வராகி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வராகி கோயில்
கருவறையில் மீனையும், கிண்ணத்தையும் தாங்கி நிற்கும் அன்னை வராகி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Oriya" does not exist.
பெயர்
ஒரியா:ବାରାହୀ ଦେଉଳ
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:சௌரசி, புரி மாவட்டம்
அமைவு:புரி
ஆள்கூறுகள்:20°3′30.73″N 86°7′6.5″E / 20.0585361°N 86.118472°E / 20.0585361; 86.118472ஆள்கூற்று: 20°3′30.73″N 86°7′6.5″E / 20.0585361°N 86.118472°E / 20.0585361; 86.118472
கோயில் தகவல்கள்
சௌரசி வராகி அம்மன் கோயில், புரி மாவட்டம்
சௌரசி வராகி அம்மன் கோயில், புரி மாவட்டம்

வராகி கோயில் (Varahi Deula), இந்திய மாநிலமான ஒடிசாவின் கிழக்கு கடற்கரையில் புரி மாவட்டத்தில் சௌரசி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சப்தமாதர்களில் ஒருவரான வராகி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் கலிங்கர்களால் கிபி 10ம் நூற்றாண்டில் மணற்கற்களால் நிறுவப்பட்டது.

இக்கோயிலின் நீளம், அகலம், உயரம் முறையே 15.84 மீ x 8.23 மீ x 8.40 மீட்டர் என்ற அளவில் உள்ளது.[1] வராகி அம்மன் கோயில் அரைக் கோள வடிவத்தில் அமைந்துள்ளது.

வராகி கோயிலின் சிறப்புகள்[தொகு]

உள்ளூர் மக்கள் வராகி அம்மனை மீன் வராகி அம்மன் என்று அழைக்கின்றனர். கோயில் கருவறையில் லலிதாசனத்தில் அமர்ந்துள்ள வராகி அம்மன் நெற்றிக்கண் கொண்டுள்ளார். வராகி அம்மன் இடது கையில் கிண்ணமும், வலது கையில் மீனையும் தாங்கியுள்ளார். வராகி அம்மனுக்கு நாள்தோறும் மீன் அன்னம் படையல் இடப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

கொனார்க் சூரியன் கோயிலிருந்து 30 கிமீ தொலைவிலும், புரி நகரத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், புவனேசுவரம் நகரத்திலிருந்து 62 கிமீ தொலைவிலும் சௌரசி வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வராகி_கோயில்&oldid=2439499" இருந்து மீள்விக்கப்பட்டது