சில்கா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சில்கா ஏரி
"ଚିଲିକା ହ୍ରଦ"
Chilika lake.png
ஒடிசாவில் வங்காள விரிகுடாயை ஒட்டிய சில்கா ஏரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்19°43′N 85°19′E / 19.717°N 85.317°E / 19.717; 85.317ஆள்கூறுகள்: 19°43′N 85°19′E / 19.717°N 85.317°E / 19.717; 85.317
ஏரி வகைஉவர் நீர்
முதன்மை வரத்து52 நீரோடைகளுடன் பார்கவி ஆறு, தயா ஆறு, மக்ரா ஆறு, மலகுனி ஆறு மற்றும் லூனா ஆறுகள்[1]
முதன்மை வெளிப்போக்குபழைய கழிமுகம் அரகாகுடா, புது கழிமுகம் சதபதம், வங்காள விரிகுடா, ஒடிசா, இந்தியா
வடிநிலப் பரப்பு3,560 சதுர கிலோ மீட்டர்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்64.3 கிலோ மீட்டர்
மேற்பரப்பளவுகுறைந்தபட்சம்: 900 சதுர கிமீ
அதிகபட்சம் சதுர 1165 கிமீ
அதிகபட்ச ஆழம்4.2 மீட்டர்கள்
நீர்க் கனவளவு]]4 km3 (3,200,000 acre⋅ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்0 – 2 m (6.6 ft)
Islands223 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பாதகுடா, கலிஜாய் மலை, பறவைகள் தீவு, கந்தபந்தா, கிருஷ்ணபிரசாத் (பழைய பரிகுடா), நளபானம், நுவாப்பரா, சாலமன் மற்றும் சனகுடா திவுகள்
Settlementsபுரி மற்றும் சதபரா
References[1]
Invalid designation
தெரியப்பட்டது1 October 1981
சில்கா ஏரியின் மத்திய மற்றும் மேற்கு பகுதி

சில்கா ஏரி, கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும். சில்கா ஏரி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், குர்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களில் வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் நீளத்தில பரந்துள்ளது.

1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.[2]

குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் சில்கா ஏரியில் பெரிய அளவில் வலசை வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சில்கா ஏரி புகலிடமாக உள்ளது.[3][4]

சில்கா ஏரியின் சூழலியல் மீன் வளத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது. சில்கா ஏரியின் கரையிலும், தீவுகளிலும் மீன்பிடித் தொழிலை நம்பி, 132 கிராமங்களைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள்.[5][6]

குளிர்காலத்தில் ருசியா, மங்கோலியா, நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, லடாக் மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து 160 பறவை இனங்கள் சில்கா ஏரிக்கு வலசை வருகின்றன.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

சென்னைகொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 5 சில்கா ஏரியின் கிழக்கு கரையின் வழியாகச் செல்கிறது. ஒடிசாவின் புரி நகரத்திலிருந்து தென்கிழக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னைபுவனேஸ்வர்கொல்கத்தா செல்லும் அனைத்து தொடருந்துகளும் சில்கா ஏரி வழியாக நின்று செல்கிறது.

ஒடிசா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சில்கா ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல தனியார்ப் படகுகளும் சில்கா ஏரியில் உள்ள தீவுகளைச் சுற்றி காண்பிக்கின்றன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tripati, Sila; A. P. Patnaik (10 February 2008). "Stone anchors along the coast of Chilika Lake: New light on the maritime activities of Orissa, India". Current Science (Bangalore: Indian Academy of Sciences) 94 (3): 386–390. http://www.ias.ac.in/currsci/feb102008/386.pdf. 
  2. Forest and Environment Department. "Chilika". Wildlife Conservation in Orissa. Govt of Orissa. பார்த்த நாள் 2008-12-21.
  3. "Chilika At A Glance". Chilika Development Authority. பார்த்த நாள் 2013-01-23.
  4. WWF India (2008). "Chilika Lake". மூல முகவரியிலிருந்து 18 October 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-16.
  5. Chilika Development Authority (2008). "Fish Yield Status". மூல முகவரியிலிருந்து 30 June 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-11.
  6. Chilika Development Authority (2008). "Welcome to Chilika Lagoon". மூல முகவரியிலிருந்து 1 October 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-16.
  7. Chilika Development Authority (2008). "How to reach". மூல முகவரியிலிருந்து 28 June 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-16.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chilika Lake
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்கா_ஏரி&oldid=2394135" இருந்து மீள்விக்கப்பட்டது