பேச்சு:கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg கால்வாய் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழகக் கால்வாய்களின் படம் ஏதும் இருப்பின் இப்பக்கத்தில் இணைக்கலாம்.--சிவகுமார் \பேச்சு 15:00, 4 பெப்ரவரி 2008 (UTC)

படத்தில் உள்ளதை இலங்கையில் வாய்க்கால் என்றுதான் அழைப்பார்கள் வாய்க்காலும் கால்வாயும் ஒன்றா? நேரம் கிடைத்தால் இலங்கையில் உள்ள வாய்க்கால் ஒளிப்படத்தைச் சேர்த்துவிடுகின்றேன். --உமாபதி \பேச்சு 16:50, 4 பெப்ரவரி 2008 (UTC)

கால்வாய், வாய்க்கால் ஆகிய இரண்டும் எழுத்துப்போலிகள். எனவே இரண்டுக்கும் ஆன பொருள் ஒன்றே என நினைக்கிறேன்121.247.214.128 17:21, 4 பெப்ரவரி 2008 (UTC)

புதுகையில் உள்ள எங்கள் ஊரில் வாய்க்காலும் கால்வாயும் ஒன்றல்ல. கால்வாய் என்பது ஆற்றில் இருந்து பிரியும் பெரிய அளவிலான ஓடைகளைக் குறிக்கும். வாய்க்கால் என்பது விளை நிலங்களுக்கு இடையேயும் உள்ளேயும் ஓடும் சிறிய அளவிலான பாசன ஓடைகளைக் குறிக்கும். எல்லா ஊர்களிலும் இது போல் தான் என்றால் கட்டுரைக்குள் குறிப்பிடலாம்--ரவி 20:29, 4 பெப்ரவரி 2008 (UTC)

ஈரோட்டில் வாய்க்கால் என்று தான் கூறுவர்.நானறிந்த வரையில் கால்வாய் என்ற சொல்லே பயன்பாட்டில் இல்லை. எனினும் தமிழக ஊடகங்களில் பெரும்பாலும் கால்வாய் என்றே குறிப்பிடுகின்றனர்.--சிவகுமார் \பேச்சு 04:58, 5 பெப்ரவரி 2008 (UTC)

சிவா, எங்கள் ஊர்ப் பக்கமும் ஆற்றுப் பாசனம் இல்லாததால் கால்வாய் என்ற சொல்லைக் கேட்டதில்லை. கால்வாய் என்ற சொல்லை வீராணம் கால்வாய்த் திட்டம் போன்ற இடங்களில் ஊடகங்கள் மூலம் கேட்டது தான்.--ரவி 08:07, 5 பெப்ரவரி 2008 (UTC)

எங்கள் ஊரிலும் அதே நிலைதான். -- சுந்தர் \பேச்சு 11:45, 5 பெப்ரவரி 2008 (UTC)

அகராதியில்[தொகு]

கழகத்தமிழ் அகராதியில் கால்வாய், வாய்க்கால் ஆகியவற்றிற்கு பின்வரும் விளக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

  • கால்வாய் - நீரோடும் வாய்க்கால்
  • வாய்க்கால் - நீரோடுங் கால், மகநாள்

--சிவகுமார் \பேச்சு 08:10, 6 பெப்ரவரி 2008 (UTC)

சிவா, இது எந்த அகரமுதலியில் இருக்கு? கால்வாய் = நீரோடும் நீரோடும் கால் - அப்படின்னு தானே சமன்பாடு வருது? அப்ப நீரோடோத வாய்க்கால் என்ன ;) --ரவி 10:44, 6 பெப்ரவரி 2008 (UTC)

இவை இருப்பது சைவ சிந்தாந்தப் பதிப்பகத்தின் கழகத்தமிழ் அகராதியில் தான். தமிழ்நாட்டில் இருப்பது எல்லாமே நீரோடாத ஆறுகளும் வாய்க்கால்களும் தானே :)--சிவகுமார் \பேச்சு 11:54, 6 பெப்ரவரி 2008 (UTC)

நானும் இதை நினைச்சேன்..தண்ணியே இல்ல..அப்புறம் வாய்க்காலா இருந்தா என்ன கால்வாயா இருந்தா என்னன்னு..ஆனா, இங்க சோக smiley போட்டிருக்கணும் :( --ரவி 11:56, 6 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கால்வாய்&oldid=2388095" இருந்து மீள்விக்கப்பட்டது