ஈராக்குது அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈராக்குது அணை
Hirakud Dam Panorama.jpg
ஈராக்குது அணை மதகுகள்
ஈராக்குது அணை is located in Odisha
ஈராக்குது அணை
ஈராக்குது அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்"Hirakud dam"
அமைவிடம்சாம்பல் பூர்த்தி, ஒடிசா
புவியியல் ஆள்கூற்று21°34′N 83°52′E / 21.57°N 83.87°E / 21.57; 83.87ஆள்கூறுகள்: 21°34′N 83°52′E / 21.57°N 83.87°E / 21.57; 83.87
கட்டத் தொடங்கியது1948
திறந்தது1957
கட்ட ஆன செலவு1957 இல் 1.01  பில்லியன் ரூபாய்
அணையும் வழிகாலும்
வகைஅணை மற்றும் நீர்த்தேக்கம்
Impoundsமகாநதி ஆறு
உயரம்60.96 மீ
நீளம்4.8 கிமீ
25.8 கி.மீ (முழு அணை)
வழிகால்கள்64 மதகு-வாயில்கள், 34 முகடு-வாயில்கள்
வழிகால் அளவு42,450 cubic metres per second (1,499,000 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity5,896,000,000 m3 (4,779,965 acre⋅ft)
வடி நிலம்83,400 km2 (32,201 sq mi)
மின் நிலையம்
சுழலிகள்மின் நிலையம் I (பர்லா): 2 x 49.5 மெவா , 3 x 37.5 மெவா, 2 x 32 மெவா கப்லான் வகை விசையாழி
மின் நிலையம் II (சிப்பிலிமா): 3 x 24 மெவா[1]
பெறப்படும் கொள்ளளவு347.5 மெகாவாட்டு (மெவா)[1]

ஈராக்குது அணை (ହୀରାକୁଦ ବନ୍ଧ, Hirakud Dam, ஃகீராக்குது அணை) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மகாநதி ஆற்றின் குறுக்கே சம்பல்பூர் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அணைக்கு பின்னால் ஏரி மற்றும் 55 கி.மீ. நீர்த்தேக்கம் பரவியுள்ளது. இது இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு செயற்படுத்தப்பட்ட முதலாவது பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டங்களில் இவ்வணையும் ஒன்றாகும்.

கட்டுமான வரலாறு[தொகு]

1936 ஆம் ஆண்டு மகாநதி படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பேரழிவுக்கு முன்பு, மகாநதிப் படுகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தின் பிரச்சினையைச் சமாளிக்க நீர்த்தேக்கங்களில் வெள்ள நீரை சேகரிக்க சர். விசுவேசுவரய்யாவால் விரிவான திட்டம் முன்மொழியப்பட்டது. 1945 ஆம் ஆண்டில், தொழிலாளர் உறுப்பினர் டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் தலைமையில், மகாநதியை பல நோக்கத்திற்காக பயன்படுத்த வெள்ளத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான முடிவுகளில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடுவணரசு நீர்வழி நீர்ப்பாசன ஆணையம் கட்டுமானப் பணியைத் தொடங்கியது.[2]

15 மார்ச் 1946 அன்று, ஒடிசா ஆளுநர் சர் ஆதோரன் இலூயிசால் ஈராக்குது அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அரசாங்கத்திற்கு சூன் 1947 இல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பண்டித சவகர்லால் நேரு ஏப்ரல் 12, 1948 அன்று முதல் தொகுதியைத் திறந்து வைத்தார். அணை 1953 இல் கட்டி முடிக்கப்பட்டது. முறையாகத் தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு 13 சனவரி 1957 தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான மொத்த செலவு 1957 இல் Rs.1000.2 மில்லியன்கள் ஆகும்.1956 ல் தொடங்கிய மின் உற்பத்தி, பயிர்விளைவிக்கப் பாசனம் சேர்த்து 1966 ஆம் ஆண்டு முழுத் திறனையும் அடைந்தது.[2]

தொழில்நுட்ப விவரங்கள்[தொகு]

 • மொத்த நீளம் = 25.79 கி.மீ.[2]
 • நீளம் = 4.8 கி.மீ.[2]
 • செயற்கை ஏரி = 743 ச.கி.மீ.[2]
 • பாசனப் பரப்பு= 235477 ஹெக்டேர் [2]
 • அணை கட்டப்பட்டதால் இழந்த பரப்பு= 147,363 ஏக்கர்கள் (596.36 km2) [2]
 • மின் உற்பத்தி = 347.5 மெவா(நிறுவப்பட்ட திறன்) [2]
 • கட்டுமானச் செலவு = Rs.1000.2 மில்லியன் (in 1957) [2]
 • அணை மேல் நீர் மட்டம்= R.L 195.680 Mtr [2]
 • F.R.L/ M.W.L = R.L 192.024 Mtr [2]
 • கொள்ளளவு = R.L 179.830 Mtr [2]
 • மொத்த புவிக் கொள்ளளவு = 18,100,000 கன மீட்டர்கள் [2]
 • கான்கிரீட் அளவு = 1,070,000 கன மீட்டர்கள் [2]
 • நீர்ப்பிடிப்பு பகுதி = 83400 சதுர கிலோமீட்டர்கள் [2]

அமைப்பு[தொகு]

ஹிராகுட் அணைக்கரை

ஈராக்குது அணை கலப்பு அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மிகவும் நீண்ட முக்கிய மண் அணை ஆகும். மகாநதி ஆற்றின் குறுக்கே ஈராக்குது அணை 4.8 கி.மீ. ஒட்டுமொத்த நீளம் கட்டப்பட்டுள்ளது.[2] இலம்டுங்கிரி மலைக்கும் சந்திரிகாடாங்கி மலைக்கும் நடுவில் இது கட்டப்பட்டுள்ளது.[2] இங்கு காந்தி மினார் கோபுரம் நேரு மினார் கோபுரம் என இரண்டு காட்சிக் கோபுரங்கள் உள்ளன.

மின் உற்பத்தி நிலையம்[தொகு]

அணையில் இரண்டு வெவ்வேறு நீர்மின் நிலையங்கள் உள்ளன. நீர்மின் நிலையம்-I முக்கிய அணையின் அடிப்பகுதியில் உள்ளது. இதன் மின் உற்பத்தி 3 x 37.5 மெகாவாட்டுகள் மற்றும் 2 x 24 மெகாவாட்டுகள் ஆகும். நீர்மின் நிலையம்-II அணையின் தென் கிழக்கு பகுதியில் உள்ளது. இதன் மின் உற்பத்தி 3 x 24 மெகாவாட்டுகள் ஆகும். அணையின் மொத்த மின் உற்பத்தி 307.5 மெகாவாட்டுகள் ஆகும்.[1]

அணை கட்டுவதற்கான நோக்கம்[தொகு]

அணையில் மீன் பிடிக்கும் மீனவர்
அணையின் இடது கரை

மகாநதி ஆற்றின் மேல் வடிகால் சத்தீஸ்கர் சமவெளிப் பகுதிகளில் அவ்வப்பொழுது வெள்ளம் வந்து பயிர்கள் பாதிப்படைந்தது. அணையின் மூலம் நீர்த்தேக்கம் உருவாக்கி, வடிகால் அமைப்பு மூலம் ஆற்றொழுக்கை கட்டுப்படுத்தி இந்த பிரச்சினைகளைப் போக்க அணை கட்டப்பட்டது.[3] இந்த அணையின் மூலம் 75,000 சதுர கிலோமீட்டர்கள் பாசன வசதி பெறுகின்றன.[2]

கால்வாய்[தொகு]

சாசன் கால்வாய்

ஈராக்குது அணையில் பர்கர் கால்வாய், சாசன் கால்வாய், சம்பல்பூர் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்கள் உள்ளன.

தொழிற்சாலை பயன்பாடு[தொகு]

ஜர்சுக்டா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, முதன்மையாக கனிம செயலாக்கம் மற்றும் நிலக்கரி எரிக்கும் அனல்மின் நிலையங்களுக்கு ஹிராகுட் அணையில் இருந்து வரும் நீர் பயன்படுகிறது.[4]

வண்டல் மண்[தொகு]

அணை பாதுகாப்பு மையத்தால் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, அணை நீர் பிடிப்பு திறன் வண்டல் மண் காரணமாக 28% குறைந்துவிட்டது.[5]

நீர் மோதல்[தொகு]

தொ‌ழி‌ற்சாலைகளுக்கு தண்ணீர் ஒதுக்கீடு செய்வதன் காரணமாக கால்வாய் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் 30,000 விவசாயிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது.[6]

காட்டு ஆவினத் தீவு[தொகு]

நீர்த்தேக்கங்களில் உள்ள ஒரு தீவு

ஈராக்குது நீர்தேக்கத்தில் உள்ள காட்டு ஆவினத் தீவு இயற்கையில் வியப்பூட்டும் ஓரிடமாக அமைந்துள்ளது. இங்கு மனிதர்கள் வசிக்கவில்லை. ஆனாலும் இங்கே ஆவினங்கள் (மாடுகள்) வாழ்கின்றன. இந்தத் தீவுக்கு படகு மூலம் செல்லலாம்.[7]

வனவிலங்குகள்[தொகு]

ஈராக்குது அணை சிறந்த வனச் சூழலை கொண்டிருக்கிறது. தெப்பிரிக்கார் வனவிலங்கு சரணாலயம் இங்கு அமைந்துள்ளது.[8] குளிர் காலத்தில் பல பறவைகள் இனங்கள் நீர்த்தேக்கத்திற்கு வருகை புரிகின்றன. சுமார் 20-25 பறவை இனங்கள் நீர்த்தேக்கத்தில் காணப்படும்.[9] வாட்டர்பவுல் சென்சசு கணக்கெடுப்பின்படி 95,912 பறவைகள் ஈராக்குது நீர்தேக்கத்தில் ஆண்டுதோறும் வருகின்றன. இதில் 60 இக்கும் மேற்பட்ட அரிய வகை பறவையினங்களும் அடங்கும். கருங்கொண்டை முக்குளிப்பான், செந்தலை வாத்து (red-crested pochard), நாமக்கோழி, செந்தலைக் காட்டுவாத்து (common pochard), சீழ்க்கைத் தாரா (whistling duck) ஆகிய பறவைகளும் ஆண்டுதோறும் வருகின்றன.[10]

அஞ்சல் தலையும் ரூபாய் தாளும்[தொகு]

1979 இல் வெளியிடப்பட்ட ஈராக்குது அணை நினைவு அஞ்சல் தலை
1960 இல் வெளியிடப்பட்ட 100 ரூபாய் தாளில் ஈராக்குது அணை

ரூ 0.30 மதிப்புள்ள 30,00,000 ஈராக்குது அணை நினைவு அஞ்சல் தலைகள் இந்திய அஞ்சல் துறையால் 29 அக்டோபர் 1979 இல் வெளியிடப்பட்டன.[11] 1960 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று, ஈராக்குது அணை மற்றும் நீர்மின் நிலையம் படத்தைப் பின்புறம் கொண்ட நூறு ருபாய் தாள் இந்திய நடுவண் வைப்பு வங்கியால் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈராக்குது_அணை&oldid=3235087" இருந்து மீள்விக்கப்பட்டது