முக்தீஸ்வரர் கோயில், ஒடிசா

ஆள்கூறுகள்: 20°14′33.72″N 85°50′25.41″E / 20.2427000°N 85.8403917°E / 20.2427000; 85.8403917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தீசுவரர் கோயில், ஒடிசா
முக்தீஸ்வரர் கோயில், ஒடிசா is located in ஒடிசா
முக்தீஸ்வரர் கோயில், ஒடிசா
ஒடிசாவில் கோயில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:கோர்த்தா
ஆள்கூறுகள்:20°14′33.72″N 85°50′25.41″E / 20.2427000°N 85.8403917°E / 20.2427000; 85.8403917
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கட்டிடக்கலை


முத்தீசுவரர் கோயில் (Mukteshvara Temple) இந்திய மாநிலமான ஒடிசாவின் கோர்த்தா மாவட்டத்தில் உள்ள புவனேசுவரத்திற்கு அருகில், கலிங்கக் கட்டிடக்கலையில், கிபி10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், முத்தீசுவரருக்கு அர்பணிக்கப்பட்டதாகும். [1]

இக்கோயில் புவனேசுவரத்தில் உள்ள இலிங்கராசர் கோயில் மற்றும் இராசாராணி கோயில் போன்று கட்டப்பட்டதாகும்.[2] [3]

Ekamra Heritage Walk Mukteswar Temple Bhubaneswar2.jpg
தெற்கு கோபுரத்தின் கீர்த்திமுக சிற்பம்

சிறப்பு[தொகு]

ஒடிசா மாநிலத்தில் கலிங்கக் கட்டடக்கலையில் உள்ள கோயில்கள் கருவறை, முன் மண்டபம் (ஜக் மோகன்), நடன மண்டபம், போக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இக்கோயில் கருவறை, ஜக்மோகன் அமைப்புகளைக் கொண்டது. முன் மண்டபக்கூரையில் காணப்படுகின்ற சிற்ப வேலைப்பாடுகள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளதாகும். இக்கோயில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. கோயிலின் கிழக்குப் புறத்தில் மரீசி குண்டம் எனப்படுகின்ற கிணறு உள்ளது. கருவறையில் சிவபெருமான் சிறிய வடிவில் உள்ளார். நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். வாயிலின் மேற்பகுதியில கஜலட்சுமி உள்ளார். அதற்கும் மேற்புறத்தில் சூரியன் முதல் கேது வரையுள்ள நவக்கிரகங்கள் தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளனர். பொதுவாக ஒடிசாவில் உள்ள கோயில்களில் நவக்கிரகங்களின் வடிவங்களை நுழைவு வாயிலின் மேல் பகுதியில் அமைப்பது வழக்கமாகக் காணப்படுகிறது. [4]

கட்டிடக் கலை[தொகு]

வளைவு தோரணங்களுடன் கூடிய முக்தீஸ்வரர் கோயிலின் முகப்பு மண்டபமே இக்கோயில் கட்டிடக் கலையின் சிறப்பு அம்சமாகும்.[5] கோயிலின் தோரண வாயிலை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் குடிய பருத்த தூண்கள் தாங்கி நிற்கின்றன.[6]மண்டபத்தின் பாதைகளில் குரங்குகள், மயில்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. [7][8]கோயில் விமானங்கள் கூரான கொடுமுடிகளுடன் கூடியது. கோயில் சுற்றுச் சுவர்களில் விஷ்ணு, இலக்குமி, சரசுவதி, கணபதி, மற்றும் நடனப் பெண்டிர், யாழிகள் மற்றும் சிங்கங்களின் அழகிய சிற்பங்கள் உள்ளது. [9][7]

அமைவிடம்[தொகு]

புவனேசுவரம் நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Smith, Walter (1991). "Images of Divine Kings from the Mukteśvara Temple, Bhubaneswar". Artibus Asiae 51 (1/2): 90. doi:10.2307/3249678. 
  2. Smith, Walter (1994). The Mukteśvara Temple in Bhubaneswar. Delhi: Motilal Banarsidass Publishers Private Limited. பக். xix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0793-6. https://books.google.com/books?id=y0MQmNx8g2gC&pg=PR11&dq=muktesvara+temple&hl=en&sa=X&ei=Fov9UIaEPYnm9ASt64DIBw&ved=0CDkQ6AEwAQ#v=onepage&q=muktesvara%20temple&f=false. 
  3. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 175. https://archive.org/details/indiathroughages00mada. 
  4. சிற்பக்களஞ்சியம் ஒடிசா முக்தீசுவரர் கோயில், தினமணி, 6 செப்டம்பர் 2020
  5. "Bhubaneswar tourist attractions". Bhubaneswar Municipal Corporation. 2011-08-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-09-12 அன்று பார்க்கப்பட்டது.
  6. A history of fine art in India and Ceylon: from the earliest times to the present day. P.25. Vincent Arthur Smith.
  7. 7.0 7.1 "Bhubaneswar Mukteshvara Temple". Tourism Development Corporation of Odisha. 2007-09-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-09-12 அன்று பார்க்கப்பட்டது.
  8. Allen, Margaret Prosser (1991). Ornament in Indian Architecture. Associated University Press Inc.. பக். 206–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87413-399-8. https://books.google.com/books?id=vyXxEX5PQH8C&pg=PA207&dq=muktesvara+temple&hl=en&sa=X&ei=Fov9UIaEPYnm9ASt64DIBw&ved=0CEYQ6AEwAw#v=onepage&q=muktesvara%20temple&f=false. 
  9. Parmeshwaranand, Swami (2004). Encyclopedia of the Śaivism. Sarup & Sons. பக். 164–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7625-427-4. https://books.google.com/books?id=N4xIBNmhpXcC&pg=PA164&dq=muktesvara+temple&hl=en&sa=X&ei=Fov9UIaEPYnm9ASt64DIBw&ved=0CDQQ6AEwAA#v=onepage&q=muktesvara%20temple&f=false. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mukteshvara Temple
என்பதின் ஊடகங்கள் உள்ளன.