சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்

ஆள்கூறுகள்: 21°45′N 86°20′E / 21.750°N 86.333°E / 21.750; 86.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Orissa location map.svg" does not exist.
அமைவிடம்மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா
அருகாமை நகரம்பரிபடா
ஆள்கூறுகள்21°45′N 86°20′E / 21.750°N 86.333°E / 21.750; 86.333
பரப்பளவு2,750 சதுர கிலோமீட்டர்கள் (1,060 sq mi).
நிறுவப்பட்டது1980
வருகையாளர்கள்NA (in 2005)
வலைத்தளம்http://www.similipal.org/

சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகமாகும். ஒடிசாவின் வடக்கே உள்ள மயூர்பஞ்சு மாவட்டத்தில் வடக்கே 4374 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் 1994ஆம் ஆண்டு இந்திய அரசால் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோ வின் மனிதனும் உயிர்க்கோளமும் திட்டத்தின் கீழ் மே 2009 ஆம் ஆண்டு உலக உயிர்க்கோளக் காப்பகமாக அங்கீகரிக்கப்பட்டது.[1][2][3] இக்காப்பகம் கருப்புப் புலிகளுக்காக உலகப்பெயர் பெற்றுள்ளது.

புவியியல்[தொகு]

ஒடிசாவில் கிழக்கு பீடபூமி, சோட்டா நாக்பூர் பீடபூமி, கீழ்கங்கை சமவெளி மற்றும் கடற்கரையோர பகுதிகளைக்கொண்ட இக்காப்பகம் பல ஜீவ நதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் மிகப்பெரிய நீர்வடிப் பகுதியாகும். வெப்ப மண்டல பகுதி, பசுமைமாறா காடுகள், வெப்ப மண்டல ஈரமான இலையுதிர்க்காடுகள் மற்றும் சவன்னா பகுதிகள் என பல காடுவகைகளை உள்ளடக்கி, பல்லுயிர் வளம் நிறைந்து காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் தாவரயினங்களில் பூக்கும் தாவரங்கள் 7%, ஆர்கிட்கள் 8%, ஊர்வன 7%, பறவையினங்கள் 20% மற்றும் பாலூட்டிகள் 11% இங்குள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாவரங்கள்[தொகு]

இக்காப்பகத்தில் 94 வகை ஆர்கிட்கள் (இருவகை இவ்விடத்திற்கே உரித்தானது), 8 வகை அழியூம் தருவாயில் இருப்பவை, 8 வகை அழிந்து கொண்டிருப்பவை, மற்றும் 34 வகை அரியவை என சுமார் 1170 பூக்கும் தாவர இனங்கள் இங்கு காணப்படுகின்றன.[4] நீர் மருது, சிசு, செண்பகம், சால் மற்றும் இலுப்பை போன்ற மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்[தொகு]

யானை, புலி, சிறுத்தை, மீன் திண்ணி பூனை, நாற்கொம்பு மறிமான், செந்நிற கீரி, வல்லூறு மற்றும் மீன்திண்ணி கழுகு என 12 வகையான இருவாழ்விகள், 29 வகையான ஊர்வன, 260 வகையான பறவைகள் மற்றும் 42 வகையான பாலூட்டிகள் இங்குள்ளன.[5]

பழங்குடியினர்[தொகு]

மைய மண்டலத்தில் நான்கு கிராமங்கள், தாங்கல் மண்டலத்தில் 61 கிராமங்கள் மற்றும் நிலைமாறு மண்டலத்தில் 1200 கிராமங்கள் என 1265 கிராமங்களில் வாழும் 4.5 லட்சம் மக்களை உள்ளடக்கிய இவ்வுயிர்க்கோளத்தில் பெருமபாலும் பூமிஜா, பாதுடி, கோலா, கொண்டா, சந்தல், கடியா மற்றும் மாங்கடியா போன்ற பழங்குடியினர்கள் வாழ்கின்றனர்.[6]

அச்சுறுத்தல்கள்[தொகு]

வேட்டையாடுதல், காடழிப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் மேய்ச்சல் போன்றவை மிக முக்கிய அச்சுறுத்தலாகும். அகந்த்ஷிகார் என்ற பழங்குடியினர்களின் வேட்டைத் திருவிழாவும் மிகமுக்கிய அச்சுறுத்தலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Similipal Tiger Reserve". WWF INDIA. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Three Indian sites added to UNESCO list of biosphere reserves". Sify News. 27 May 2009. http://sify.com/news/fullstory.php?a=jf1u4rjejdc&title=Three_Indian_sites_added_to_UNESCO_list_of_biosphere_reserves. பார்த்த நாள்: 2009-05-30. 
  3. "UNESCO Designates 22 New Biosphere Reserves". Environment News Service. May 27, 2009 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303175759/http://www.ens-newswire.com/ens/may2009/2009-05-27-01.asp. பார்த்த நாள்: 2009-05-30. 
  4. (Jena 2005), p. 112
  5. "Simlipal National Park". Department of tourism, Odisha. பார்க்கப்பட்ட நாள் 12 December 2009.
  6. (Jena 2005), p. 111