யோகசாரம்
யோகசாரம் மகாயான பௌத்தத்தின் ஒன்பது பிரிவில் சிறப்பாக கருதப்படும் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று மாத்தியமிகம் ஆகும். யோகசாரப் பிரிவை நிறுவியவர் அசங்கர் மற்றும் வசுபந்து எனும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.யோகசார நெறியில் உள்ளத்தில் உருகிப் புத்தரின் அருளைப் பெற்று உய்ய வழி காண்பது யோகசாரத்தின் கொள்கை ஆகும். [1]
கொள்கைகள்
[தொகு]யோகசார பௌத்தர்கள் கருத்துப் பொருள் உண்மைவாதிகள் (Idealists). உள்ளத்தின் விரிவே உலகமாகத் தோன்றுகிறது. சர்வம் புத்திமயம் ஜெகத் என்பது யோகசாரத்தின் கொள்கை.
புற உலகை பொய்யெனத் தள்ளும் யோகசாரா விஞ்ஞானவாதிகள் மனோ விஞ்ஞானமாகிய கந்த விஞ்ஞானத்தையும், அது அடங்கியிருக்கும் வியாபகப் பொருளாகிய ஆலய விஞ்ஞானத்தையுமே உள்பொருளெனக் கொண்டவர்கள். இவ்விரண்டும் முறையே சீவாத்மா பரமாத்மாவுடன் ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ள இத்தத்துவம் உலகம் சூனியமயம் என்பதை எதிரொலித்த இத்தத்துவத்தை பின்னர் ஆதிசங்கரர் கையாண்டதால் பிற்காலத்தவர் ஆதிசங்கரரை பிரசன்ன பௌத்தர், அதாவது வாழும் புத்தர் என நகையாடினர்.
பௌத்தத்தின் ஆறு அணிகலங்கள்
[தொகு]புத்தரின் உபதேசங்களை மக்கள் முன்னிலையில் விளக்கி பெருமை சேர்த்த அறுவரில் யோகசாரம் கொள்கை நிறுவிய வசுபந்துவும் ஒருவர். மற்றவர்கள் நாகார்ஜுனர், ஆரியதேவர், அசங்கர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி ஆவர். இந்த அறுவரை பௌத்த சமயத்தில் அணிகலன்களாக குறிப்பர். [2]