குல்திகா வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்திகா வனவிலங்கு சரணாலயம்
କୁଲଡିହା ବନ୍ୟଜନ୍ତୁ ସଂରକ୍ଷଣାଳୟ
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Kuldiha Wildlife Sanctuary
Kuldiha Wildlife Sanctuary
ஒடிசாவில் குல்திகா வனவிலங்கு சரணாலயம்
அருகாமை நகரம்பாலசோர்
ஆள்கூறுகள்21°12′N 86°18′E / 21.20°N 86.3°E / 21.20; 86.3
பரப்பளவு272.75 km2 (105.31 sq mi)
அறிவிக்கப்பட்டதுசனவரி 4, 1984 (1984-01-04)
வருகையாளர்கள்6340 (in 2015)[1]
நிருவாக அமைப்புவனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒடிசா
வலைத்தளம்www.kuldihatourism.com

குல்திகா வனவிலங்கு சரணாலயம் (Kuldiha Wildlife Sanctuary என்பது ( Odia ) இந்தியாவின் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியில் 272.75 km2 (105 sq mi) பரப்பளவில் பரவியுள்ளது. இது சுகுபாடா மற்றும் நேட்டோ மலைத்தொடர்கள் வழியாக சிமிலிபால் தேசிய பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழல் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விளக்கம்[தொகு]

சிமிலிபால் உயிர்க்கோளத்தின் முக்கிய இடம்
WS: வனவிலங்கு சரணாலயம், WR: நீர் தேக்கம், HT: மலை முடி, பிற: O
குறிப்பு: சிறிய வரைபடத்தில் உள்ள இடக் கட்டுப்பாடுகள் காரணமாக, பெரிய வரைபடத்தில் உள்ள உண்மையான இடங்கள் சற்று மாறுபடலாம்

குல்திகா வனவிலங்கு காப்பகம் 4 சனவரி 1984 அன்று ஒரு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[2] சிமிலிபால், குல்திகா மற்றும் அட்கர் வனவிலங்கு காப்பகங்களில் பரவியுள்ள மயூர்பஞ்ச் யானைகள் காப்பகத்தினால் இது பிரபலமானது.[3] குல்திகாவில் உள்ள யானைகள் காப்பகம் தெண்டா யானைகள் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.[4][5] விலங்கு பிரியர்கள் யானைகள் குளிப்பதையோ அல்லது காப்பகத்தின் வழியாக ஓடும் ஒரு சிறிய ஓடையில் தண்ணீர் குடிப்பதையோ பார்ப்பதற்காக கார்சிமுலியாவில் ஒரு காட்சி கோபுரம் உள்ளது.[6] குல்திகா சரணாலயம் நுழைவாயில், ஜடாச்சுவா மற்றும் ரிஷியா ஆகிய இடங்களில் குடிசைகள், கூடாரங்கள் மற்றும் சில கொங்கிறீற்றுக் கலப்பி வீடுகளில் இரவு தங்கும் வசதியுள்ளது. ஆனால் இரவு தங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.[7] பொதுவாகச் சூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட உச்ச பருவ மழைக்காலத்தில் இச்சரணாலயம் பார்வையாளர்களுக்கு மூடப்படும். 2012-ல் சிம்லிபால் மற்றும் குல்திகா காடுகளில் ஏற்பட்ட பெரிய தீ, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சேதத்தை ஏற்படுத்தியது.[8] ஆகத்து 2013-ல் இந்த சரணாலயம் சுற்றுச்சூழல் உணரிட மண்டலமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.[9]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

கருப்பு கொண்டை புல்புல்

இங்குக் குங்கிலியம் மரத்தின் ஆதிக்கம் கொண்ட கலப்பு இலையுதிர் காடுகள் உள்ளன. புலி, சிறுத்தை, யானை, இந்தியக் காட்டெருது, கடமான், கிழக்கத்திய பெரும் அணில், மலை மைனா, மயில், இருவாய்ச்சி, பிற வலசைப் பறவைகள் மற்றும் ஊர்வன உட்பட பல்வேறு விலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன.[10] இந்த சரணாலயம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு ஆராய்ச்சிக்கான புகலிடமாக உள்ளது. சரணாலயத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தும் பல அறிவியல் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் உள்ளன.[11][12]

சுற்றுலா[தொகு]

குல்திகா வடக்கு ஒடிசாவில் சுற்றுலாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது சுற்றுலாப் பயணிகளையும் அறிஞர்களையும் ஈர்க்கிறது.

சுற்றுச்சூழல் சுற்றுலா[தொகு]

பல பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் இருப்புகளுக்குத் தனியார் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தை ஒடிசாவின் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதன் விளைவாக பல்லுயிர் பெருக்கத்திற்கு நிலையான அச்சுறுத்தல் உள்ளது. பொது-தனியார் கூட்டு மாதிரியுடன் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்றும் அதே வேளையில் இயற்கையின் அழகிய நிலையைப் பாதுகாக்க ஒரு சூழலியல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தி வருகிறது. குல்திகா சரணாலயம் சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் சுற்றுலா மாதிரியில் இயக்கப்படுகிறது. இது சரணாலயத்தின் மையப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மற்றும் பழங்குடியினருக்குப் பயனளிக்கிறது.[7][13][14][15]

அணுகல்[தொகு]

இந்த சரணாலயம் புவனேசுவரம் மற்றும் கொல்கத்தாவிலிருந்து ஏறக்குறைய சம தூரத்தில் உள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரிலிருந்து எளிதாக அடையலாம். இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் பாலேசுர் தொடருந்து நிலையம் ஆகும். ஒருவர் தேசிய நெடுஞ்சாலை 16 (முன்னர் நியமிக்கப்பட்ட தேநெ5)-ஐப் பயன்படுத்தி ஒடிசா மாநில நெடுஞ்சாலை 19 வழியாக நீலகிரியை அடையலாம்; அதன் பிறகு ஒரு அழகிய குறுகிய சாலை சரணாலய நுழைவாயிலுக்குச் செல்கிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kuldiha Sanctuary Closed". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 16 June 2015. http://www.newindianexpress.com/states/odisha/Kuldiha-Sanctuary-Closed/2015/06/16/article2869147.ece. 
 2. Faunal resources of Similipal Biosphere Reserve, Mayurbhanj, Orissa. 
 3. "Mayurbhanj Elephant Reserve". http://www.similipal.org/elephant_reserve.php. 
 4. "Kuldiha Forest, Balasore – 350 kms [sic from Kolkata"]. 6 June 2011. http://weekenddestinations.info/2011/distance/201-500-kms/kuldiha-forest-balasore-350-kms-from-kolkata/. 
 5. The Indian Forester (Volume 122). 
 6. "Kuldiha- A less known Forest". 6 Sep 2009. http://ourtravelindia.blogspot.in/2009/09/kuldiha-less-known-forest.html. 
 7. 7.0 7.1 Udgata, Harsha Bardhan (Nov 2012). "Eco-Tourism Destinations of Odisha". ஒடிசா அரசு. p. 49. http://odisha.gov.in/e-magazine/Orissareview/2012/nov/engpdf/45-49.pdf. 
 8. "Forest fire engulfs Similipal, Kuldiha areas". http://www.news18.com/news/india/forest-fire-engulfs-similipal-kuldiha-areas-453671.html. 
 9. "Submission of proposals to the States for declaration of Eco-sensitive Zones..". Ministry of Environment and Forests (India). 2 Aug 2013. p. 3. http://www.moef.nic.in/sites/default/files/scan0202.pdf. 
 10. Rout, Srustidhar (27 Dec 2015). "Diversity of herpetofaunal community in Kuldiha wildlife sanctuary, Odisha, India" (in English). Current Life Sciences 2016 2(1) (9–14). பன்னாட்டுத் தர தொடர் எண்:2449-8866. 
 11. "Food and Feeding habits of Indian Bison, Bos Gaurus (Smith, 1827) in Kuldiha Wildlife Sanctuary, Balasore, Odisha, India and its Conservation". International Research Journal of Biological Sciences 4 (5): 73–79. 8 May 2015. பன்னாட்டுத் தர தொடர் எண்:2278-3202. 
 12. Mohapatra, KK; Patra, AK; Paramanik, DS (January 2013). "Food and feeding behaviour of Asiatic elephant (Elephas maximus Linn.) in Kuldiha Wild Life Sanctuary, Odisha, India.". Journal of Environmental Biology 34 (1): 87–92. பப்மெட்:24006812. 
 13. Raghu Prasad, R. "ECOTOURISM AND PROTECTED AREAS: CONTRIBUTING COMMUNITY DEVELOPMENT AND CONSERVING BIODIVERSITY, PILOTED IN SATKOSIA". TERI University. http://www.teriuniversity.ac.in/mct/pdf/new/assignment/Raghu_Prasad_Ecotourism_and_Protected_Areas.pdf. பார்த்த நாள்: 30 May 2016. 
 14. "ECOTOURISM IN ODISHA" இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160611033623/http://www.odishaecotourism.com/ecotourism-odisha.html. பார்த்த நாள்: 30 May 2016. 
 15. Barik, Bibhuti (June 2015). "Private push to eco-tourism". The Telegraph (Calcutta). http://www.telegraphindia.com/1140616/jsp/odisha/story_18514760.jsp#.V0vF6JF97IU. 

குறிப்புகள்[தொகு]

இமாலயா பப்ளிஷிங் அவுஸ் அவர்களின் கல்வி அறிக்கையை எதிர்காலக் குறிப்புக்காகப் பதிவேற்றியதைப் பயன்படுத்த ஒப்புதல்.

வெளி இணைப்புகள்[தொகு]