தர்மசக்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
24 ஆரங்கள் கொண்ட தர்மச்சக்கரத்தனடியில் வழிபடும் பௌத்தர்களின் சிற்பம், சாஞ்சி, இந்தியா

.

எண்வகை பௌதத மார்க்கங்களை சித்தரிக்கும் தர்மச்சக்கரம்

தர்மசக்கரம்(பாளி:தர்மசக்க, திபெ chos kyi 'khor lo, சீனம் fălún 法輪) என்பது தர்மத்தினை குறிக்கும் ஒரு சின்னம் ஆகும். இதை போன்ற ஒரு சின்னம் சமண மதத்திலும் பயன்பாட்டில் உள்ளது. தர்மசக்கரம் அஷ்டமங்கள சின்னங்களுள் ஒன்றாகும். [1][2]பௌத்த சமயத்தில், தர்மச்சக்கரமானது பிறவிச் சுழற்சியைப் பற்றிய கருத்துக்களை சித்தரிக்கிறது. முதன் முதலில் அசோகர் நிறுவிய தூபிகளில் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டதால், இதனை அசோகச் சக்கரம் என்றும் அழைப்பர்.

வரலாறு[தொகு]

தர்மசக்கர சின்னம், எட்டு கம்பிகளோ அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகளையோ கொண்டுள்ளது. இந்திய கலைகள், மிகப்பண்டைய பௌத்த சின்னமாக இது கருதப்படுகிறாது. தர்மசக்கரம், அனைத்து பௌத்த பௌத்த நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் எளிய நிலையில், தர்மசக்கரம் பௌத்த மதத்தின் பரிபூரண சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

விளக்கம்[தொகு]

எளிமையான தர்மசக்கரம்

தர்ம சக்கரத்தின் எட்டு ஆரங்கள், பௌத்தத்தின் எட்டு உயரிய வழிகளை குறிக்கிறது. அறியாமை அழிக்கும் விதமாக கூரிய முனைகளுடன் உள்ளதாக கொள்ளப்படுகிறது.

தர்ம சக்கரத்தின் பிற விளக்கங்கள்:

  • இதன் வட்ட வடிவம், தர்ம போதனையின் முழுமையினை குறிக்கிறது.
  • மையப்பகுதி, தியானத்தை குறிக்கிறது.
  • இதன் ஓரம், சமாதியை குறிக்கிறது.

தர்மசக்கரத்திற்குரிய முத்திரை தர்மசக்கர முத்திரை என அழைக்கப்படுகிறது. தர்மசக்கரம் திபெத்திய பௌத்தத்தில் எட்டு மங்கள சின்னங்களுள் (அஷ்டமங்கலம்) ஒன்றாக கருதப்படுகின்றது.

தர்மசக்கர சுழற்சி[தொகு]

புத்தர் ஒரு முக்கிய போதனையை நிகழ்த்துவது தர்மசக்ர சுழற்சி என கொள்ளப்படுகிறது. இதை வடமொழியில் தர்மசக்ர பிரவர்த்தனம் என அழைக்கின்றனர்.

அனைத்து பௌத்த பிரிவுகளும், புத்தர் முதன்முதலில் சார்நாத்தில் மான் பூங்காவில், ஐந்து துறவிகளுக்கு உபதேசம் செய்து நிகழ்ச்சி, முதல் தர்மசக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதை குறிக்கும் வகையிலே, சில சமயம், தர்மசக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படுவதுண்டு.

தேரவாத பௌத்தத்தில் இது மட்டும் அங்கீகரிப்பட்ட தர்மசக்ர சுழற்சி ஆகும். பாளி சூத்திரங்களில் இடம்பெறாத வேறெந்த சுழற்சியும் தேரவாத பௌத்தத்தினரால ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனினும் மகாயானம் மற்றும் வஜ்ரயானம் பல்வேறு சுழற்சிகளை குறிப்பிடுகிறது. இச்சுழற்சிகளுள் புத்தர் பிரக்ஞா பாரமித சூத்திரங்களை உபதேசித்தது, மகாவைரோசன சூத்திரத்தை உபதேசித்தது, அபிதர்மத்தை உபதேசித்தது ஆகியவை கூடுதலாக கொள்ளப்படுகிறது.

பிற பயன்பாடுகள்[தொகு]

யூனிகோடு தர்மசக்கரம்

யூனிகோடில், தர்மசக்கரம் Wheel of Dharma என அதன் எட்டுக்கோல் வடிவத்தில் காணப்படுகிறது. இதன் யூனிகோடு குறியீடு U+2638 (☸).

சாரநாத்த்தில் உள்ள, தூபியில் உள்ள அசோகரின் தர்மசக்கரம் இந்திய தேசியக் கொடியின் நடுவில் உள்ளது. இந்த தர்ம சக்கரம் தர்மத்தை குறிக்கிறது. இதே சின்னம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ முத்திரையிலும் காணப்படுகிறது.

சமண மதத்திலும், தர்மசக்கரம் அகிம்சையின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது.

இந்து மதத்திலும் திருமாலின் சின்னமாக சுதர்சன சக்கரம் காணப்படுகிறது. எனினும் இது தர்மத்தின் குறியீடாக இல்லாமல், திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றாக, சக்ராயுதமாக விளங்குகிறது.

பிற பயன்பாடுகளில் தர்மச்சக்கரம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Dorothy C. Donath (1971). Buddhism for the West: Theravāda, Mahāyāna and Vajrayāna; a comprehensive review of Buddhist history, philosophy, and teachings from the time of the Buddha to the present day. Julian Press. ISBN 0-07-017533-0. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மசக்கரம்&oldid=2595561" இருந்து மீள்விக்கப்பட்டது