அவதானம்
 32. சார்தூலாகர்ணா அவதானம்
 33. தானாதிகர்ணா
 34. சூடாபக்ச அவதானம்
 35. மாகண்டிகா அவதானம்
 36. ருத்திராயன அவாதானம்
 37. மைத்திரகன்யக அவதானம்

குறிப்பிடத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]

மொழிபெயர்ப்பாளர் தலைப்பு பதிப்பகம் குறிப்புகள் ஆண்டு
ஜோயல் தாத்தெல்மென் Heavenly Exploits, ISBN 978-0-8147-8288-0 நியுயார்க் பல்கலைக்கழக அச்சுக்கூடம் 1, 2, 30 மற்றும் 36 அவதானங்களின் சமசுகிருத மூலத்துடன் 2005
ஆண்டி ரோட்மென் Divine Stories, ISBN 9780861712953 விஸ்டம் பதிப்பகம் முதல் 17 கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு 2008

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Fables in the Vinaya-Pitaka of the Sarvastivadin School" by Jean Przyluski, in The Indian Historical Quarterly, Vol.V, No.1, 1929.03
 2. Winternitz, Moriz (1993). A History of Indian Literature: Buddhist literature and Jaina literature. Motilal Banarsidass Publishers. பக். 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120802650. 
 3. 3.0 3.1 Robert Buswell Jr.; Donald S. Lopez, Jr. (2013). The Princeton Dictionary of Buddhism. Princeton University Press. பக். 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400848058. 
 4. Neil, Robert Alexander; Cowell, Edward B.: The Divyâvadâna: a collection of early Buddhist legends, now first edited from the Nepalese Sanskrit mss. in Cambridge and Paris; Cambridge: University Press 1886.
 5. Vaidya, P. L. (1959). Divyāvadāna பரணிடப்பட்டது 2014-10-25 at the வந்தவழி இயந்திரம், Darbhanga: The Mithila Institute of Post-Graduate Studies and Research in Sanskrit Learning (romanized)
 6. Bhikkhu Khantipalo (1995-2011). The Wheel of Birth and Death Access to Insight
 7. Dalai Lama (1992). The Meaning of Life, translated and edited by Jeffrey Hopkins. Wisdom, p. 45

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்வியவதனம்&oldid=3404662" இருந்து மீள்விக்கப்பட்டது