உள்ளடக்கத்துக்குச் செல்

பிதர்கனிகா அலையாத்தி காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிதர்கனிகா அலையாத்தி காடுகள்[1]
ஆள்கூறுகள்20°43′51″N 86°51′59″E / 20.730696°N 86.866511°E / 20.730696; 86.866511
பரப்பளவு650
Invalid designation
தெரியப்பட்டது19 ஆகத்து 2002
உசாவு எண்1205[2]

 

பிதர்கனிகா அலையாத்தி காடுகள் (Bhitarkanika Mangroves) என்பது இந்தியாவின் ஒடிசாவில் 650 பரப்பளவைக் கொண்ட ஒரு அலையாத்தித் தாவரங்கள் நிறைந்த ஈரநிலமாகும். பிராம்மணி ஆறு மற்றும் பைதரணி ஆறு வடிநில பகுதியாக இது உள்ளது.

வரலாறு

[தொகு]

1952ஆம் ஆண்டு ஒடிசா அரசாங்கம் ஜமீன்தாரி முறையை ஒழித்து, ஜமீன்தாரி காடுகளை மாநில வனத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை பிதர்கனிகா சதுப்புநிலங்கள் ஜமீன்தாரி காடுகளாக இருந்தன. 1975-ல், 672 பரப்பளவு பிதர்கனிகா வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. சரணாலயத்தின் மையப் பகுதி, 145 பரப்பளவு கொண்டது. பிதர்கனிகா தேசிய பூங்கா செப்டம்பர் 1998-ல் அறிவிக்கப்பட்டது. கிழக்கே பிதர்கனிகா வனவிலங்கு சரணாலயத்தை எல்லையாகக் கொண்ட காகிர்மாதா கடல் சரணாலயம் செப்டம்பர் 1997-ல் உருவாக்கப்பட்டது. இது காகிர்மாதா கடற்கரை மற்றும் வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள பகுதியை உள்ளடக்கியது. பிதர்கனிகா சதுப்புநிலங்கள் 2002-ல் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.[3]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

[தொகு]
பிதர்கனிகா அலையாத்தி காட்டில் உள்ள உப்பு நீர் முதலை

பிதர்கனிகா சதுப்புநிலங்களில் அவிசென்னா, ப்ருகுயேரா, ஹெரிடியேரா மற்றும் ரைசோபோரா உள்ளிட்ட சுமார் 62 சதுப்புநில தாவரச் சிற்றினங்கள் காணப்படுகின்றன. சதுப்புநிலங்களில் உள்ள விலங்குகளில் ஊர்வனவற்றில் உவர் நீர் முதலை, இராச நாகம், இந்திய மலைப் பாம்பு மற்றும் நீர் உடும்பு ஆகியவை அடங்கும். ஆகத்து 2004 மற்றும் திசம்பர் 2006-க்கு இடையில், 263 பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 147 இப்பகுதியில் வாழக்கூடியவையாகவும் 99 வலசை செல்லக்கூடிய பறவைகளாகவும் உள்ளன. ஒரு ஹெரோன்ரி சுமார் 4 ha (9.9 ஏக்கர்கள்) ஐ உள்ளடக்கியது. இதில் 2006-ல்11,287 கூடுகள் இருந்தது கணக்கிடப்பட்டுள்ளது.[4]

ஓலிவ நிறச் சிற்றாமை சனவரி முதல் மார்ச் வரை காகிர்மாதா கடற்கரையில் முட்டையிடுவதற்காக வருகின்றன. ஒரு பருவத்திற்குச் சராசரியாக 240,000 கூடுகள் 1976 மற்றும் 1996க்கு இடையில் உள்ளது மதிப்பிடப்பட்டது. 1982 வரை ஒவ்வொரு ஆண்டும் 80,000 நபர்கள் வரை கைப்பற்றப்பட்டனர். 1983 முதல், ஆமைகள் மற்றும் ஆமைகளின் முட்டைகளைச் சேகரித்து சந்தைப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhitarkanika Mangroves". Protected Planet. Archived from the original on 2019-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-09-25.
  2. "Bhitarkanika Mangroves". Ramsar Sites Information Service. Archived from the original on 9 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  3. "Ramsar Convention Official site". Archived from the original on 2013-12-12.
  4. Gopi, G. V.; Pandav, B. (2007). "Avifauna of Bhitarkanika mangroves, India". Zoos' Print Journal 22 (10): 2839–2847. doi:10.11609/JoTT.ZPJ.1716.2839-47. https://www.researchgate.net/publication/261207818. 
  5. Rajagopalan, M.; Vivekanandan, E.; Pillai, S. K.; Srinath, M.; Bastian, F. (1996). "Incidental catch of sea turtles in India". Marine Fisheries Information Service. Technical and Extension Series (143): 8–17. http://eprints.cmfri.org.in/3817/1/Article_04.pdf. பார்த்த நாள்: 2019-05-19. 

வெளி இணைப்புகள்

[தொகு]