உள்ளடக்கத்துக்குச் செல்

தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்
இந்திய மக்கள்தொகை பரம்பல்
சுருக்கம்RGCCI
துவங்கியது1961
தலைமையகம்ஜெய்சிங் சாலை, புதுதில்லி -110001
Region servedஇந்தியா
Registrar General & Census Commissionerவிவேக் ஜோசி[1]
வலைத்தளம்censusindia.gov.in
இந்திய மக்கள்தொகை அடர்த்தி
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு வழங்கிய அறிவிக்கை

தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் (Registrar General and Census Commissioner of India), பதவியை 1961-ஆம் ஆண்டில், இந்திய மக்கள்தொகையை பத்தாண்டுகளுக்கு ஒரு கணக்கெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் தலைமைப் பதிவாளர் மற்றும் ஆனையரும், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவார்.

1961 ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் மக்கள்தொகை பரம்பலை, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் இந்திய மொழியியல் ஆய்வுடன் கணக்கெடுக்கப்படுகிறது. இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் தலைமைப் பதிவாளராக இருப்பர்.

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1881 முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு தற்காலிக அமைப்பால் நடத்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இப்பணியை மேற்கொள்ள, 1961-ஆம் ஆண்டில், முதன் முறையாக தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் தலைமையில், இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தனி துறை நிறுவப்பட்டது.[2]

பணிகள்

[தொகு]

தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரால் நியமிக்கப்படும் உள்ளூர் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வாரியாக மக்கள்தொகையை, குடியுரிமை (Citizenship), பெயர்,அ பாலினம், வயது, தாய் மொழி, பின்பற்றும் சமயம், எழுத்தறிவு, கல்வியறிவு, பொருளாதாரம், நகரமயமாக்கம், புலம்பெயர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், தொழில் முனைவோர், வணிகம் செய்வோர், வேளாண்மை செய்வோர், விளைவிக்கப்படும் வேளாண் பயிர்கள், பட்டியல் மக்கள் - பழங்குடி மக்கள் வாரியாக கணக்கெடுக்கின்றனர். இத்துடன் தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் பராமரிக்கின்றனர். இதனால் இந்தியக் குடியுரிமை பெறாதவர்களை கண்டுபிடித்து நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் பிறப்பு - இறப்பு பதிவேடுகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் மக்கள்தொகை தேரயமாக கணக்கிடப்படுகிறது.

பின்னர் அவற்றைத் தொகுத்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக மக்கள்தொகை பரம்பல் குறித்தான கையேடு தயாரிக்கின்றனர். பின்னர் மாநிலங்கள் வாரியாகாவும், இறுதியாக இந்தியா அளவில் மக்கள்தொகை பரம்பலை பட்டியலிட்டு வெளியிடுகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு ஒரு இந்தியாவின் மக்கள்தொகையை அறிந்து அதற்கேற்ப இந்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி அமைப்புகளால் சமூக வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Office of the Registrar General & Census Commissioner, India".
  2. Vemuri, Murali Dhar (1997). "Data Collection in Census: A Survey of Census Enumerators". In Rajan, Sebastian Irudaya (ed.). India's Demographic Transition: A Reassessment. M. D. Publications. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175330283.

மேலும் படிக்க

[தொகு]