உள்ளடக்கத்துக்குச் செல்

பாலுகாந்த்-கொனார்க் வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலுகாந்த்-கொனார்க் வனவிலங்கு சரணாலயம் (Balukhand-Konark Wildlife Sanctuary) ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு வனவிலங்குச் சரணாலயமாகும். வங்காள விரிகுடா கடற்கரையில் புரி, கொனார்க் நகரங்களுக்கிடையில் 72 கி.மீ2 பரப்பளவில் இவ்விலங்குச் சரணாலயம் பரந்து விரிந்துள்ளது[1].

மணற்பாங்கான கடற்கரைகள், கடலோர குன்றுகள், 1916-17 நடப்பட்ட சவுக்கு மரத்தோப்பு, மற்றும் முந்திரி தோட்டங்கள் அடங்கியுள்ள வனவிலங்கு சரணாலயமாக பாலுகாந்த்-கொனார்க் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது[2].

1984 இல் வடிவமைக்கப்பட்ட இச்சரணாலயத்தில் மரபார்ந்த தாவரங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன[3].

இச்சரணாலயத்தில் கலைமான்களும் கடற்கரையில் கூடு அமைத்து வாழும் கடல் ஆமை வகைகளும் காணப்படுகின்றன[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Balukhand-Konark Wildlife Sanctuary". Odisha Forest Development Corporation. Accessed 29 July 2014. [1] பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம்
  2. "Balukhand-Konark Wildlife Sanctuary". Odisha Forest Development Corporation. Accessed 29 July 2014. [2] பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம்
  3. "Balukhand-Konark conservation program." Wild Orissa. Accessed 29 July 2014. [3] பரணிடப்பட்டது 2016-12-23 at the வந்தவழி இயந்திரம்
  4. "Balukhand-Konark Wildlife Sanctuary". Odisha Forest Development Corporation. Accessed 29 July 2014. [4] பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம்