சாமுண்டி (சப்தகன்னியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாமுண்டி
Camunda5.JPG
தேவநாகரி चामुण्डा
சமசுகிருதம் Cāmuṇḍā
தமிழ் எழுத்து முறை சாமுண்டி, சாமுண்டீஸ்வரி
வகை தேவி, சப்தகன்னியர்

சாமுண்டி (சமசுகிருதம்: चामुण्डा, Cāmuṇḍā), சப்த கன்னியர்களில் ஒரு தெய்வமாகும். இவரை சாமுண்டீஸ்வரி என்றும் அழைக்கின்றனர். இவர் துர்க்கா தேவி போரில் ஈடுபடும் போது அவருடைய படையில் ஒருவராக கருதப்படுகிறார்.

இவர் ருத்திரனின் அம்சமாவார். நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர் சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தார். [1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=13766 சாமுண்டி தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்[தொகு]