அனாதபிண்டிகன்
அனாதபிண்டிகன் | |
---|---|
வள்ளல் அனாதபிண்டிகன் | |
வேறு பெயர்(கள்) | சுத்தாத்தன் |
மதப் பணி | |
ஆசிரியர் | கௌதம புத்தர் |
அனாதபிண்டிகன் (Anathapindika) என்ற சமசுகிருத சொல்லிற்கு ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் உணவளிப்பவன் எனப் பொருளாகும். அனாதபிண்டிகண் புத்தரின் சாதாரணச் சீடர்களின் தலைமையானவர் ஆவார். இவரது இயற் பெயர் சுத்தாத்தன் ஆகும். இவர் பெரும் செல்வந்தன். புத்தரை துவக்க காலத்திலிருந்தே ஆதரவு அளித்தவன்.
சிராவஸ்தி நகரத்திற்கு வெளியே ஜேடவனம் என்ற பெரும் பூங்காவை கோசல மன்னர் பசனேதியிடமிருந்து 1.8 மில்லியன் தங்கக் காசுகள் விலை கொடுத்து, கௌதம புத்தர் தியானிப்பதற்கும், மக்களுக்கு உபதேசிப்பதற்காகவும் வழங்கியவர்.[1] இறுதி வரை புத்தர் செல்லுமிடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து, புத்தரின் உபாசகர்களில் ஒருவராக இருந்தவர். இவரது கொடைத் தன்மைக் குறித்து திரிபிடகங்களில் ஒன்றான வினயபிடகம் Vin.ii.155-6-இல் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-06 அன்று பார்க்கப்பட்டது.