வராகி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வராகி (சப்தகன்னியர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

தோற்றம்[தொகு]

வராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

எட்டு வராகிகள்[தொகு]

மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோயில்[தொகு]

  1. தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.
  2. திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது
  3. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.[1]
  4. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. [2]
  5. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
  6. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது
  7. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள் உடன் வாரஹி அம்மன் உள்ளார்.
  8. இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உத்தரகோசமங்கை மங்கலநாதர் திருக்கோயிலுக்கு 200மீ தொலைவில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வராகி_அம்மன்&oldid=3143284" இருந்து மீள்விக்கப்பட்டது