உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தினகிரி, ஒடிசா

ஆள்கூறுகள்: 20°38′28″N 86°20′07″E / 20.641183°N 86.335309°E / 20.641183; 86.335309
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தினகிரி, ஒடிசா
இரத்தினகிரி பௌத்த தொல்லியல் களம்
இரத்தினகிரி பௌத்த தொல்லியல் களம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்20°38′28″N 86°20′07″E / 20.641183°N 86.335309°E / 20.641183; 86.335309
சமயம்பௌத்தம்
மாநிலம்ஒடிசா
மாவட்டம்யாஜ்பூர் மாவட்டம்
செயற்பாட்டு நிலைபாதுகாப்பாக உள்ளது

இரத்தினகிரி (Ratnagiri, Odisha), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் யாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்த பண்டைய பௌத்த தொல்லியல் களம் ஆகும். இப்பௌத்தத் தலம், பண்டைய பௌத்த லலித்கிரி, உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கு அருகில் உள்ளது. இப்பௌத்தத் தலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி 13 நூற்றாண்டு வரை கட்டப்பட்டதாகும்.[1][2]

இரத்தினகிரி அகழ்வாராய்வுகள்

[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், 1958 - 1961 முடிய இரத்தினகிரியில் அகழ்வாய்வு மேற்கொண்டது. அகழாய்வில் அழகிய தூபிச் சுற்றிலும் உறுதியான பல தூபிகள், விகாரைகள், அழகிய சிற்பங்களுடன் கூடிய கதவும், வளைகோட்டு கோபுரமும் கண்டுபிடிக்கப்பட்டது.[3] இப்பௌத்தத் தலத்தை தாந்திரிக பௌத்த வஜ்ஜிராயன பௌத்தப் பிரிவினர் பயன்படுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைத்த களிமண் முத்திரைகளில், இரத்தினகிரி மகாவிகாரிய ஆரிய பிக்கு சங்காசியா என்ற பிக்குவின் பெயர் பெறித்துள்ளதன் மூலம், இவ்விடம் இரத்தினகிரி என அறியப்பட்டது. கிபி 16ம் நூற்றாண்டு வரை இரத்தினகிரி விகாரை பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இவ்விடத்தை பௌத்தர்கள் கைவிட்டுள்ளனர்.

கிபி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிற்கால குப்தப் பேரரசர் நரசிம்ம பாலாதித்தியன் ஆட்சியின் போது நிறுவப்பட்ட இரத்தினகிரி விகாரை, கிபி 12ம் நூற்றாண்டு வரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. என திபெத்திய பௌத்த வரலாற்று நூலான பாக் சாம் ஜோன் சாங் குறிப்பிடுகிறது. கிபி பத்தாம் நூற்றாண்டு காலத்திய காலச்சக்கர தாந்திரிக சின்னங்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளது.[4]

இரத்தினகிரி அகழாய்வில் போதிசத்துவர்கள், பத்மபானி மற்றும் வச்ரபானி ஆகியோர்களி சிற்பங்கள் விகாரை எண் 2ல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விகாரை 18 சிற்றறைகளுடனும், நடுவில் கௌதம புத்தர் வரத முத்திரை காட்டி அமர்ந்துள்ள சிற்பமும் கொண்டுள்ளது.

இரத்தினகிரி விகாரை இரண்டு தளங்களுடன் கூடிய பெரிய விகாரையாகும். இவ்விகாரையில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிற்றறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விகாரையில் ஆறு சைத்தியங்களும், ஆயிரக்கணக்கான சிறிய தூபிகளும், 1386 முத்திரைகளும் அகழாய்வில் கிடைத்துள்ளது.

இதன் பெரிய [[தூபி] 47 அடி சுற்றளவும், 17 அடி உயரத்துடனும், சுற்றிலும் நான்கு சிறிய தூபிகளும் கொண்டுள்ளது. பெரிய தூபி தாமரை, மணிகள் போன்ற அழகிய சிறுசிறு சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.[5]

இரத்தினகிரி அகழ்வாய்வு மையத்தில் அமைந்த இந்தியத் தொல்லியல் அருங்காட்சியகத்தில் தாரா, அவலோகிதர், அபராஜிதர், ஹரிதி ஆகியோரின் சிற்பங்கள் காட்சிக்கு உள்ளது.[6]

படக்காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]





"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினகிரி,_ஒடிசா&oldid=3984656" இலிருந்து மீள்விக்கப்பட்டது