பசேனதி
பசேனதி | |
---|---|
கோசல மன்னர் | |
மன்னர் பசேனதி என்ற பிரசேனஜித், கௌதம புத்தரை வணங்கச் செல்லுதல் | |
ஆட்சிக்காலம் | கிமு 6-ஆம் நூற்றாண்டு |
ராணி | மகத இளவரசி மல்லிகா வாசவகத்தியா |
குழந்தைகளின் பெயர்கள் | விருதாகன் வஜ்ஜிரா |
அரசமரபு | இச்வாகு |
தந்தை | சஞ்சய மகாகோசாலன் |
பசேனதி (Pasenadi) (சமக்கிருதம்: Prasenajit) (கிமு 6-ஆம் நூற்றாண்டு), பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் உள்ள கோசல நாட்டு மன்னர் ஆவார். புத்தர் காலத்திய, இச்வாகு குல மன்னரான இவரது தலைநகரம் சிராவஸ்தி ஆகும். இவர் மன்னர் சஞ்சய மகாகோசாலரின் மகனாவார்.[2] மன்னர் பசேனதி புத்தரின் புகழ் பெற்ற உபாசகர் ஆவார். இவர் கோசலத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்காக பல விகாரைகள் நிறுவியவர். இவரது தலைநகரான சிராவஸ்தியில் அனாதபிண்டிகன் நிறுவிய ஜேதவனத்தில், புத்தர் அடிக்கடி தங்கி மக்களுக்கு அறங்களை எடுத்துக் கூறுவார்.
வாழ்க்கை
[தொகு]கோசல மன்னர் பசேனதி எனும் பிரஸ்னஜித் தக்சசீலாவில் படித்தவர். [3] இவரது முதல் மனைவி மகத நாட்டு இளவரசியாவர். [3]. இரண்டாம் மனைவி வாசவகத்தியா, மகாநாமாவின் வளர்ப்பு மகள் ஆவார். இரண்டாம் மனைவி வாசவகத்தியாவிற்கு விதூதபன் என்ற மகனும்; வஜ்ஜிரா என்ற மகளும் பிறந்தனர். வஜ்ஜிராவை, மகத இளவரசர் அஜாதசத்ருவுக்கு மணமுடித்தனர். [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதாங்கள்
[தொகு]- Sastri, K. A. Nilakanta, ed. (1988) [1967], Age of the Nandas and Mauryas (Second ed.), தில்லி: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0465-1
{{citation}}
: Unknown parameter|editorlink=
ignored (help) - Sen, Sailendra Nath (1999) [1988], Ancient Indian History and Civilization (Second ed.), New Age International Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-1198-3