உள்ளடக்கத்துக்குச் செல்

ஏக்கர் அடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏக்கர் அடியின் அளவைக் காட்டும் வரைபடம். இது அளவுத் திட்டத்துக்கு அமைய வரையப்படவில்லை

ஏக்கர் அடி (Acre foot) என்பது கன அளவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு அலகு ஆகும். பொதுவாக, ஏரிகள், நீர்காவிகள், கால்வாய்கள், சாக்கடை நீரோட்ட அளவு, ஆற்று நீரோட்டம் போன்ற பெரிய அளவிலான நீர்வளங்கள் தொடர்பில் இந்த அலகு பயன்படுத்தப்படுகின்றது.

வரைவிலக்கணம்

[தொகு]

ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஒரு அடி ஆழமுள்ள நீரின் கன அளவே ஒரு ஏக்கர் அடி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. ஒரு ஏக்கர் 66 அடி x 660 அடி (1 சங்கிலி x 1 பர்லாங்) என்பதால் அது சரியாக 43,560 சதுர அடி ஆகின்றது. எனவே ஒரு ஏக்கர் அடி 43,560 x 1 கன அடியாகும். அமெரிக்க கலன், கன மீட்டர், லீட்டர் ஆகிய கன அளவுகளோடு இது பின்வருமாறு தொடர்புகளைக் கொண்டுள்ளது:

1 ஏக்கர் அடி = 325,851 அமெரிக்க கலன்
1 ஏக்கர் அடி = 1,233.5 கன மீட்டர்
1 ஏக்கர் அடி = 1,233,500 லீட்டர்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்கர்_அடி&oldid=2741722" இலிருந்து மீள்விக்கப்பட்டது