இலையுதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Grove of tall deciduous forest trees
இரண்டாவது-வளர்ச்சி இலையுதிர் காடுகள், வாரன் கவுண்டி , நியூ ஜெர்சி , யுனைடெட் ஸ்டேட்ஸ் (ஜூன் 2007)
Forest path flanked with young trees in autumn colors
இலையுதிர் காலத்தில் இலையுதிர் காடு, ஹெஸ்ஸ , ஜெர்மனி
Group of bare trees on a snowy day
குளிர்காலத்தில் இலையுதிர் காடு, டென்மார்க்

இலையுதிர் காடுகள் (deciduous) (/dɪˈsɪdʒuəs/) எனப்படுபவை தாவரவியல் துறைக் கூற்றுப்படி, [1] "முதிர்ச்சியின் முடிவில் விழுதல்"[2] மற்றும் "விழுந்துவிடும் தன்மை" கொண்ட காடுகள்[3] எனப் பொருள்படுகிறது. பொதுவாக மரங்கள் மற்றும் புதர் தாவரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்க்கும். மலர்ந்த பிறகு இதழ்களை உதிர்க்கும் மற்றும் பழுத்த பின் பழங்களை உதிர்ப்பதனை இதற்கு சான்றுகளாகக் கூறலாம்.

இலையுதிர் மரங்களின் கட்டைகள் தொழிற்சாலைகளில் பலவிதங்களில் பயன்படுகின்றன. மரச்சாமான்கள் தயாரிக்க, கட்டுமானத்திற்கு, தளங்கள் அமைக்க, அழகுக் கலைப் பொருட்களை உருவாக்க, பேஸ்பால் மட்டைகள் தயாரிக்க, நீள் பலகைகளாகச் செதுக்க என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

தாவரவியல்[தொகு]

இலையுதிர் தாவரங்கள் குறிப்பாக மரங்கள்,  புதர்கள் போன்றவை ஆண்டின் சில காலங்களில் தங்கள் இலைகள் முழுவதையும் உதிர்க்கின்றன.[4] . இந்த முறைக்கு வெட்டி நீக்கல் (abscission)  என்று பெயர்[5] . மிதவெப்ப அல்லது துருவ காலநிலைகளில் இலை இழப்பு குளிர்காலத்துடன் தொடர்புடையதாக உள்ளது[6] .ஆனால் சில சமயங்களில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல வறண்ட பகுதிகளில் தாவரங்கள் மழை அளவு குறைபாடு வறட்சி ஆகியவற்றால் இலைகளை இழக்கின்றன.


Flowering branch of forsythia amid bare trees
இலையுதிர் காலத்தின் போர்சையா மலர்கள்

செயல்பாடு[தொகு]

Fallen leaves covering a patch of ground
இலையுதிர் காலத்தில் இலையுதிர் தாவரங்கள் இலைகளை உதிர்க்கின்றன .[7]

பசுமை தாவரங்களுடன் ஒப்பிடும்போது இலையுதிர் தாவரங்களில் சில நன்மை தீமைகள் உள்ளன. இலையுதிர் தாவரங்கள் நீரிழப்பை குறைப்பதற்காகவும், பனிக்காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்வதற்காகவும், வரக்கூடிய பருவங்களில் புதிய இலைகளை உருவாக்கத் தேவையான வளங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன[8] . இலைகள் உதிர்ந்த இடத்தில்சிறு பள்ளங்கள் ஏற்படுகின்றன.

இலையுதிர்ப்பின் மூலமாக தாவரங்களில் ஏற்படும் காழ்க்கலன் மூலக பாதிப்பினை குறைக்க இயலும். இதன்மூலம் இலையுதிர் தாவரங்களில் காழ்க்கலன் மூலகங்கள் அதிக அளவிலான விட்டங்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.மேலும் கோடைகாலங்களில் அதிக அளவிலான ஆவியுயிர்ப்பிற்கு இது உதவுகிறது.


பகுதிகள்[தொகு]

வளரும் பருவத்தின் இறுதியில் தங்கள் இலைகளை இழக்கும் தன்மையுடைய மரங்களை அதிகமாகக் கொண்ட காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன[9].

மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் தென் அமெரிக்கா, ஆசியா, இமய மலையின் தென் சரிவு, ஐரோப்பா, ஒசீனியாவின் சாகுபடி பகுதிகளில் காணப்படுகின்றன

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. The Century Dictionary and Cyclopedia: Dictionary. https://books.google.com/books?pg=PA1484. 
  2. William Dwight Whitney; Century Dictionary. The Century Dictionary and Cyclopedia: Dictionary. books.google.com. பக். 1484. https://books.google.com/books?pg=PA1484. 
  3. Ecosystems. https://books.google.com/?id=Pqgtn89ad-wC&pg=PT9. 
  4. University of the Western Cap. "Trees that lose their leaves". botany.uwc.ac.za. Archived from the original on 25 March 2013.
  5. Dr. Kim D. Coder; University of Georgia (1999). "Falling Tree Leaves: Leaf Abscission" (PDF). forestry.uga.edu. Archived from the original (PDF) on 18 May 2013.
  6. Science Daily. "Science Reference: Deciduous". sciencedaily.com. Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.
  7. Bonan, Gordon (2015) (in en). Ecological Climatology: Concepts and Applications. Cambridge University Press. பக். 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781316425190. https://books.google.com/books?id=kq8kDQAAQBAJ&pg=PA294. 
  8. Labandeira, C. C.; Dilcher, D. L.; Davis, D. R.; Wagner, D. L. (1994). "Ninety-seven million years of angiosperm-insect association: paleobiological insights into the meaning of coevolution". Proceedings of the National Academy of Sciences of the United States of America 91 (25): 12278–12282. doi:10.1073/pnas.91.25.12278. பப்மெட்:11607501. Bibcode: 1994PNAS...9112278L. 
  9. Röhrig, Ernst; Ulrich, Bernhard, தொகுப்பாசிரியர்கள் (1991). Temperate deciduous forests. Ecosystems of the world, 7. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-88599-4. https://archive.org/details/temperatedeciduo0000unse. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலையுதிர்&oldid=3849293" இலிருந்து மீள்விக்கப்பட்டது