உள்ளடக்கத்துக்குச் செல்

அஷ்டமங்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஷ்டமங்களம் என்பது தார்மீக மதங்களில் குறிப்பிடப்படும் எட்டு மங்களகரமான சின்னங்களை குறிக்கும். திபெத்திய பௌத்தத்தின் படி, இவ்வஷ்டமங்கள் யிதங்களின் குணங்களை குறிக்கும். இவையனைத்து தெளிவுபெற்ற மனத்தின் குணங்களாக கருதப்படுகின்றன. பலவேறு பாரம்பரியங்கள் வெவ்வேறு சின்னங்கள் அஷ்டமங்களமாக கருதப்படுகின்றன.[1][2][3]

அஷ்டமங்களம் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் சுப காரியங்களின் போது பயன்படுத்தப்பட்டன. பௌத்தத்தில், இவை புத்தர் போதிநிலை அடைந்தவுடன் தேவர்கள் புத்தர்களுக்கு அளித்த எட்டு நிவேதனங்களை குறிக்கின்றன.

சொற்பொருளாக்கம்[தொகு]

அஷ்டமங்களம் என்றால் எட்டுவிதமான மங்களங்கள் என்று பொருள்.

பௌத்தம்[தொகு]

திபெத்திய நூலின் முன்புறம் அஷ்டமங்கள சின்னங்களுடன்

திபெத்திய பௌத்தம் கீழ்க்கண்ட குறிப்பிட்ட அஷ்டமங்கள சின்னங்களை பயன்படுத்துகிறது. இந்த சின்னங்களுக்கான பொதுவான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

 1. சங்கு
 2. திருமறுஸ்ரீவத்ஸம்
 3. கயல்மீன் ஜோடி (கௌர மச்சம்)
 4. கொடிதுவஜம்
 5. தாமரை
 6. குடை
 7. குடம்கலசம்
 8. தர்மசக்கரம்
குடை

சின்னங்கள்[தொகு]

பல்வேறு பாரம்பாரியங்களை இவ்வஷ்டமங்களை வெவ்வேறுவிதமாக அடுக்குகின்றன

நேபாள பௌத்தம்:

 1. ஸ்ரீவத்ஸம்
 2. தாமரை
 3. துவஜம்
 4. தர்மசக்கரம் அல்லது சாமரம்
 5. பொற்குடம்
 6. தங்க மீன் ஜோடி
 7. குடை
 8. சங்கு

சீன பௌத்தம்:

 1. தர்மசக்கரம்
 2. சங்கு
 3. துவஜம்
 4. குடை
 5. தாம்ரை
 6. பொற்குடம்
 7. தங்க மீன் ஜோடி
 8. ஸ்ரீவத்ஸம்

பிற தார்மீக மதங்களில் அஷ்டமங்களங்கள்[தொகு]

அஷ்டமங்களங்கள் பௌத்தத்தில் மட்டுமல்லாது, பிற தார்மீக மதங்களான இந்து மதம் மற்றும் சமணம் ஆகியவற்றில் காணப்படுகின்றது. இவை அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

.

 • இந்த பட்டியல், இடத்துக்கு இடம், சமூகத்துக்கு சமூகம் வேறு படலாம்

சமண மதத்திலும் அஷ்டமங்கள சின்னங்கள் குறிப்பிடப்படுகின்றன

திகம்பர பிரிவு:

 1. சுவசுத்திக்கா
 2. சாமரம்
 3. துவஜம்
 4. கலசம்
 5. துடைப்பம்
 6. கண்ணாடி
 7. பத்திராசனம்
 8. விசிறி
 9. பாத்திரம்

சுவேதாம்பரப் பிரிவு:

 1. சுவசுத்திக்கா
 2. நந்தவர்த்தம்
 3. வர்ந்த மானகம் (உணவு பாத்திரம்)
 4. பத்திராசனம்
 5. கலசம்
 6. கண்ணாடி
 7. மீன் ஜோடி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. Source: [1] (accessed: January 18, 2008) பரணிடப்பட்டது 13 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
 2. Source: Dpal be'u
 3. Sarat Chandra Das (1902). Tibetan-English Dictionary with Sanskrit Synonyms. Calcutta, India: mainly used in buddhismBengal Secretariat Book Depot, p.69
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டமங்களம்&oldid=3913606" இலிருந்து மீள்விக்கப்பட்டது