திப்ரிகர் வனவிலங்கு சரணாலயம்
Debrigarh Wildlife Sanctuary | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
ஆள்கூறுகள் | 21°33′26″N 83°38′46″E / 21.557097°N 83.646108°E[1] |
பரப்பளவு | 346.91 km2 (133.94 sq mi) |
திப்ரிகர் வனவிலங்கு சரணாலயம் (Debrigarh wildlife sanctuary) இந்திய மாநிலமான ஒடிசாவில் பர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 346.91 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இச்சரணாலயம் சம்பல்பூரின் இராகுட் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. திப்ரிகர் வனவிலங்கு சரணாலயம் பல்வேறு உள்ளூர் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் ஒரு முக்கிய இடமாகும். இது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகவும் திகழ்கிறது. இந்த சரணாலயத்தில் 40 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பாலூட்டிகள், 200 வகையான பறவைகள், 40 வகையான ஊர்வன, 12 வகையான நீர்நில வாழ்விகள், 42 வகையான மீன்கள், 39 வகையான தட்டான்பூச்சி வகைகள் , 85 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் 38 வகையான சிலந்திகள் வாழ்கின்றன.
சரணாலயத்தின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் பெரிய இராகுட்டு நீர்த்தேக்கம் சூழ்ந்துள்ளது. நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் பல்லுயிர் இரண்டையும் ஆதரிக்கின்ற மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சரணாலயங்களில் இதுவும் ஒன்றாகும்; குளிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இடம்பெயரும் நீர் பறவைகள் இங்கு ஈர்க்கப்படுகின்றன. மேலும் இங்கு 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன, அவற்றில் பல இனங்கள்-தாவரவியல் மற்றும் மருத்துவ மதிப்பைக் கொண்டுள்ளன.
திப்ரிகர் வனவிலங்கு சரணாலயம் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஒரு சூழல்-உணர்திறன் மண்டலமாகக் கருதப்படுகிறது.[2] மேலும் தொழில்கள் அல்லது தொழிற்சாலை வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் இச்சுற்றுச்சூழல் உணர் மண்டலத்தில் தடை செய்யப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Debrigarh PA :: Odisha Wildlife Organisation". Welcome. 2017-10-18. Archived from the original on 1 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
- ↑ "Debrigarh". Protected Planet. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
புற இணைப்புகள்
[தொகு]- திப்ரிகர் வனவிலங்கு சரணாலயம்
- ஒடிசா வனவிலங்கு அமைப்பு பரணிடப்பட்டது 2021-06-03 at the வந்தவழி இயந்திரம்