பிராம்மி (சப்தகன்னியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிராம்மி என்பவர் இந்து சமயத்தின் சப்தகன்னியர்களுள் முதன்மையானவராவார். இவர் சாவித்திரியை என்றும் பிராம்ஹி என்றும் அழைக்கப்படுகின்றார்.

பிராம்மியின் தோற்றம்[தொகு]

சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்த பொழுது அரக்கனுடைய இரத்ததிலிருந்து பல அரக்கர்கள் தோன்றினர். அதனால் பிரம்மா, திருமால், வராகம், இந்திரன், முருகன் என்ற அனைவருமே தங்களுடைய அம்சமான கன்னியரை தோற்றுவித்தனர். அப்பொழுது பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்டவரே பிராம்மி ஆவார்.

இவர் நான்கு கரங்களை உடையவராகவும், கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை ஆகியவற்றை தரித்தும் காட்சியளிக்கிறார். பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி தேவியைப் போல அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். அத்துடன் அன்னப் பறவையை கொடியாகவும் கொண்டவர். வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார். [1]


இவர் அட்ட பைரவ மூர்த்திகளில் அசிதாங்க பைரவரின் சக்தி வடிவமாவார். [2]

பிராம்மி பாடல்[தொகு]

பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்

இவற்றையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=13760 பிராம்மி - தினமலர் கோயில்கள்
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்[தொகு]