ஆவுளியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவுளியா (Dugong)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: கடல் பாலூட்டி
வரிசை: சைரென்யா
குடும்பம்: தூகாங்கிடே
கிரே, 1821
துணைக்குடும்பம்: தூகாங்கினே
சிம்ப்சன், 1932
பேரினம்: தூகாங்
லாசெப்பிடே, 1799
இனம்: தூ. தூகான்
இருசொற் பெயரீடு
தூகாங் தூகான்
(முல்லர், 1776)
ஆவுளியாவின் வாழ்விடம்

ஆவுளியா அல்லது கடல் பசு (Dugong) எனும் கடல் உயிரினம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது ஆகும். இதனைப்போல் உள்ள உயிரினங்கள் மேன்டீஸ் (manatees) என்று அழைக்கப்படும் கடல் பசு மற்றும் சைரினியா (Sirenia) எனும் கடல் பசுவும் ஆகும். இவ்வகை விலங்கினங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கடற்கரை ஓரமாக மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்ந்து வருகிறது. மேலும் குறைந்த எண்ணிக்கையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் இவை காணப்படுகின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநில விலங்கு இதுவே. இது ஆழம் குறைந்த பகுதியில் வாழுகிறது. இதனை மீனவர்கள் பிடித்து எண்ணெய்க்காகவும், உணவுக்காகவும் அழித்து வருகிறார்கள்.[2] இவ்வகையான விலங்குகள் கடல் பூங்காவில் பாதுகாக்கப்படுகிறது. இது 400 கிகி எடையும், 3 மீட்டர்கள் நீளமும் கொண்ட உடலை உடையது. பார்ப்பதற்கு கடல் பசு போன்ற தோற்றத்தில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் ஆகும். இதனை கடல் கன்னி,[3] கடல் பசு, கடல் பன்றி, கடல் ஒட்டகம்[4] எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது அந்தமான் நிக்கோபாரின் மாநில விலங்காகும்.

பரிணாமம்[தொகு]

கடல்பசு என்பது நஞ்சுக்கொடி பாலூட்டிகளின் சைரென்யா வரிசையினைச் சார்ந்த விலங்காகும். இதில் தற்கால "கடல் பசுக்கள்" (மேனாட்டிகள் மற்றும் ஆவுளியா) மற்றும் அவற்றின் அழிந்துபோன உறவினர்களும் உள்ளன. சைரேனியா மட்டுமே தற்போதுள்ள தாவரவகை கடல் பாலூட்டிகள் மற்றும் தாவரவகை பாலூட்டிகளின் ஒரே குழு முற்றிலும் நீர்வாழ் உயிரியாக மாறியுள்ளது. சைரனிய விலங்குகள் 50 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ பதிவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது (ஆரம்ப இயோசீன்-சமீபத்திய). ஒலிகோசீன் மற்றும் மியோசீன் காலத்தில் அவை மிதமான பன்முகத்தன்மையை அடைந்தன, ஆனால் பின்னர் காலநிலை குளிர்ச்சி, கடல்சார் மாற்றங்கள் மற்றும் மனித குறுக்கீடு ஆகியவற்றின் விளைவாக மறுத்துவிட்டன.[5]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவுளியா&oldid=3771759" இருந்து மீள்விக்கப்பட்டது