சென் பீட்டர்ஸ்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயிண்ட் பீட்டஸ்பர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Saint Petersburg
சென் பீட்டர்ஸ்பேர்க்
Санкт-Петербург
Saint Petersburg
கொடி சின்னம்
பெரிய நகர் மத்திய மாநகர்
Government
 •  ஆளுநர் ஜார்ஜ் போதாவசென்கோ
பரப்பு
 •  மொத்தம் 605.8 கிமீ2 (82வது)
2,33,090 சதுர மைல்
 •  நீர் (%) 7%
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 4,879,566 (4வது)
 •  2001 கணக்கெடுப்பு 5,028,000
 •  அடர்த்தி 1439/km2 (82வது)
199/sq mi

சென் பீட்டர்ஸ்பேர்க் (Saint Petersburg, ரஷ்ய மொழி: Санкт-Петербу́рг (சாங்க்ட் பீட்டர்பூர்க், Sankt Peterburg) ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே பால்டிக் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: பெட்ரோகிராட் (Петрогра́д, 1914 - 1924), லெனின்கிராட் (Ленингра́д, 1924 - 1991)[1].

இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27, 1703 இல் அவனது "ஐரோப்பாவுக்கான கண்ணாடி"யாக அமைக்கப்பட்டது[2]. இந்நகரம் ரஷ்ய சாம்ராச்சியத்தின் தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு (1712-1728, 1732-1918) மேலாக இருந்து வந்துள்ளது. 1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது.[3]. மாஸ்கோ, லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். 4.6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.

வரலாறு[தொகு]

Saint Isaac's Cathedral in SPB.jpeg

ஸார் பீட்டர் பெருமகனரால் சுபானு ஆண்டு வைகாசி மாதம் 17ம் நாள் (27 மே 1703), திங்கட்கிழமையன்று சென் பீட்டர்ஸ்பேர்க் என்ற பெயரிட்டு நிறுவினார். மேலும் ருசியப் பேரரசின் தலைநகராக இருநூற்றாண்டுகளுக்கு மேலாக (1712–1728, 1732–1918) இருந்தது. 1917 ஆண்டில் நடந்த ருசியப் புரட்சிக்கு பின்னர், 1918ம் ஆண்டிலிருந்து தலைநகரை மாற்றியது ருசியப் பேரரசு[3].

மக்கள் தொகை[தொகு]

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் ரோஸ்டாடின்படி சென் பீட்டர்ஸ்பேர்கின் மொத்த மக்கள்தொகை 5,281,579 அல்லது ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3.6% ஆகும். இது 2010 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 4,879,566 (3.4%) ஆகவும் மற்றும் 1989 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 5,023,506 ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை இன ரீதியான கணக்கெடுப்பு : ரஷ்யர்கள் 80.1%, உக்ரேனியர்கள் 1.3%, பெலாரியர்கள் 0.8%, தாடார் 0.6%, ஆர்மீனியர்கள் 0.6%, யூதர்கள் 0.5%, உஸ்பெகியர்கள் 0.4%, தாஜிக்கியர்கள் 0.3%, அஜெரியர்கள் 0.3%, ஜோர்ஜியர்கள் 0.2%, மோல்டோவியர்கள் 0.2%, ஃபின்ஸ் 0.1%, மற்றவை - 1.3%. மீதமுள்ள 13.4% இன மக்கள் குறிப்பிடப்படவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் போது, நகரம் வியத்தகு மக்கள் தொகை மாற்றங்களை அனுபவித்தது. 1916 இல் இருந்த 2.4 மில்லியன் மக்கள் தொகை 1917 ரஷ்ய புரட்சியாலும் ரஷ்ய உள்நாட்டு யுத்தத்தினாலும் 740,000 க்கும் குறைவாக குறைந்தது.

புவி அமைப்பு[தொகு]

நகரின் மொத்த பரப்பளவு, 605.8 சதுர கிலோமீட்டர்கள் (233.9 sq mi)வாக உள்ளது. ஒருங்கிணைந்த நகராக ​ஒன்பது நகராட்சி நகரங்கள் மற்றும் இருபத்தியொரு நகர குடியேற்றங்களை கொண்டு 1,439 சதுர கிலோமீட்டர்கள் (556 sq mi)வாக உள்ளது.

காலநிலை[தொகு]

சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை, ஈரப்பத தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இங்குள்ள நேவா ஆறு, உறைபனியால் மூடியிருக்கும். நகரில் சராசரியாக 135 நாட்கள், உறைபனி இல்லாத காலமாக நீடிக்கிறது. நகரின் புறநகர் பகுதிகளைவிட சற்று வெப்பமான காலநிலையை கொண்டிருக்கிறது. வானிலையானது ஆண்டு முழுவதும் மாறி மாறி வரும்[4][5].

தட்பவெப்ப நிலைத் தகவல், சென் பீட்டர்ஸ்பேர்க்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 8.7
(47.7)
10.2
(50.4)
14.9
(58.8)
25.3
(77.5)
30.9
(87.6)
34.6
(94.3)
35.3
(95.5)
37.1
(98.8)
30.4
(86.7)
21.0
(69.8)
12.3
(54.1)
10.9
(51.6)
37.1
(98.8)
உயர் சராசரி °C (°F) -3.0
(26.6)
-3.0
(26.6)
2.0
(35.6)
9.3
(48.7)
16.0
(60.8)
20.0
(68)
23.0
(73.4)
20.8
(69.4)
15.0
(59)
8.6
(47.5)
2.0
(35.6)
-1.5
(29.3)
9.1
(48.4)
தினசரி சராசரி °C (°F) -5.5
(22.1)
-5.8
(21.6)
-1.3
(29.7)
5.1
(41.2)
11.3
(52.3)
15.7
(60.3)
18.8
(65.8)
16.9
(62.4)
11.6
(52.9)
6.2
(43.2)
0.1
(32.2)
-3.7
(25.3)
5.8
(42.4)
தாழ் சராசரி °C (°F) -8.0
(17.6)
-8.5
(16.7)
-4.2
(24.4)
1.5
(34.7)
7.0
(44.6)
11.7
(53.1)
15.0
(59)
13.4
(56.1)
8.8
(47.8)
4.0
(39.2)
-1.8
(28.8)
-6.1
(21)
2.7
(36.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -35.9
(-32.6)
-35.2
(-31.4)
-29.9
(-21.8)
-21.8
(-7.2)
-6.6
(20.1)
0.1
(32.2)
4.9
(40.8)
1.3
(34.3)
-3.1
(26.4)
-12.9
(8.8)
-22.2
(-8)
-34.4
(-29.9)
-35.9
(-32.6)
பொழிவு mm (inches) 44
(1.73)
33
(1.3)
37
(1.46)
31
(1.22)
46
(1.81)
71
(2.8)
79
(3.11)
83
(3.27)
64
(2.52)
68
(2.68)
55
(2.17)
51
(2.01)
661
(26.02)
ஈரப்பதம் 86 84 79 69 65 69 71 76 80 83 86 87 78
சராசரி மழை நாட்கள் 9 7 10 13 16 18 17 17 20 20 16 10 173
சராசரி பனிபொழி நாட்கள் 25 23 16 8 1 0.1 0 0 0.1 5 16 23 117
சூரியஒளி நேரம் 21.7 53.7 124.0 180.0 260.4 276.0 266.6 213.9 129.0 71.3 24.0 12.4 1,633.0
Source #1: Pogoda.ru.net[6]
Source #2: HKO (sunshine hours)[7]

போக்குவரத்து[தொகு]

சென் பீட்டர்ஸ்பேர்க்கானது, போக்குவரத்தின் முனையமாக உள்ளது. ரஷ்ய தொடர்வண்டி நிலையமானது, 1837 முதன் முதலாக கட்டப்பட்டது. அதன் பின்னர் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பானது அசுர வேகத்துடன் வளர்ச்சி பெற்றது. டிராம், மெட்ரோ, உள்ளூர் மேம்பாட்டுச் சாலைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என பல போக்குவரத்து சாதனங்கள் தன்னகத்தே அடக்கியுள்ளது. நகரானது, தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மற்றும் சர்வதேச தொடருந்துத் தடங்கள் மூலம் ரஷ்யா முழுவதும் பரந்த உலகுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சென் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ வரைபடம்
Saint Petersburg metro map ENG.png

தொடருந்து[தொகு]

1851ம் ஆண்டு மாஸ்கோவையும் சென் பீட்டர்ஸ்பேர்க்கையும் இணைக்கும் 651 கிலோமீட்டர்கள் (405 mi) நீளம் கொண்ட தெடருந்து தடத்தின் மூலம் பயணியர், மூன்றரை மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றுவிடலாம்[8].

முக்கிய தொடருந்து முனையங்கள்
விட்டப்சிகி தொடருந்து முனையம்  
மோஸ்கோவசிகி தொடருந்து முனையம்  
பல்டிசிகி தொடருந்து முனையம்  
பின்லியான்துசிகி தொடருந்து முனையம்  
லாதோசிகி தொடருந்து முனையம்  

வானூர்தி[தொகு]

புல்கோவா பன்னாட்டு விமான நிலையமே பிரதான நிலையமாக அமைந்துள்ளது[9]. இதற்கு அடுத்த நிலையாக மூன்று விமான நிலையஙகள் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர். நகரிலிருந்து விமான நிலையத்திற்கு, 24 மணிநேரமும் பேருந்து சேவையுள்ளது.

அரண்மனை

நகரமைப்பு[தொகு]

Peter & Paul fortress in SPB.jpg

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மூன்று வானளாவியங்கள் உள்ளன: லீடர் டவர் (140 மீ), அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி (124 மீ) மற்றும் அட்லாண்டிக் சிட்டி (105 மீ). இம்மூன்று இடங்களும் வரலாற்று மையங்களில் இருந்து தொலைவில் உள்ளன.310 மீட்டர் (1,020 அடி) உயரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டிவி கோபரம் நகரத்தில் மிக உயரமான கட்டடம் ஆகும். மாஸ்கோவிலுள்ளது போலல்லாமல், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பரோக் மற்றும் நியோகிளாசிக்கல் கட்டிடங்களை உள்ளடக்கிய நகர மையத்தின் வரலாற்று கட்டமைப்பு, பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது; எனினும் லெனின்கிராட் முற்றுகை மற்றும் போல்ஷிவிக்குகள் அதிகாரம் கைப்பற்றியபின்பும் பல கட்டிடங்கள் இடிந்துபோனது. பீட்டர் மற்றும் பால் கோட்டை, பீட்டர் மற்றும் பால் தேவாலயம் ஆகியவற்றுடன் இணைந்து நெவா ஆற்றின் வலது கரையிலுள்ள ஜயச்சி தீவில் அமைந்துள்ளது. 1913 இல் திறக்கப்பட்ட போது ஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதியாக இருந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மசூதி அருகிலுள்ள வலதுபுற கரையில் அமைந்துள்ளது. டிரினிட்டி கதீட்ரல், மரின்ச்கி அரண்மனை, ஹோட்டல் அஸ்டோரியா, பிரபலமான மாரின்ஸ்கி நாடக அரங்கம், நியூ ஹாலந்து தீவு, செயிண்ட் இசாக்ஸ் கதீட்ரல் (நகரத்தின் மிகப்பெரியது) மற்றும் செனட் சதுக்கத்தில் அடங்கும் பல குறிப்பிடத்தக்க அடையாளங்கள் கடற்படை நிர்வாகக்குழு கட்டிடத்தின் மேற்கே மற்றும் தெற்கே அமைந்துள்ளது.

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு[தொகு]

அனைத்து முக்கிய ரஷ்ய செய்தித்தாள்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயலில் உள்ளன. இந்நகரம் தொலைத்தொடர்பு அமைப்பில் அதித வளர்ச்சி பெற்றுள்ளது . நகரத்தில் பெறக்கூடிய தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்:

 1. சேனல் ஒன்
 2. ரஷ்யா-1
 3. ரஷ்யா-2
 4. NTV,
 5. டிவி செந்தர்
 6. சேனல் 5
 7. ரஷ்யா-கே
 8. ரஷ்யா-24
 9. ரஷ்யாவின் பொது தொலைக்காட்சி
 10. ரென் டிவி
 11. எஸ்டிஎஸ்
 12. டிஎன்டி
 13. டிவி-3
 14. பெரட்சே
 15. ஈரோ நியூஸிற்கு
 16. 2x2
 17. டிஸ்னி சேனல்

மற்றும் பல.

கல்வி[தொகு]

2006/2007 வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1024 மழலையர் பள்ளி, 716 பொதுப் பள்ளிகள் மற்றும் 80 தொழிற்கல்வி பள்ளிகள் இருந்தன. [பொது உயர் கல்வி நிறுவனங்களில் மிகப் பெரியது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஏறத்தாழ 32,000 இளங்கலை மாணவர்களை சேர்ப்பது;மிகப்பெரிய அரசு சாராத உயர் கல்வி நிறுவனம் சர்வதேச பொருளாதார உறவுகள், பொருளாதாரம் மற்றும் சட்ட நிறுவனம் ஆகும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், ஹெர்ஜன் பல்கலைக்கழகம், பொருளியல் மற்றும் நிதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இராணுவ பொறியியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை பிற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும்.

பிரபலமான மக்கள்[தொகு]

பீட்டர் தி கிரேட் - பின்னர் ரஷ்ய பேரரசர் விளாடிமிர் புடின் - ரஷ்யாவின் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் - ரஷ்யாவின் பிரதமர் கேதரின் தி கிரேட் - ரஷ்யா பேரரசி அலெக்சாண்டர் இரண்டாம் - ரஷ்யா பேரரசர் கிரிகோரி ரஸ்புடின் - ரோமானியர்களுக்கான ரஷ்ய மறைபொருள் மற்றும் ஆலோசகர் மைக்கேல் குளுசோவ் - ரஷ்யப் பேரரசின் கள மார்ஷல் மைக்கேல் ஆண்ட்ரியாஸ் பார்க்லே டி டோலி - ரஷியன் பீல்ட் மார்ஷல் மற்றும் போர் அமைச்சர் அலெக்ஸாண்டர் மென்சிகோவ் - ரஷ்ய அரசியலமைப்பாளர், ஜெனரல்சிஸ்மோ, அட்மிரால், புனித ரோம சாம்ராஜ்யத்தின் இளவரசர் கார்ல் கெஸ்டாஃப் எமில் மேனேர்ஹெய்ம் - பின்னிஷ் இராணுவத் தலைவரும் அரசியலாரும் அலெக்சாண்டர் புஷ்கின் - ரொமாண்டிக் சகாப்தத்தின் ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் பிளாக் - ரஷ்ய கவிஞன கவிஞர் அன்னா அக்தோவாவா - ரஷ்ய நவீன நவீன கவிஞர் ஃபியோடார் டோஸ்டோவ்ஸ்கி - ரஷ்ய நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் சாண்ட்ரா ட்ரெக்கர் - கச்சேரி பியானிஸ்ட் நிகோலாய் கோகோல் - ரஷ்ய நாடகவாதி, நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் மைக்கேல் லெர்மினோவ் - ரஷ்ய காதல் எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஓவியர் நிகோலாய் லெஸ்வவ் - ரஷ்ய நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஃபியோடார் டைட்டெவ்வ் - ரஷ்ய கவிஞர் கவிஞர் வசுலி டுயூகோவ்ஸ்கி - ரஷ்ய கவிஞர் நிகோலாய் நெக்ராவோவ் - ரஷ்ய கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் மற்றும் வெளியீட்டாளர் விளாடிமிர் மயாகோவ்ஸ்கி - ரஷியன் கவிஞர் ஜோசப் ப்ரோட்ஸ்கி - ரஷ்ய கவிஞர் மற்றும் கட்டுரையாளர் விளாடிமிர் நபோக்கோவ் - ரஷ்ய-அமெரிக்க நாவலாசிரியர் ஆல்ஃபிரட் நோபல் - ஸ்வீடிஷ் வேதியியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆயுத உற்பத்தியாளர்கள் டிமிட்ரி மெண்டலீவ் - ரஷ்ய வேதியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் மைக்கேல் லொமோமோஷோவ் - ரஷியன் பாலிமாத், விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் கார்ல் ஹெய்ன்ரிச் வோன் சீமென்ஸ் - ஜெர்மன் தொழில் முனைவர் நிக்கோலஸ் மிகுலோ-மேக்லே - ரஷ்ய ஆராய்ச்சியாளர், எதனலாளர், மானுடவியலாளர் மற்றும் உயிரியலாளர் இகோர் சிகார்ஸ்கி - ரஷ்ய ஏவியேஷன் முன்னோடி கிரிகோரி பெர்ல்மேன் - ரஷ்ய கணிதவியலாளர் இவன் பாவ்லோவ் - ரஷியன் உடலியல் மருத்துவர் டிமிட்ரி லிஹாகோவ் - ரஷ்ய மொழியியல் அறிஞர் லெவ் கும்லேவ் - ரஷ்ய சரித்திராசிரியர், எதனலாளர், மானுடவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் செர்ஜி ராச்மோனினெஃப் - ரஷ்ய இசையமைப்பாளர், பியானோ, மற்றும் நடத்துனர் மோடஸ்ட் முஸ்வர்கிசி - ரஷ்ய இசையமைப்பாளர் மைக்கேல் கிளின்கா - ரஷ்ய இசையமைப்பாளர் வாலரி கர்கிவ் - ரஷ்ய நடத்துனர் மற்றும் ஓபரா நிறுவனத்தின் இயக்குனர் நிகோலாய் ரிம்ஸ்கி-கோர்சாகோவ் - ரஷ்ய இசையமைப்பாளர் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் - ரஷ்ய இசையமைப்பாளர் மற்றும் பியானிஸ்ட் இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி - ரஷ்ய இசையமைப்பாளர், பியானோ மற்றும் நடத்துனர் பீட்டர் கார்ல் ஃபேபெர்கே - ரஷ்ய நகைகள் டொமினிகோ ட்ரிசினி - சுவிஸ் இத்தாலிய கட்டிடக் கலைஞர் மற்றும் பலர்.

சான்றுகள்[தொகு]

 1. சாங்க்ட் பீட்டர்ஸ்பேர்க் நகர ஆளுநர்
 2. மகா பீட்டர்: அவனது வாழ்வும் உலகமும் (Knopf, 1980]) by Robert K. Massie, ISBN 0-394-50032-6
 3. 3.0 3.1 Nicholas and Alexandra: An Intimate Account of the Last of the Romanovs and the Fall of Imperial Russia (Athenum, 1967) by Robert K. Massie, ASIN B000CGP8M2 (also, Ballantine Books, 2000, ISBN 0-345-43831-0 and Black Dog & Leventhal Publishers, 2005, ISBN 1-57912-433-X)
 4. "Climate St. Peterburg - Historical weather records". Tutiempo.net. பார்த்த நாள் 2012-11-16.
 5. "Архив погоды в Санкт-Петербурге, Санкт-Петербург". Rp5.ru. பார்த்த நாள் 2012-11-16.
 6. "Pogoda.ru.net" (Russian). Weather and Climate (Погода и климат). பார்த்த நாள் March 29, 2013.
 7. "சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை பற்றிய குறிப்புகள், ருசியா". ஹாங்காங் ஆய்வுக்கூடம். பார்த்த நாள் March 29, 2013.
 8. "Results of train ticket inquiry, Russian train schedules and Russian train tickets". RZD.com. பார்த்த நாள் January 1, 2011.
 9. "Россия - российские авиалинии". Rossiya-airlines.com (2007-07-25). பார்த்த நாள் 2012-11-16.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Petersburg
என்பதின் ஊடகங்கள் உள்ளன.