கிழக்கத்திய பெரும் அணில்
கிழக்கத்திய பெரும் அணில்கள் Oriental giant squirrels புதைப்படிவ காலம்:நடு மியோசின் முதல் | |
---|---|
![]() | |
இந்திய பெரும் அணில், ரட்டுபா இண்டிகா | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | அணில் |
துணைக்குடும்பம்: | Oriental giant squirrel மூரே, 1959 |
பேரினம்: | Ratufa
|
சிற்றினங்கள் | |
ரட்டுபா அபினிசு | |
வேறு பெயர்கள் | |
இயோசுகுரியசு |
கிழக்கத்திய பெரும் அணில் (Oriental giant squirrel) என்பது பூனை அளவிலான மரத்தில் வாழும் அணில்கள் ஆகும். இவை ரட்டுபினே துணைக் குடும்பத்தில் ரட்டுபா பேரினத்தினைச் சார்ந்தவை. இவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தனித்துவமான விலங்குகளாகும்.
சிற்றினங்கள்[தொகு]
கிழக்கத்திய பெரும் அணில் பேரினமான ரட்டுபாவின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன:
படம் | பொது பெயர் | அறிவியல் பெயர் | விநியோகம் |
---|---|---|---|
![]() |
கிரீம் நிற மாபெரும் அணில் | ரட்டுபா அபினிசு | தாய்-மலாய் தீபகற்பம், சுமத்ரா (இந்தோனேசியா), போர்னியோ (புருனே, இந்தோனேசியா மற்றும் மலேசியா) |
![]() |
பெரிய கருப்பு அணில் | ரட்டுபா பைகோலர் | வடக்கு வங்கதேசம், வடகிழக்கு இந்தியா, கிழக்கு நேபாளம், பூட்டான், தெற்கு சீனா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, வியட்நாம் மற்றும் மேற்கு இந்தோனேசியா (ஜாவா, சுமத்ரா, பாலி மற்றும் அருகிலுள்ள சிறிய தீவுகள்) |
![]() |
இந்திய மலை அணில் | ரட்டுபா இண்டிகா | இந்தியா. |
![]() |
பழுப்பு மர அணில் | ரட்டுபா மேக்ரூரா | தென்னிந்தியா, இலங்கை |
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இந்த கிழக்கத்திய பெரும் அணில் பரம்பரை மிகவும் பரவலாக இருந்தது. உதாரணமாக, ரட்டுபாவினை மிகவும் ஒத்த மற்றும் சாத்தியமான விலங்குகள் இந்த பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டன. அல்லது குறைந்த பட்சம் ரடுபினே குடும்பத்தினை சார்ந்ததாக ஆரம்ப லாங்கியனி, நடு மியோசின் காலத்திலிருந்தது (16-15.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஜெர்மனிய ஹாம்பேச் விலங்கினங்கள்) [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gee, Carole T.; Sander, P. Martin; Petzelberger, Bianka E .M. (2003). "A Miocene rodent nut cache in coastal dunes of the Lower Rhine Embayment, Germany". Palaeontology 46 (6): 1133–1149. doi:10.1046/j.0031-0239.2003.00337.x.