தேவதத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவதத்தன் (Devadatta) (சமசுகிருதம் & பாளி: देवदत्त) சாக்கிய குல புத்தரின் நெருங்கிய உறவினரும், பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராகவும் விளங்கியவர். சாக்கிய நாட்டு இளவரசன் தேவதத்தன், புத்தரின் தாய்மாமன் சுப்பதத்தா - அமிதா இணையருக்கு பிறந்தவர். தேவதத்தனின் மனைவி பெயர் அமிதா. தேவதத்தனின் உடன் பிறந்த சகோதரி பத்தகச்சானா என்ற யசோதரையை மணந்தவரே சித்தார்தன் ஆவார். புத்தரின் நேரடி சீடர்களில் தேவதத்தனும் ஒருவராவார். [1][2]

மகத நாட்டு பேரரசர் பிம்பிசாரரின் மகனும், பட்டத்து இளவரசனும் ஆன அஜாதசத்ரு தேவதத்தன் மீது மரியாதை வைத்திருந்தான். ஒரு முறை புத்தரிடம் சென்று, தனக்கு பௌத்த சங்கத்தின் தலைமை பதவி ஏற்பதற்கு வசதியாக, தன்னை புத்தரின் அடுத்த வாரிசாக அறிவிக்கக் கோரினான். தேவதத்தனின் கோரிக்கையை ஏற்க மறுத்த புத்தரைக் கொல்ல முற்பட்டு, ஒரு முறை புத்தர் வரும் பாதையில் மலையிலிருந்து பெரும் பாறைகளை உருட்டி விட்டான். ஆனால் புத்தரைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் மனம் உடைந்த தேவத்தன் தான் பிறந்த சாக்கிய குல பிக்குகளை ஒன்று சேர்த்து, புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. புத்தரும் தேவதத்தனும்
  2. தேவதத்தன்
  3. Horner, I.B. (1963). The book of discipline Vol. V (Cullavagga), London Luzac, pp. 279-281

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதத்தன்&oldid=3418379" இருந்து மீள்விக்கப்பட்டது