உதயகிரி, கந்தகிரி குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயகிரி-கந்தகிரி குகைகள், புவனேசுவர், ஒடிசா, இந்தியா
உதயகிரி பௌத்தத் தூபி

உதயகிரி, கந்தகிரி குகைகள் (Udayagiri and Khandagiri Caves, ஒதிசா : ଉଦୟଗିରି ଓ ଖଣ୍ଡଗିରି ଗୁମ୍ଫା)) இயற்கை மற்றும் செயற்கையான ஒன்றாகும். இவ்விடம் தொல்லியல், வரலாறு, சமயம் சார்ந்து முகமை வாய்ந்தது ஆகும். இக்குகைப்பகுதி இந்தியாவின் ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்திற்கு அருகில் உள்ளது. இக்குகைகள் உதயகிரி-கந்தகிரி மலைப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பெற்ற குகைகள் உள்ளன. கி மு இரண்டாம் நூற்றாண்டில் மன்னர் காரவேலன் காலத்திய இக்குகைகளில் சமணத் துறவிகளும், பௌத்த பிக்குகளும் தங்கியிருந்தனர்.

உதய கிரி என்றால், பரிதி எழும் மலை என்று பொருள் ஆகும்; இதில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன. இதனருகில் லலித்கிரி எனும் பௌத்த தொல்லியற் களம் உள்ளது.

காட்சிக்கூடம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]