தேசிய மக்கள் தொகை பதிவேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register (NPR)) என்பது இந்திய அரசின், உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கட்தொகை கணக்கிடும் தலைமை ஆணையாளர் (Registrar General and Census Commissioner of India), இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும். [1].[2]

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் மக்கள் தொகைப் கணக்கெடுப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பராமரிக்கும் பணி இடைவிடாத தொடர்பணியாகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய மக்கட்தொகை பதிவேடு தொடர்ந்து பராமரிக்க திட்டமிடப்பட்டது.

மக்கள் தொகை பதிவேட்டை பராமரிக்கும் நோக்கம்[தொகு]

  1. இந்திய அரசின் மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து பகுதி மக்களை சென்றடையச் செய்வது.
  2. இந்திய அரசின் திட்டமிடலை மேம்படுத்துவது.
  3. இந்தியக் குடிமகன்களை கண்டறிவதுடன், இந்தியர் அல்லாவதவர்களையும் கண்டறிவது.
  4. நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவது.[3]

இந்தியக் குடியிரிமைச் சட்டம்[தொகு]

இந்தியக் குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 14A-இன்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேசிய மக்கட்தொகை பதிவேட்டில் தங்களைப் பற்றிய விவரங்களை கட்டாயமாக வழங்க வேண்டும். மக்கட்தொகை கணக்கெடுப்ப்பின் போது, இந்தியக் குடிமகன்களிடமிருந்து தேவையான விவரங்கள் பெற்று தேசிய மக்கட்தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்படும [4] [5]

ஆதார் அடையாள அட்டை[தொகு]

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் பதியாதவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்படாது. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தங்கள் பெயர் பதியாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், பெயர் விவரங்கள் பதிந்த பின், ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]