பைசிபாலி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசிபாலி வனவிலங்கு சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
அமைவிடம்நயாகார், ஒடிசா, இந்தியா
பரப்பளவு168.35 சதுர கிலோமீட்டர்கள் (41,600 ஏக்கர்கள்)
நிறுவப்பட்டது6 மே 1981[1]

பைசிபாலி வனவிலங்கு சரணாலயம் (Baisipalli Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஒடிசாவின் நயாக்ரில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகம் ஆகும். இது 6 மே 1981-ல் உருவாக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த சரணாலயம் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மகாநதி ஆறு செல்லும் இடத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 மீட்டர்கள் (3,000 அடி) ) உயரத்தில் உள்ளது . இச்சரணாலயம் சட்கோசியா பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயத்தை அருகிலுள்ளது.

விலங்குகள்[தொகு]

சுமார் 168.35 சதுர கிலோமீட்டர்கள் (41,600 ஏக்கர்கள்) பரப்பளவு உள்ள இந்த சரணாலயத்தில் கரடிகள், யானைகள், சிறுத்தைகள், சாம்பார் மான்கள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளன.

தாவரங்கள்[தொகு]

பைசிப்பள்ளி கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள் இச்சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய தாவர சமூகங்கள் குங்கிலியம் (சோரியா ரோபசுடா) மற்றும் ஆற்றங்கரை காடுகள் உள்ளிட்ட கலப்பு இலையுதிர் காடுகள் இவையாகும்.[2]

2007ஆம் ஆண்டில், சட்கோசியா புலிகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இது பைசிபாலி மற்றும் அதை ஒட்டிய சட்கோசியா பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயத்தை உள்ளடக்கியது.

இதன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் அழகிய நிலப்பரப்புகள் காரணமாக, இந்த சரணாலயம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]