இலகாரி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம்
Appearance
இலகாரி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் (Lakhari Valley Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்கு காப்பகம் ஆகும்.
இந்த வனவிலங்கு சரணாலயம் 118 km2 (46 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலையின் இலகாரி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்குக் காணப்படும் தாவரம் கடலோர குங்கிலியம் (சோரியா ரோபசுடா) காடுகள் மற்றும் கலப்பு இலையுதிர் காடுகள் ஆகியவை அடங்கும்.[1] இலகாரி பள்ளத்தாக்கு கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழல் பகுதியில் அமைந்துள்ளது.
இச்சரணாலயத்தின் வாயில் அருகே வசிக்கும் கிராம மக்கள், சந்திரகிரி மலைத்தொடருக்கு உட்பட்ட பகுதியில் குறிப்பிடத்தக்க வனவிலங்குகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Negi, Sharad Singh (1993). Biodiversity and Its Conservation in India. Indus Books. p. 244.