ஒடிசா நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒடிசா நாள் (ஒடியா மொழி:ଓଡ଼ିଶା ଦିବସ) என்பது ஒடிசா மாநிலத்தின் உருவாக்கத்தை நினைவுகூரும் நாள் ஆகும். இதை உத்கல திபசா என்றும் ஒடியா திபசா என்றும் அழைப்பர். இது ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் நாளில் கொண்டாடப்படுகிறது.[1] [2]

1568ஆம் ஆண்டு முகுந்த தேவ் மன்னரின் வீழ்ச்சிக்கு பிறகு பல பகுதிகளாக சிதறிக் கிடந்த ஒடிசா மாநிலத்தை மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைக்க வேண்டும் என பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஒடிசாவை தனி மாநிலமாக அறிவித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் கட்டக், புரி, பாலேஸ்வர், சம்பல்பூர், கோராபுட், கஞ்சாம் ஆகிய மாவட்டங்கள் இருந்தன. ஜான் ஆஸ்டின் ஹப்பக் என்பவர் ஒடிசாவின் முதல் ஆளுநர் ஆனார்.[3][4] இன்றையா ஒடிசாவில் 30 மாவட்டங்கள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Utkal Dibasa also called Odisha day is being celebrated on ஏப்ரல் 1st today". infocera.com (2012). பார்த்த நாள் 3 July 2012. "The Odisha province was formed on the basis of linguistic pattern of people in the area on ஏப்ரல் 1, 1936"
  2. "Poor water management has made Odisha victim of drought and floods". The Hindu. மூல முகவரியிலிருந்து 2009-04-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 ஏப்ரல் 2006.
  3. Formation of Orissa as a Separate Province by Pareswar Sahoo[தொடர்பிழந்த இணைப்பு]. Orissareview. ஏப்ரல் 2006
  4. Orissa's new name is Odisha பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா_நாள்&oldid=3334561" இருந்து மீள்விக்கப்பட்டது