சாமுண்டி கோயில், ஒடிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வைத்தல கோயில்
ବଇତାଳ ଦେଉଳ
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Orissa" does not exist.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:கோர்த்தா
அமைவு:புவனேசுவரம்
ஆள்கூறுகள்:20°16′N 85°15′E / 20.267°N 85.250°E / 20.267; 85.250ஆள்கூற்று: 20°16′N 85°15′E / 20.267°N 85.250°E / 20.267; 85.250
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கட்டிடக்கலை

வைத்தல கோயில் அல்லது சாமுண்டி கோயில் (Vaitaḷa deuḷa or Baitala deuḷa) (ஒரியா: ବଇତାଳ ଦେଉଳ, தேவநாகரி:वैताळ देउळ), கலிங்கக் கட்டிடக் கலையில், கிபி எட்டாம் நுற்றாண்டில் கட்டப்பட்டு, தேவி சாமுண்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். இக்கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேசுவரம் நகரத்தின் அருகில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவரான சாமுண்டி தேவி, கழுத்தில் மண்டையோட்டு மாலையுடன், மனித பிணத்தின் மீது ஏறி நின்று, அருகில் குள்ள நரி மற்றும் ஆந்தையுடன் காட்சியளிக்கிறார். கவசம் தாங்கிய சாமுண்டா தேவியின் கைகளில் திரிசூலம், வில், அம்பு, வாள், இடி மற்றும் அசுரனின் தலையை பற்றி நிற்கிறாள். கருவறைச் சுவரில் சாமுண்டியின் துணையான பைரவர் மற்றும் பூத கணங்களின் சிற்பங்கள் உள்ளது. சிவன் மற்றும் பார்வதி அமர்ந்த நிலைச் சிற்பங்கள் கருவறைச் சுவர்களில் உள்ளது.

கட்டிடக்கலை[தொகு]

கலிங்கக் கட்டிடக்கலையில் அமைந்திருந்தாலும், கோயில் விமானம் மட்டும் திராவிடக் கட்டிடக்கலையில் உள்ளது. இக்கோயில் கோபுரத்தில் சிவன், பார்வதி சிற்பங்கள், காட்டு யானைகளை வேட்டையாடும் சிற்பங்கள் மற்றும் காதலர்களின் சிற்றின்பச் சிற்பங்கள் உள்ளது. [1][2]

மூலவர் சந்நதிக்கு எதிராக அமைந்த முகப்பு மண்டபம் சன்னல்களுடன் உள்ளது. சன்னல்களில் சூரியன் மற்றும் அவரது மனைவிகளான உஷா மற்றும் பிரதியுஷா, சூரிய தேவரின் தேரை இழுக்கும் ஏழு குதிரைகள், தேரோட்டி அருணன் முதலிய அழகிய சிற்பங்கள் கொண்டுள்ளது. இக்கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. முகப்பு மண்டப மேற்புறச் சுவரில் நடனமாடும் 10 கைகள் கொண்ட நடராசர் சிற்பமும், இரண்டு புத்தரைப் போன்ற சிற்பங்களும் காணப்படுகிறது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வராகி கோயில்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Brockman, Norbert C. (2011). Encyclopedia of Sacred Places. California: ABC-CLIO, LLC. பக். 212–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-655-3. 
  2. Parida, A.N. (1999). Early Temples of Orissa (1st ). New Delhi: Commonwealth Publishers. பக். 85–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7169-519-1. 

வெளி இணைப்புகள்[தொகு]