பெர்காம்பூர்
பெர்காம்பூர்
ବ୍ରହ୍ମପୁର | |
---|---|
அடைபெயர்(கள்): பட்டு நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கஞ்சாம் மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெர்காம்பூர் மாநகராட்சி |
• மேயர் | கே. மாதவி |
பரப்பளவு | |
• மொத்தம் | 86.82 km2 (33.52 sq mi) |
ஏற்றம் | 26 m (85 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,55,823 |
• தரவரிசை | 126வது இடம் |
• அடர்த்தி | 4,100/km2 (11,000/sq mi) |
இனம் | பெர்காம்புரியர்கள் |
மொழிகள் | |
• அலுவல் | ஒரியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 760001–760010 |
தொலைபேசி குறியிடு | 0680 |
வாகனப் பதிவு |
|
இணையதளம் | www |
பெர்காம்பூர், அலுவல் பெயர் பிரம்மபூர், கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்த மாநகராட்சி மற்றும் கஞ்சாம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.
பெர்காம்பூர், மாநிலத் தலைநகரான புவனேஸ்வரத்திலிருந்து 169 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தின் வடக்கே 255 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பட்டுச் சேலைகளுக்கு புகழ் பெற்ற பெர்காம்பூர் நகரத்தை பட்டு நகரம் என்றும் அழைப்பர்.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெர்காம்பூர் நகரத்தின் தற்காலிக மொத்த மக்கள் தொகை 355,823 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 185,584, பெண்கள் 170,239 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 90.04% ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.2% ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர்.[1]
நிர்வாகம்
[தொகு]பெர்காம்பூர் நகராட்சி மூலம் 1867 முதல் டிசம்பர் 2008 முடிய பெர்காம்பூர் நகரம் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் இந்நகராட்சி 30 டிசம்பர் 2008 முதல் மாநகராட்சி தகுதி பெற்றது.
போக்குவரத்து
[தொகு]சாலை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண்கள் 5, 59 மற்றும் 217 பெர்காம்பூர் வழியாக செல்வதால்,புவனேசுவரம் - சென்னை – விஜயவாடா - கொல்கத்தா போன்ற பெரு நகரங்களுடன் சாலை வழி பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளது.[2][3]
தொடருந்து சேவைகள்
[தொகு]பெர்காம்பூர் தொடருந்து நிலையம், கொல்கத்தா-கட்டாக், புரி, விஜயவாடா-சென்னை, பெங்களூரு, மும்பை, நாக்பூர், தில்லி போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
கடல்
[தொகு]பெர்காம்பூர் நகரம், கோபால்பூர் மற்றும் பகுதா என இரண்டு சிறு துறைமுகங்கள் கொண்டுள்ளது.
கல்வி
[தொகு]பல்கலைக் கழகங்கள்
[தொகு]- பெர்காம்பூர் பல்கலைக் கழகம்
- கள்ளிக்கோட்டே பல்கலைக்கழகம் The Khallikote University பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) [4]
புகழ் பெற்றவர்கள்
[தொகு]தட்ப வெப்பம்
[தொகு]பெர்காம்பூர் நகரத்தின் குறைந்த பட்ச கோடை கால வெப்ப நிலை 4040o C; குளிர்கால குறைந்த பட்ச வெப்ப நிலை 22o C ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1250 மில்லி மீட்டராகும். மழைக்காலம் ஜூலை முதல் அக்டோபர் வரையாகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், பெர்காம்பூர், ஒடிசா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 27.4 (81.3) |
29.1 (84.4) |
30.9 (87.6) |
31.7 (89.1) |
32.8 (91) |
32.5 (90.5) |
30.8 (87.4) |
31.0 (87.8) |
31.5 (88.7) |
31.0 (87.8) |
29.2 (84.6) |
27.5 (81.5) |
30.45 (86.81) |
தாழ் சராசரி °C (°F) | 16.7 (62.1) |
19.3 (66.7) |
22.4 (72.3) |
25.1 (77.2) |
26.8 (80.2) |
26.8 (80.2) |
25.9 (78.6) |
25.9 (78.6) |
25.7 (78.3) |
23.7 (74.7) |
19.3 (66.7) |
16.5 (61.7) |
22.84 (73.12) |
மழைப்பொழிவுmm (inches) | 10 (0.39) |
16 (0.63) |
21 (0.83) |
17 (0.67) |
42 (1.65) |
151 (5.94) |
208 (8.19) |
227 (8.94) |
193 (7.6) |
232 (9.13) |
68 (2.68) |
5 (0.2) |
1,190 (46.85) |
ஆதாரம்: en.climate-data.org |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Urban Agglomeratons/Cities having population 1 lakh and above" (PDF). தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். pp. 6, 7. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
- ↑ http://www.thehindu.com/news/national/other-states/naveen-inaugurates-bus-service/article5732383.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/city-bus-service-to-berhampur-urban-centres-soon/article5724831.ece
- ↑ http://www.business-standard.com/article/pti-stories/odisha-govt-announces-iiser-will-be-set-up-in-Brahmapur-115080100949_1.html