கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Canal de la Peyrade, Sète, Hérault 01.jpg

கால்வாய் எனப்படுவது நீர்ப்பாசனத்துக்காக கால்வாய்கள், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய்கள் என இருவகைப்படும். போக்குவரத்துக்கான கால்வாய்கள் செயற்கையாக அமைக்கப்படும் நீரிணைகள் ஆகும். இரு கடற்பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், அல்லது ஏரிப் பகுதிகளை இணைப்பதாக வெட்டப்படும் இவை கடற்போக்குவரத்துத் தூரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வெட்டப்படுபவை ஆகும்.

சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் போன்றன கப்பற் போக்குவரத்துக்காக வெட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கால்வாய்களாகும்.

நீர் பாசானக் கால்வாய்கள்[தொகு]

ஆற்று நீர் பாசானக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய், மாறுகால் கால்வாய், பாசனக் கால்வாய் அல்லது கழனிக்கால் என மூன்று வகைப்படும். [1]

வரத்துக் கால்வாய் (Supply Channel)[தொகு]

ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப்படும். அவ்வாறு வெட்டும் போது ஆற்றிலிருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்படும். மேலும் ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில் கூட, தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இதற்கு உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.

மறுகால் அல்லது வெள்ள வடிகால் கால்வாய் (Surplus Channel)[தொகு]

வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும்.

பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel)[தொகு]

ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பபடும். நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்வாய்&oldid=1977865" இருந்து மீள்விக்கப்பட்டது